கிரிக்கெட் : டைவ் அடித்து கேட்ச் பிடித்த ராகுல் அவுட் இல்லை என்று அவரே கூறிய நேர்மையான செயல் – வீடியோ

jadeja
- Advertisement -

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஏற்கனவே இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 622 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது குறிப்பிடத்தக்கது.

team

இரண்டாம் நாள் கடைசியில் 10 ஓவர்கள் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்களை குவித்து இருந்தது. இதனை அடுத்து இன்று ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்க்ஸை தொடர்ந்தது ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ஹாரிஸ் மற்றும் கவாஜா நிதானமாக ஆட்டத்தை தொடர்ந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் 15ஆவது ஓவரை ஜடேஜா வீச வந்தார் . முதல் பந்தினை நேராக தூக்கி அடித்தார் ஹாரிஸ். அந்த பந்து காற்றில் செல்ல இந்திய அணியின் வீரர் ராகுல் அதை காற்றில் பறந்தவாறு டைவ் செய்து கேட்ச் பிடித்தார். உடனே ஜடேஜா,கோலி ஆகியோர் விக்கெட் விழுந்தது என்று ஆர்ப்பரித்தனர். ஆனால், ராகுல் எழுந்து இது கேட்ச் இல்லை பந்து தரையில் பட்டுவிட்டது என்று நேர்மையாக கூறினார். இதனை களத்தில் இருந்த அம்பயர் பாராட்டினார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ராகுல் இது கேட்ச் இல்லை என்று சைகை செய்ததும் கோலி மட்டுமின்றி இந்திய வீரர்கள் அனைவரும் விக்கெட் கொண்டாட்டத்தினை நிறுத்தினர். இந்திய வீரர்களின் இந்த செயல் ரசிகர்களால் பாராட்டை பெட்ரா வண்ணம் உள்ளது. இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களை குவித்துள்ளது. இன்னும் 386 ரன்கள் பின்தங்கி இருக்கும் ஆஸ்திரேலிய அணி தொடரை சமன் செய்யும் வாய்ப்பு முற்றிலும் பறிபோனது என்றே கூற வேண்டும்.

இதையும் படிக்கலாமே :

கிரிக்கெட் : தோனியை காட்டிலும் சிறந்த வீரராக பண்ட் வலம் வருவார் – பாண்டிங்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.

- Advertisement -