ஒரு கைப்பிடி புதினா இருந்தா கொஞ்சம் வித்தியாசமா இப்படி ஒரு முறை சட்னி செஞ்சு பாருங்க. இதுக்கு அப்புறம் எப்ப புதினா வாங்கினாலும் இப்படி தான் சட்னி அரைப்பீங்க.

Mint Chutney _ Tamil
- Advertisement -

சட்னி வகைகள் பல இருந்தாலும் கூட இந்த புதினா சட்னி ருசியாக இருப்பதுடன், உடலுக்கும் மிகவும் நல்லது. இது பசியை தூண்டி ஜீரண கோளாறை சரி செய்யக் கூடிய மருத்துவ குணமும் இந்த புதினாவிற்கு உண்டு. இந்த சட்னியை வாரம் ஒரு முறையாவது நாம் உணவில் சேர்த்துக் கொள்வது ருசியுடன் சேர்த்து உடலுக்கும் ஆரோக்கியமான ஒன்று. இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் புதினா சட்னியை கொஞ்சம் வித்தியாசமாக எப்படி அரைப்பது என்று தான் பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்

வெங்காயம் – 2, தக்காளி -2, பச்சை மிளகாய் – 3, இஞ்சி – 1 துண்டு, பூண்டு -4 பல், காய்ந்த மிளகாய் – 4, கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், புளி – சின்ன நெல்லிக்காய் அளவு, தேங்காய் துருவியது – 1/4 கப், எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன், புதினா – 1 கைப்பிடி அளவு, உப்பு – 1/2 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, புளி மூன்றையும் நன்றாக சிவந்து வரும்படி வதக்கிய பிறகு எண்ணெயிலிருந்து வடித்தெடுத்து இதை தனியாக ஒரு தட்டில் ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அதே கடாயில் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி அனைத்தும் சேர்ந்து பாதி அளவு வதங்கிய பிறகு தக்காளியை சேர்த்து அதையும் ஒரு முறை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். இத்துடன் புதினா சேர்த்து அதிகம் வதங்கி விடாமல் ஒரளவிற்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

இதற்குள்ளாக நாம் ஏற்கனவே வதக்கி வைத்த கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், புளியை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் ஒரு முறை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது கொஞ்சம் கொரகொரப்பாக அரைப்பட்டவுடன், இப்போது வதக்கி வைத்த வெங்காயம், தக்காளி, புதினா, தேங்காய், உப்பு எல்லாம் சேர்த்து இன்னும் ஒரு முறை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

கொஞ்சம் கொரகொரப்பாக இருந்தால் சட்னி சாப்பிட நன்றாக இருக்கும். அரைத்து எடுத்த பிறகு இதை ஒரு பவுலில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு தாளிப்பு தேவையில்லை உங்களுக்கு விருப்பம் இருந்தால் தாளித்து ஊற்றிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: மட்டன் வாங்கி கோலா உருண்டை செய்ய முடியலையா? அதே சுவையில் சைவ கோலா உருண்டை ருசி மாறாமல் இப்படி ஈசியா செஞ்சுதான் பாருங்களேன்!

சுவையான புதினா சட்னி நிமிடத்தில் ரெடி . சுடச்சுட இட்லி அவிழ்த்து அத்துடன் சாப்பிட இந்த சட்னி நன்றாக இருக்கும் அது மட்டுமில்லாமல் அடை,போன்றவற்றுக்கு கூட இந்த சட்னி நல்ல காம்பினேஷன் தான். நீங்களும் உங்கள் வீட்டில் இதை ட்ரை பண்ணி பாருங்க

- Advertisement -