இந்த கோதுமை அப்பம் செய்ய வெறும் 10 நிமிடங்களே போதும். சுவையான சூப்பரான கோதுமை அப்பம் எப்படி செய்வது பார்த்து விடலாமா?

gothumai-appam

சில பேருக்கு அப்பம் செய்தால் சரியான பக்குவத்தில் வராது. அப்பமானது கல்லு போல் ஆகிவிடும். அப்படியில்லையென்றால் எண்ணெயில் பிரிந்து போய் விடும். இந்த இரண்டு பிரச்சனையும் வராமல் சுலபமான முறையில் அவ்வளவு சாஃப்டாக, ஒரு கோதுமை அப்பம் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குழந்தைகளுக்கு சட்டுனு 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட் ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும், நாவிற்கு சுவையாக இருக்கும். உங்கள் குழந்தைகள் நிச்சயம் விரும்பி சாப்பிடும் ஒரு ரெசிபி இது.

gothumai-appam3

கோதுமை அப்பம் செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1 கப், பாகு வெல்லம் – 1/2 கப், சோடா உப்பு – 1/4 ஸ்பூன், ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன்.

Step 1:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, பொடித்த 1/2 கப் வெல்லத்தை சேர்த்து, 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி, அந்த வெல்லம் நன்றாக கரையும் வரை சூடு படுத்தினால் போதும். பாகு வெல்லம் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. சாதாரண வெள்ளத்திலும் செய்து கொள்ளலாம். பாகு வெல்லத்தில் செய்யும்போது சுவை இன்னும் அதிகரிக்கும்.

gothumai-appam4

Step 2:
அடுத்தபடியாக ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் அளவு கோதுமை மாவை சேர்த்து விட்டு, தயாராக இருக்கும் வெல்ல கரைசலை வடிகட்டி, கோதுமை மாவில் ஊற்றிக் கொள்ளுங்கள். வெல்லக் கரைசலோடு கோதுமை மாவை கட்டி பிடிக்காமல், நன்றாக கரைத்து விட்டு, தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு கரைக்க வேண்டும். இறுதியாக 1/4 ஸ்பூன் ஏலக்காய் தூள், 1/4 ஸ்பூன் சோடா உப்பு, ஒரு சிட்டிகை உப்பு போட்டு நன்றாக கரைத்து 15 நிமிடங்கள் வரை இதை மூடி ஊறவைத்துவிட வேண்டும். (சோடா உப்பு வேண்டாம் என்பவர்கள் தவிர்த்துக் கொள்ளலாம். சோடா உப்பு போட வில்லை என்றால், அப்பம் பெரியதாக உப்பி வராது.)

- Advertisement -

இதே அப்பத்தை சில பேர் வெள்ளை நிறத்திலும் செய்வார்கள். இதே அளவு கோதுமை மாவில், வெல்லத்திற்கு பதிலாக, வெள்ளை சர்க்கரை சேர்த்தும், இந்த அப்பத்தை சுடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

gothumai-sugar-appam

Step 3:
அகலமான பேன் இருந்தால், அதில் நிறைய எண்ணெயை ஊற்றி, நன்றாக சூடு ஆன பின்பு, அடுப்பை சிம்மில் வைத்து விட்டு சிறிய குழி கரண்டியில், அரை குழிக்கரண்டி அளவு மாவை எடுத்து, அப்படியே எண்ணெயில் ஊற்ற வேண்டும். 30 வினாடிகள் கழித்து, அப்பத்தை திருப்பிப் போட்டு பொன்னிறம் வரும் அளவிற்கு சிவக்க வைத்து எடுத்தால் சூப்பரான அப்பம் தயாராகி இருக்கும்.

gothumai-appam1

உங்களுடைய வீட்டில் கடாய் தான் இருக்கின்றது என்றால், அதில் ஒவ்வொரு அப்பமாக பக்குவமாக ஊற்றி எடுத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் குழிப்பணியாரக் கல்லில், குழி நிரம்ப எண்ணையை ஊற்றி, பெரிய ஸ்பூனில் மாவு எடுத்து, அதில் சிறிய சிறிய பணியாரங்களாக விட்டும் சிவக்க வைத்து எடுத்து சாப்பிடலாம். என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

gothumai-appam2

நீங்கள் இந்த அப்பத்துக்கு மாவு கரைக்கும் போது மட்டும், கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். இட்லி மாவு பதத்திற்கு கரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். மாவு கொஞ்சம் கெட்டியாக இருந்தாலும் உள்ளே வேகாத மாதிரி இருக்கும். ரொம்பவும் தண்ணிர் ஆகிவிட்டால், அப்பம் பிரிந்து போகிவிடும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால், உங்களுடைய வீட்டில் இன்னைக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ்கு ட்ரை பண்ணி பாருங்களேன்.

இதையும் படிக்கலாமே
பேக்கரி ‘பன்’ இவ்வளவு சுலபமாக நம்ம வீட்டிலேயே செய்ய முடியுமா? அது எப்படி! நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.