முரளிதரன் பந்து வீசுகிறார். பீல்டர்கள் தயாராக நில்லுங்கள் என்று சாஹலை கலாய்த்த தல தோனி – வீடியோ

msd

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

chahal

இந்த போட்டியில் சாஹல் பந்துவீச வந்தபோது தோனி குல்தீப் யாதவை பார்த்து முரளிதரன் பந்துவீச வந்திருக்கிறார். இடத்தில சென்று நில் என்று ஜாலியாக கலாய்த்தார். பிறகு குல்தீப் சிரித்துக்கொண்டே இடம் மாறி நின்றார்.

ஓடிவந்த சாஹல் அதைப்பார்த்து நின்று சிரித்துவிட்டு மீண்டும் பந்து வீசினார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் தோனி ரசிகர்கள் மூலம் வைரலாக பரவி வருகிறது. இதோ உங்களுக்காக அந்த இணைப்பு :

தோனியின் இதுபோன்ற குறும்பு செயல்கள் நிறைய இணையத்தில் இப்போது அடிக்கடி வலம் வருகின்றன. அப்படி வரும் அனைத்து வீடியோவும் இணையத்தில் ஹிட் அடிக்க தவறுவதில்லை.

இதையும் படிக்கலாமே :

நியூசி தொடரை அடுத்த ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித், தவான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு புதிய துவக்க ஜோடியாக இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் – ரவி சாஸ்திரி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்