பெண்களை தவறாக பேசியவன் தானே நீ.நியூஸியில் முடிந்தால் என் வீட்டிற்கு வந்து பார் – பாண்டியவை கடுமையாக சாடிய பெண் – பேனர் உள்ளே

pandya 1

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நேற்று ஆக்லாந்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 158 ரன்களை அடித்தது. நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

hardik

அடுத்து ஆடிய இந்திய அணி எளிதாக சேசிங் செய்து வென்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 50 ரன்களும், பண்ட் 40 ரன்களும் அடித்தனர். குருனால் பாண்டியா சிறப்பாக பந்துவீசி 28 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆட்டநாயகன் விருதை குருனால் பாண்டியா தட்டி சென்றார்.

இந்நிலையில் நேற்று போட்டி நடந்த ஆக்லாந்து மைதானத்தில் வந்த இந்திய ரசிகர்களில் ஒரு பெண் காட்டிய பேனர் வைரலாகி வருகிறது. சில வாரத்திற்கு முன் பெண்களை விமர்சித்த பாண்டியாவை விமர்சித்து கையில் ஒரு பதாகையை ஏந்தியபடி நின்று பாண்டியாவிற்கு எதிராக கோஷம் எழுப்பினார். இதோ அந்த பேனர் :

Banner

அந்த பேனரில் பாண்டிய “ஆஜ் கார்கே ஆயா கியா” என்று எழுதி இருந்தது. அப்படி என்றால் என் வீட்டிற்கு வரியா என்ன என்று அர்த்தம். பெண்களை தவறாக பேசியதால் முடிந்தால் வந்து பார் என்பது போல அவர் கோஷம் எழுப்பினார்.

இதையும் படிக்கலாமே :

நானும் உங்களை நோக்கி வருகிறேன் – தோனி மற்றும் கோலியை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த ரோஹித் சர்மா

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்