அமெரிக்க விஞ்ஞானிகளை வாய் பிளக்கவைத்த நம் காயத்திரி மந்திரம்

manthiram-4

பொதுவாக மந்திரங்களின் சக்தி, அது ஏற்படுத்தும் அதிர்வலைகளை கொண்டே அறியப்படுகிறது. அந்த வகையில் நமது பாரத திருநாட்டில் உள்ள அனைத்து மந்திரங்களும் ஞானிகளாலும், சித்தர்களாலும் எழுதப்பட்டவை என்பதால் அவர்கள் தகுந்த ஆராய்ச்சிக்கு பின்னரே அதை எழுதியுள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளது. அதிலும் உலகத்தின் மிக சிறந்த மந்திரம் காயத்திரி மந்திரமே என்று அமெரிக்க ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. வாருங்கள் இது குறித்து பார்ப்போம்.

Manthraஅமெரிக்காவின் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் ஒன்றிணைந்து, உலக நாடுகள் பலவற்றில் உள்ள பல்வேறு மந்திரங்களை ஆய்விற்கு உட்படுத்தினர். அப்போது காயத்திரி மந்திரம் ஒலிக்கும்போது மட்டும் நொடிக்கு சுமார் 1,10,000 ஒலி அலைகளை எழுப்புவதை கண்டு அவர்கள் ஆச்சர்யப்பட்டுள்ளனர்.

தங்கள் ஆய்வின் முடிவில், காயத்திரி மந்திரமே அதிக ஓலி அலைகளை எழுப்பும் உலகின் தலை சிறந்த மந்திரம் என்பதை தெரிவித்தனர். இந்த ஆய்விற்கு பின்பு அமெரிக்காவின் பிரபல ரேடியோ ஸ்டேஷன் ஒன்றில் தினமும் இரவு 7 மணிக்கு தொடர்ந்து 15 நிமிடங்கள் காயத்திரி மந்திரம் ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

manthiram

காயத்ரி மந்திரம்:

ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்

manthiram

இதையும் படிக்கலாமே:
சுகப் பிரசவம் ஆக சொல்லவேண்டிய மந்திரம்

பொருள்:
மூவுலகத்திலும் மிகப்பெரிய சக்தியாய் விளங்கும் அந்த பரம ஜோதியை நாம் தியானிக்கின்றோம். அந்த பரம சக்தி நமது இருளை நீக்கி புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பதே இந்த மந்திரத்தின் பொதுப்பொருள்.