பிறருக்கு கொடுத்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்க இவற்றை செய்தால் போதும்

peppers

“கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என கம்பராமாயணத்தில் கம்பர் பாடியது அந்தக்காலம். தற்காலத்தில் கடன் கொடுத்தவர்கள் தான் நெஞ்சம் கலங்கி வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதிலும் குறிப்பாக நம் நாட்டில் சாதாரண மனிதன் தொடங்கி பெரும் தொழிலதிபர்கள் வரை பல தந்திரங்களை கையாண்டு, கடன் வாங்கிய பிறகு எங்காவது ஓடி விடுவது வாடிக்கையாக இருக்கிறது. அவர்களுக்கு கடன் கடன் கொடுத்தவர்கள் தான் உடல் மற்றும் மன உளைச்சலால் வேதனைப்படுகின்றனர். இப்படி பிறருக்கு பணத்தை கடனாக தொண்டு திரும்ப பெற முடியாமல் தவிப்பவர்களுக்காக சொல்லப்பட்ட பரிகார முறைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

money

“கடன் அன்பை முறிக்கும்” என்கிற பழமொழி எந்த அளவு உண்மை என்று கடன் வாங்கும் போதும், கொடுக்கும் போதும் மட்டுமே பலரும் உணர்கின்றனர். தனிமனித ஒழுக்கம், நேர்மை போன்றவை அரிதான விடயங்களாகிவிட்ட இக்காலத்தில் தங்களுக்கே பலவிதமான பொருளாதார கஷ்டங்கள் இருந்த போதும், கடன் கேட்பவருக்கு தங்களால் இயன்ற பணத்தை கடனாக கொடுக்கும் சில நல்ல மனிதர்கள் இருக்கவே செய்கின்றனர். ஆனால் கடன் கேட்பவர் கடன் வாங்கிய சில நாட்களிலேயே கடன் கொடுத்தவரை பற்றியும், வாங்கிய கடன் தொகை பற்றியும் முழுமையாக மறந்து விடுவவதை நம்மில் பலர் பார்த்திருப்போம். அவர்களிடம் சென்று கொடுத்த கடனை திரும்ப கேட்கும் போது இருவருக்கும் பிரச்சினைகள் ஏற்படுவது அன்றாடம் நாம் பார்க்கின்ற, கேள்விப்படுகின்ற ஒரு விடயமாக தற்காலத்தில் மாறிவிட்டது.

மேற்கூறிய பிரச்சனைகளை நம் வாழ்வில் சந்திக்காமல் இருப்பதற்கு சிறந்த வழி பிறருக்கு கடன் கொடுக்காமல் இருப்பது தான். அப்படியே கடன் கொடுப்பதாக இருந்தாலும் கடன் கேட்பவரின் பின்புலத்தை நன்கு ஆராய்ந்து, ஏதாவது ஒரு பொருளை பணயமாக வாங்கிக் கொண்டு கடன் கொடுப்பதே சிறந்தது. இவற்றையும் மீறி கடன் கொடுத்து, அந்த கடன் தொகை தங்களுக்கு திரும்ப வராமல் தவிக்கும் நபர்கள் சில பரிகாரங்களை செய்வதால் மிக விரைவிலேயே அவர்கள் கொடுத்த பணம் அவர்களுக்கே திரும்ப கிடைக்கச் செய்யும்.

salt

தாங்கள் பிறருக்குக் கொடுத்த பணம் தங்களுக்கு திரும்ப வந்து சேர வேண்டும் என நினைப்பவர்கள் சிறிதளவு கல் உப்பு,சிறிதளவு வெந்தயம் மற்றும் சிறிதளவு கருப்பு எள் ஆகிய மூன்றையும் எடுத்துக் கொண்டு ஒரு மிக்ஸியில் இந்த மூன்றையும் போட்டு நன்றாக பொடி பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு சிறிய தூய்மையான வெள்ளைத்துணியில் அந்த பொடியை கொட்டி, துணியை முடிந்து உங்கள் வீட்டில் கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

kaala bairavar

வாராக் கடனை நம்மிடம் மீண்டும் வரச் செய்யும் ஆற்றல் கொண்ட தெய்வமாக பைரவ மூர்த்தி இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோயிலில் இருக்கும் பைரவர் சந்நிதிக்குச் சென்று, சிறிதளவு தூய்மையான வெள்ளைத் துணியில் 27 கருப்பு மிளகுகளை போட்டு முடிந்து, ஒரு மண் அகல் விளக்கில் அந்த முடிச்சை திரியாக வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றி பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். தீபம் ஏற்றிய பிறகு அந்த தீபத்தை சுற்றி குங்குமத்தை போட வேண்டும். இந்த வழிபாட்டை மூன்று வாரங்களுக்கு செய்து வர நீங்கள் பிறருக்கு கொடுத்த பணம், பிறர் உங்களை ஏமாற்றி கடனாக வாங்கிய பணம் ஆகிய அனைத்தும் மீண்டும் உங்களிடம் வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே:
பல்லி நம் தலையில் விழுந்தால் என்ன பலன்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Getting back money in Tamil. It is also called as Kadan thirumba pera in Tamil or Bairavar valipadu in Tamil or Kodutha panam thirumba vara in Tamil or Kodutha kadan vara in Tamil.