நாம் என்றும் இளமையாகவும் அழகாகவும் திகழ வேண்டும் என்று நினைப்பவர்கள் இயற்கையாகவே கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அது நிரந்தர தீர்வைத் தரும். அந்த வகையில் இளமையாக தெரிய வேண்டும் என்பதற்காக பலரும் தங்களுடைய நரை முடியை கருமையாக்குவதற்காக ஹேர் டை பயன்படுத்துவார்கள். இந்த ஹேர் டை என்னதான் கெமிக்கல் இல்லாத ஹேர் டை ஆக வாங்கி உபயோகப்படுத்தினாலும் அதனால் பக்க விளைவுகள் என்பது கண்டிப்பான முறையில் உண்டாகும். அப்படி பக்கவிளைவுகள் அற்ற அதேசமயம் நல்ல கருமையான கூந்தலை பெறுவதற்கு இயற்கையாகவே தயார் செய்யக்கூடிய ஒரு ஹேர் டை இருக்கிறது. அந்த ஹேர் டை எப்படி தயார் செய்ய வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
இயற்கையான ஹேர் டை
இயற்கையாகவே கிடைக்கக்கூடிய பலவிதமான பொருட்களை பயன்படுத்தி பல முறைகளில் ஹேர் டை நம்மால் தயார் செய்ய முடியும். இந்த முறையில் தயார் செய்யும் பொழுது அது நம்முடைய தலையில் இருக்கக்கூடிய வெள்ளை முடியை கருமையாக மாற்றுவதற்கு சற்று காலங்கள் எடுத்துக்கொள்ளும். தொடர்ச்சியாக நாம் அதை பயன்படுத்த வேண்டும். அதேபோல் இதற்கு வழிமுறைகளும் சற்று அதிகமாகவே இருக்கும். அதனாலேயே பலரும் இயற்கையான ஹேர் டை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு செயற்கையான முறையில் ஹேர் டையை உபயோகப்படுத்துவார்கள். அப்படிப்பட்டவர்களும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஹேர் டை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த ஹேர் டை தயார் செய்வதற்கு ஆரோக்கியம் மிகுந்த ஒரு பூ வேண்டும். அந்த பூ தான் வாழைப்பூ சாதாரணமாக வாழைப்பூ கறை ஆடையில் பட்டுவிட்டால் அது போகவே போகாது என்று கூறி கேள்விப்பட்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட வாழைப்பூவை பயன்படுத்தி தான் நம் ஹேர் டை செய்ய போகிறோம். இதற்கு வாழைப்பூவின் மேல் புறத்தில் இருக்கக்கூடிய மடல்கள் மட்டும் இருந்தால் போதும். இந்த மடல்களில் நான்கு மடல்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதை சிறிது சிறிதாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த இந்த விழுதை வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை வாழைப்பூ மடல் அரைப்படவில்லை என்றால் கூடுதலாக கூட தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். இந்த ஹேர்டை தயார் செய்வதற்கு நமக்கு கண்டிப்பான முறையில் இரும்பு சட்டி வேண்டும். இரும்பு சட்டியை அடுப்பில் வைத்து நாம் எடுத்து வைத்திருக்கும் சாறை அதில் ஊற்ற வேண்டும். பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இது நன்றாக கொதித்து வெந்தயம் கருமை நிறம் அடைய வேண்டும்.
அந்த அளவிற்கு குறைந்த தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும். வெந்தயம், கருமை நிறம் அடைந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அப்படியே அதை ஆறவிடுங்கள். குறைந்தது ஒரு மணி நேரமாவது அது நன்றாக ஆரட்டும். பிறகு அதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஹேர்டை தயாராகிவிட்டது. இதை நம்முடைய தலைமுடியில் குளிப்பதற்கு முன்பாக தடவி அரைமணி நேரம் வைத்திருந்து பிறகு எப்பொழுதும் போல் ஷாம்பு போட்டு குளிக்கலாம். இப்படி நாம் செய்வதன் மூலம் தலையில் இருக்கக்கூடிய வெள்ளை முடிகள் கருமை ஆவதோடு வெந்தயம் மற்றும் காபித்தூளின் உதவியுடன் நம்முடைய தலைமுடி நன்றாக ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே:முகக் கருமையை நீக்கும் ஃபேஸ் பேக்
ஒருமுறை தயார் செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் கூட போதும். நாம் எப்பொழுதெல்லாம் தலைக்கு குளிக்கிறோமோ அப்பொழுதெல்லாம் இந்த ஹேர் டை பயன்படுத்தி நம்முடைய வெள்ளை முடியை நிரந்தரமாக கருமையாக மாற்ற முடியும். விருப்பம் இருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.