பொலிவிழந்த முகத்தை பளிச்சென்று மாற்ற பேஸ் பேக்

cream face
- Advertisement -

இப்போதுள்ள காலக்கட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு என்பது கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டாலே நம்முடைய சருமம் பெருமடைவில் பாதிப்படைய தொடங்கி விடுகிறது. இதனால் முகத்தில் தேவையில்லாத அழுக்குகள் சேர்ந்து சருமத்தில் பலவிதமான பிரச்சனைகள் உருவாகி சரும அழகு கெட்டுப் போகிறது.

இதை சரி செய்ய எத்தனை விதமான சோப்பு கிரீம்களை பயன்படுத்தினாலும் சில மணி நேரத்திற்கு மட்டுமே அது தாக்குப் பிடிக்கிறது. நிரந்தரமாக இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு வேண்டும் எனில் அழகு குறிப்பு குறித்த இந்த பதிவில் உள்ள பேக்கை பயன்படுத்துங்கள் நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -

முகம் பிரகாசமாக ஜொலிக்க

முகத்தில் சேரும் அழுக்குகளை சுத்தம் செய்ய வெறும் சோப்பு, கிரீம்களை பயன்படுத்துவதால் மட்டுமே சரியாகாது. சருமத்தின் உள்ளே உள்ள துளைகளில் படிந்திருக்கும் அழுக்குகளையும் மொத்தமாக வெளியேற்றினால் தான் புதிய செல்கள் உருவாகி முகம் பிரகாசமாகவும், ஆரோக்கியமாகவும் ஜொலிக்கும். அது மட்டுமின்றி நீண்ட காலம் இளமையாகவும் இருக்க முடியும்.

ஃப்ரூட்ஸ் ஃபேஸ் மாஸ்க்

முகப்பொலிவை அதிகரிப்பதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்களைக் கொண்டு பேக் போடும் போது அதில் உள்ள விட்டமின்கள் கனிம சத்துக்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் நீண்ட காலம் பொலிவுடன் இருக்க உதவி புரியும்.

- Advertisement -

பழ பேஸ் மாஸ்க் தயார் செய்ய பப்பாளி மாம்பழம் இரண்டு பழங்களையும் தோல்களை நீக்கி சதைப் பகுதியை மட்டும் சமமாக எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் தயிர் கலந்து நன்றாக பேஸ்ட் போல குழைத்து முகத்தில் தேய்த்து அரை மணி நேரம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு சுத்தமான தண்ணீரால் கழுவுங்கள். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வாருங்கள் முகம் பிரகாசமாக இருக்கும்.

முல்தானி மெட்டி மாஸ்க்

முல்தானி மெட்டி என்பது ஒரு வகை மண் தான். இது பழங்கால முதலே சரும அழகிற்காக பயன்படுத்தி வருகிறோம். இந்த முல்தானி மெட்டியால் இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொண்டு அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட்டாக தயார் செய்து கொள்ளுங்கள். இதை முகத்தில் தேய்த்து 20 நிமிடம் வரை வைத்திருந்து அதன் பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை கழுவுங்கள். இதையும் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.

- Advertisement -

கற்றாழை மாஸ்க்

பெரும்பாலான வீடுகளில் இன்று கற்றாழை வளர்க்கப்படுகிறது ஆகையால் இது ஒரு எளிமையான ஃபேஸ் பேக் முறை என்றே சொல்லலாம். இந்த கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு மஞ்சள் தூள் தேன் சேர்த்து குழைத்துக் கொள்ளுங்கள். இதை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை சுத்தம் செய்யுங்கள். இந்த பேக்கை இரவு உறங்கும் முன் போடுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: பொலிவான சருமத்தை பெற ஃபேஸ் பேக்

முகத்தின் அழகை பாதுகாக்கவும் நீண்ட நாட்கள் இளமையை தக்க வைத்துக் கொண்டு ஆரோக்கியத்துடனே இருக்கவும் இது போன்ற இயற்கையான முறைகளை பின்பற்றுவது தான் சிறந்த வழி. இந்த மூன்று முறைகளில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து பயன்படுத்தி உங்களுடைய சரும அழகை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -