இரவில் தெய்வ சிலைகள் பேசிக்கொள்ளும் அமானுஷ்ய கோவில்

0
301
Durgai Amman

இந்தியாவில் உள்ள கோவில்கள் பலவற்றில் அவ்வப்போது சில அதிசயங்கள் நிகழ்வது வழக்கம் தான். அந்த வகையில் பீகாரில் உள்ள ஒரு கோவிலில் தெய்வத்தின் சிலைகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் அதிசயத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

kali temple

பீகாரில் உள்ள பாஸ்டர் என்னும் நகரத்தில் உள்ளது ராஜ ராஜேஸ்வரி திரிபுர சுந்தரி கோவில். கிட்டதட்ட 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவில் தாந்ரிகங்களுக்கு பேர்போனது. இந்த கோவில்  காளி, தூமாவதி, பகுளாமுகி, புவனேஸ்வரி என 11 அவதாரங்களில் துர்கை அம்மன் காட்சி தருகிறாரகர்.

Amman

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதும் இந்த கோவிலில், இரவு நேரங்களில் பலவிதமான அமானுஷ்ய குரல்கள் வருவதை பக்தர்கள் அவ்வப்போது கேட்டுள்ளார்.

Amman

இந்த மர்மகுரல்கள் கருவறைக்கு வெளியில் இருந்து வருவதாகவும் அதனால் கருவறைக்கு வெளியில் இருக்கும் தெய்வங்களான பகுளாமுகி, தாரா, படுக் பைரவர், தாத்தாத்ரேய பைரவர், அன்னபூர்ண பைரவர், கால பைரவர், மாங்காண்டி பைரவர் போன்ற தெய்வங்களின் சிலைகள் ஒன்றோடொன்று பேசிக்கொள்வதாக நம்பப்படுகிறது.

தந்திரங்களுக்கும் அமானுஷ்யங்களுக்கும் பேர்போன இந்த கோவிலில் இப்படி ஒரு அதிசயம் நிகழ்வது எப்படி என்று யாராலும் அறியமுடியவில்லை. அதோடு உக்கிர தெய்வங்கள் பல உள்ளே இருப்பதால், இரவு நேரத்தில் இதுபோன்ற அமானுஷ்யங்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது என பலரும் ஆணித்தரமாக நம்புகின்றனர்.