முகத்திற்கு நெய் தடவினால் இதெல்லாமா நடக்கும்? சருமத்திற்கு நெய்யினால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன?

- Advertisement -

நெய்யில் ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன. விட்டமின் ஏ, டி, கே, ஈ போன்ற சத்துக்களும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிடும் காணப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் சருமத்தை மிருதுவாக்கவும் உதவுகிறது. அந்த வகையில் முகத்திற்கு நெய் தடவுவது நல்லதா? கெட்டதா? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பது போன்ற அழகு குறிப்பு சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.

விட்டமின் ஈ நெய்யில் அதிகம் காணப்படுகிறது. இது ஆன்ட்டி ஆக்சிடென்ட் என்பதால் இதில் சரும ஆரோக்கியமும், இருதய ஆரோக்கியமும் ஒளிந்துள்ளது. இதில் ஆன்டி இன்பிலாமெட்ரி ப்ராப்பர்ட்டீஸ் இருப்பதால் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. சருமத்திற்கு இது ஒரு வரப் பிரசாதமாகவே இருக்கிறது என்று கூறலாம்.

- Advertisement -

சருமத்தை சுருக்கங்களில் இருந்து பாதுகாக்க நெய் பயன்படுத்தலாம். இது சருமத்தை நெகிழ்வுத் தன்மையுடன் வைத்துக் கொள்ள உதவி செய்கிறது. தினமும் நெய்யை தடவி ஒரு பத்து நிமிடம் உலர விட்டு, பின் ஈரத் துணியில் துடைத்து எடுத்து முகத்தை கழுவினால் முகத்தை நீண்ட நாட்களுக்கு இளமையுடன் சுருக்கங்கள் இல்லாமல் வைத்துக் கொள்ளலாம். இது ஒரு ஆன்டி ஏஜிங் ப்ராபரிட்டியாக செயல்படுகிறது.

அடிக்கடி முகம் வறட்சியுடன் காணப்படுபவர்கள், சிறிதளவு நெய்யை தினமும் தடவி மசாஜ் செய்யலாம். இதனால் சருமத்திற்குள் ஆழமாக சென்று மிருது தன்மையையும், ஈரப்பதத்தையும் தக்க வைத்துக் கொள்ள உதவி செய்யும். வாரம் ஒருமுறை இது போல செய்தால் போதும், முகம் எப்பொழுதுமே வறட்சி இல்லாமல் ஈரப்பதமாக இருக்கும்.

- Advertisement -

தினமும் சிறிதளவு நெய்யை தடவி உலர விட்டு துடைத்து எடுத்தால், முகம் கருமை அடைவதை கூட தடுக்க முடியும். முகத்திற்கு நல்ல ஒரு நிறத்தை கொடுத்து சைனிங்காகவும், கண்ணாடி போல பொலிவுடன் மின்னவும் செய்யும். இதில் இருக்கும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் முகத்திற்கு ஈவன் டோன் கொடுக்கும். ஒரே மாதிரியான நிறத்தை முகத்திற்கு கொடுக்கக் கூடிய ஆற்றல் இதற்கு உண்டு.

சரும அலர்ஜி இருப்பவர்களும் நெய்யை அடிக்கடி முகத்தில் தடவி பயன்படுத்தலாம். இது அரிப்பு, அலர்ஜி, பருக்கள் போன்றவற்றுக்கு எதிராக செயல்பட்டு முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நெய்யை உதடுகளில் தடவினால் உதடுகள் கருப்பாக இருப்பதை தவிர்க்கலாம். மெல்ல மெல்ல நல்ல ஒரு பிங்க் நிறத்திற்கு உதடுகள் மாற ஆரம்பிக்கும். குறிப்பாக குளிர்காலத்தினால் ஏற்படும் உதடுகள் வெடிப்பிற்கு நெய்யை மெல்லியதாக தூங்குவதற்கு முன்பு சிறிதளவு தடவி விடலாம். இதனால் உதடுகள் மென்மையாகவும், மிருதுவாகவும் மாறக்கூடும். உதடுகள் மட்டும் அல்லாமல் கண்களை சுற்றி இருக்கும் கருவளையத்தை போக்கவும் நெய் பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:
அழகிய வில் போல வளைந்த நேர்த்தியான புருவங்களை பெற தினமும் இரவில் இதில் ஒரு சொட்டு மட்டும் தடவி வந்தால் போதும். அப்புறம் பாருங்க உங்க முக அழகே பல மடங்கு கூடி விடும்.

தினமும் கண்களுக்கு கீழே சிறிதளவு நெய்யை தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு இரவு முழுவதும் விட்டுவிட்டு மறுநாள் காலையில் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் விரைவாக கண் கருவளையம் நீங்கி இயல்பான நிறத்திற்கு மாற துவங்கும். மேலும் பல்வேறு சரும பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள நெய் உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று டீஸ்பூன் அளவிற்கு நெய் பெரியவர்கள் பயன்படுத்தலாம். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நெய் குடிப்பதால் ஏராளமான நன்மைகளும் உண்டு.

- Advertisement -