ஒரே இரவில் உங்க முகம் பளிச்சுன்னு மாற இந்த பேக் ட்ரை பண்ணுங்க. அட்டை கருப்பாக இருக்கவங்க கூட அழகு தேவதையா மாறிடுவாங்கன்னா பாருங்களேன்.

face beauty
- Advertisement -

கருப்பாக உள்ளவர்களுக்கு நாமும் மற்றவர்களை போல் நிறமாக இல்லையே என்ற வருத்தம் எப்போதும் இருக்கவே செய்யும். ஒரு சிலருக்கு இதனால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு மன உளைச்சலுக்கு கூட ஆளாக்கி விடுவார்கள். அந்த அளவிற்கு நாம் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டோம். இந்த அழகு குறிப்பு பதிவில் மிக மிக எளிமையான முறையில் நல்ல கருமை நிறத்தில் இருப்பவர்கள் கூட ஒரே முறை உபயோகித்து நல்ல மாற்றத்தை பெற கூடிய ஒரு எளிமையான குறிப்பை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இது வரைக்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி முடி வளர எத்தனையோ அழகு குறிப்புகளை பார்த்திருப்போம். இப்போது தேங்காய் எண்ணெய் வைத்து முகத்தை பளபளப்பாகவும், நல்ல நிறமாகவும் மாற்றுவது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கருப்பாக இருக்கும் முகத்தை வெள்ளையாக மாற்ற பேஸ் பேக்:
இந்த ஃபேஸ் பேக்கை தயாரிக்க ஒரு பவுலில் முதலில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு, கால் டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு டீஸ்பூன் கெட்டி தயிர், கால் ஸ்பூன் காபி பவுடர், இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு குறைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட் மிகவும் கெட்டியாக இருந்தால் கொஞ்சமாக ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதில் சேர்த்து இருக்கும் அரிசி மாவு உங்கள் முகத்திற்கு நல்ல ஒரு ஸ்க்ரப்பிங் ஏஜென்ட் ஆக இருக்கும். அது மட்டும் இன்றி மஞ்சள் ஸ்கிப்பிங் செய்யும் போது நம்முடைய முக துவாரத்தினுள் சென்று உள்ளிருக்கும் பாக்டீரியாக்கள், அழுக்கு போன்றவற்றை வெளியேற்றும். இத்துடன் கலக்கும் எண்ணையானது முகத்திற்கு நல்ல ஒரு ஈரப்பதத்தையும் தரும். தயிர்,காபி பவுடர் இவை இரண்டும் முகத்தில் உள்ள அழுக்கை எல்லாம் நீக்கி முகத்தின் நிறத்தை கூட்ட உதவும். இதில் இருக்கும் ரோஸ் வாட்டர்க்கு முகத்தை நல்ல மிருதுவாக்கக் கூடிய தன்மை உண்டு.

- Advertisement -

இவை எல்லாம் சேர்த்து ஒரு பேஸ்ட் பதத்திற்கு குழைத்த பிறகு, உங்கள் முகத்தை சுத்தம் செய்த பின் இந்த பேக்கை உங்கள் முகத்தில் தடவி செய்து 30 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு முகத்தை வட்டமாக தேய்த்து அதாவது கீழிருந்து மேலாக சுழற்றி ஐந்து நிமிடம் மசாஜ் செய்த பிறகு முகத்தை நல்ல சுத்தமான தண்ணீர் கொண்டு அலம்பி விடுங்கள். உங்கள் முகத்தில் முகப்பருக்கள் அதிகமாக இருந்தால் இந்த மசாஜ் முறையை செய்ய வேண்டாம்.

இதையும் படிக்கலாமே: அந்த காலத்து பயிறு பொடி இப்படி செஞ்சு வச்சுக்கோங்க, இனி ஒரு முடி கூட வேரோட கொட்டவே கொட்டாது! நல்லா புசுபுசுன்னு கொத்தா முடி வளரும்.

இதை இரவில் படுக்கும் முன்பு செய்த பிறகு முகம் அலம்பிய பிறகு உறங்கி விடுங்கள். மறு நாள் காலையில் பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உங்கள் முகத்தில் உள்ள கருந்திட்டுகள், வெயிலினால் ஏற்பட்ட கருமை நிறம் போன்றவை எல்லாம் மறைந்து உங்கள் முகம் நல்ல பொலிவாக மாறி இருக்கும். இதை தொடர்ந்து செய்து வரும் போது உங்களுடைய நிறம் நன்றாக மாறி வரும் அதிசயத்தை நீங்களே உணர்வீர்கள்.

- Advertisement -