ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ வழிபாடு

sivan2
- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை அன்று வரக்கூடிய இந்த பிரதோஷத்தை ரவி பிரதோஷம் என்று சொல்லுவார்கள், ராகுகால பிரதோஷம் என்றும் சொல்லுவார்கள். ரவி என்றால் சூரிய பகவானை குறிக்கக் கூடியது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை ராகுகால நேரத்தோடு சேர்ந்து, பிரதோஷ நேரம் வந்திருப்பதால், இந்த பிரதோஷத்தை ராகுகால பிரதோஷம் என்றும் சொல்லுவார்கள்.

நல்ல வேலை கிடைக்க, அரசாங்க வேலை கிடைக்க, நவகிரக தோஷத்தில் இருந்து விடுபட, இன்றைய தினம் செய்ய வேண்டிய பிரதோஷ வழிபாட்டை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இன்று மாலை உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் ஆலயங்களுக்கு செல்லுங்கள்.

- Advertisement -

அங்கு பிரதோஷ நேரத்தில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெறும். அந்த பூஜையில் கலந்து கொள்ளவும். சிவபெருமானுக்கு இளநீர் வாங்கி கொடுத்து, அபிஷேகம் செய்தால் உங்கள் வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்க வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். இது தவிர உங்கள் கையால் வில்வ இலை வாங்கி கொடுக்கலாம் அரளி பூ வாங்கி கொடுக்கலாம்.

இந்த பிரதோஷ நேரத்தில் நவகிரக சன்னிதானத்தில் இருக்கக்கூடிய நவகிரகங்களையும் வழிபாடு செய்ய வேண்டும். இதனால் உங்களுக்கு ஜாதக கட்டத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. சூரிய திசை நடப்பவர்கள், ராகு கேதுவால் பிரச்சனைகளை அனுபவிப்பவர்கள், சனிதோஷம் உள்ளவர்கள் எல்லாம் இந்த வழிபாட்டை மறக்காமல் செஞ்சுருங்க

- Advertisement -

இன்று பச்சரிசி, வெள்ளம், செவ்வாழை இந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து உருட்டி உங்கள் கையால் பசு மாட்டிற்கு சாப்பிட கொடுத்தால் உங்கள் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. கொஞ்சம் பச்சரிசியை தண்ணீரில் போட்டு மூன்று மணி நேரம் ஊற வைத்து விடுங்கள்.

அதில் இருக்கும் தண்ணீரை எல்லாம் வடித்து விட்டு அதில் வாழைப்பழம் வெள்ளம் போட்டு உங்கள் கையாலேயே பிசைந்து பசு மாட்டிற்கு கொடுத்து விடுங்கள். கோவிலில் இருக்கும் பசு மாட்டிற்கு இந்த தானத்தை செய்வது சிறப்பு. கோவிலில் கோசாலை இல்லை என்றால் உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் எந்த ஒரு பசு மாட்டு வேண்டும் என்றாலும் இந்த தானத்தை நீங்கள் செய்யலாம்.

- Advertisement -

பிரதோஷ நேரத்தில் சிவன் ஆலயத்தில் கூட்டம் இல்லாத தனியாக இருக்கும் ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். கண்களை மூடி சிவபெருமானை மன கண்களால் நினைத்துக் கொண்டு ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை மனதார உச்சரியுங்கள். கோவிலில் இருக்கும் கூட்டத்தில் அடித்துப் பிடித்து நீங்கள் சிவபெருமானை பார்க்க வேண்டும் என்ற கட்டாயமே இல்லை.

இதையும் படிக்கலாமே: கணவன் மனைவி மனஸ்தாபம் நீங்க பரிகாரம்

இப்படி கோவிலில் அமைதியாக அமந்து நமசிவாய மந்திரத்தை சொன்னால், அந்த சிவபெருமான் உங்களை பார்த்து விடுவார். அது போதாதா நமக்கு. மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -