- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேலை கிடைக்க வாராஹி மந்திரம்

வேலை கிடைக்க வாராஹி மந்திரம்

- Advertisement -

ஆசைப்பட்ட வேலையை பெற வேண்டும் என்பதற்காக அதற்குரிய படிப்பை படித்து அதற்கான முயற்சிகளை மேற் கொண்டும் அதில் வெற்றி அடையாமல் ஏதாவது ஒரு தடைகள் ஏற்பட்டு தோல்வியை சந்தித்து கொண்டு இருப்பவர்கள், விடாமுயற்சியுடன் முயன்றும் கிடைக்கவில்லை என்ற விரக்திக்கு ஆளாகி ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து வாழ்க்கை நகர்த்துவோம் என்று நினைப்பார்கள். அப்படி விரக்தி நிலையை அடைந்தவர்கள் கூட வாராகி அம்மனை முழு மனதோடு நம்பி எந்த மந்திரத்தை உச்சரித்தால் அவர்கள் வேலை தொடர்பான கனவுகள் அனைத்தும் நிறைவேறும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

வராஹி மந்திர வழிபாடு

பொதுவாக வாராகி அம்மனை நாம் என்ன வேண்டுதலை வைத்து வழிபாடு செய்கிறோமோ அந்த வேண்டுதலை வரமாக கொடுத்து நமக்கு நன்மைகளை வாரி வழங்குவாள். அப்படிப்பட்ட வாராகி அம்மனிடம் முழுமனதோடு வேலை தொடர்பான பிரார்த்தனைகளை நாம் வைத்தால் அதுவும் நிறைவேறும். அப்படி வேலை தொடர்பான பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டும் என்றால் நாம் வாராஹி அம்மனை வழிபடுவதோடு அவளுக்குரிய மந்திரத்தையும் உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

இந்த மந்திரத்தை தொடர்ந்து 21 நாட்கள் உச்சரிக்க வேண்டும். 21 முறை உச்சரிக்க வேண்டும். வாராஹி அம்மனுக்கு உகந்த திதியான பஞ்சமி, அஷ்டமி போன்ற திதிகளில் ஆஆரம்பிக்கலாம். அப்படி இல்லை என்றால் வெள்ளிக்கிழமைகளில் ஆரம்பிக்கலாம் அல்லது தாங்கள் விரும்பிய வேலைக்கு நேர்காணலுக்காக செல்லும் தேதி தெரியும் பட்சத்தில் அந்த தேதிக்கு முன் 21 நாட்களுக்கு முன்பாக இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

இந்த வழிபாட்டை தங்களுடைய நேரத்தை பொறுத்து காலையிலோ மாலையிலோ மந்திரத்தை உச்சரிக்கலாம். முதல் நாள் எந்த நேரத்தில் உச்சரிக்கிறோமோ அதே நேரத்தில் தான் தொடர்ந்து 21 நாட்கள் உச்சரிக்க வேண்டும். மேலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது அசைவம் சாப்பிட்டிருக்கக் கூடாது. சுத்தமாக இருக்க வேண்டும்.

- Advertisement -

மந்திரத்தை உச்சரித்த பிறகு அசைவம் சாப்பிட்டுக் கொள்ளலாம். மறுநாள் தலைக்கு குளித்துவிட்டு தான் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் நாம் உச்சரிக்கலாம். கோவிலிலோ, வீட்டு பூஜை அறையிலோ அல்லது வீட்டின் வரவேற்பறை, மொட்டை மாடி என்று எந்த இடத்தில் வேண்டுமானாலும் நாம் உச்சரிக்கலாம். வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு உச்சரிக்க வேண்டும். அவ்வாறு அமரும் பட்சத்தில் தரையில் அமர்பவராக இருந்தால் ஒரு விரிப்பை விரித்து அதற்கு மேல் அமர்ந்து உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்
லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம் பாதுகாப்பாம் ஸ்வாஹா

இதையும் படிக்கலாமே எதிரிகள் தொல்லை நீங்க முருகன் வழிபாடு

வாராகி அம்மனை முழுமனதோடு நம்பி இந்த மந்திரத்தை தொடர்ந்து 21 நாட்கள் உச்சரிப்பவர்களுக்கு அவர்கள் வேலை தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் சரியாகி வளமான வாழ்க்கையை பெற முடியும்

சற்று முன்