அட, கோதுமை மாவு மட்டும் இருந்தா, இந்த பிஸ்கட்டை நம்ம வீட்லயே இவ்வளவு ஈசியா செஞ்சிடலாமா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

- Advertisement -

கடைகளிலெல்லாம் மைதா மாவு கலந்து செய்யும் இந்த சர்க்கரை கஜுராவை, நம்முடைய வீட்டில் வெறும் கோதுமை மாவு வைத்து செய்ய முடியும். அதுவும் ரொம்ப ரொம்ப ஈசியா! குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த கோதுமை மாவு பிஸ்கட், எப்படி செய்யலாம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நிறைய பேர் இதில் மைதா சேர்த்து செய்வார்கள். மைதா தேவையே கிடையாது. கடையில் கிடைக்கக் கூடிய அதே சுவை நாம் செய்யும், இந்த கோதுமை ஸ்வீட் பிஸ்கட்டிலும் கிடைக்கும். ரெசிப்பிய பாத்திரலாமா?

wheat

கோதுமை பிஸ்கட் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
step 1:
கோதுமை மாவு – 1 கப், சர்க்கரை – 1/2 கப்பிற்கும் குறைவு, வெண்ணை – 2 டேபிள்ஸ்பூன், ஒரு சிட்டிகை உப்பு, பிஸ்கட் பொரித்து எடுக்க தேவையான அளவு எண்ணெய். மாவு பிசைவதற்கு தேவையான அளவு தண்ணீர்.

- Advertisement -

கோதுமை மாவை எந்த ஆழாகில் அளந்து எடுத்துக் கொள்கிறார்களோ, அதே ஆழாகில், 1/2 ஆழாக்குக்கு, கீழே சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும். கோதுமை மாவு 1கப், சர்க்கரை 1/2 கப் எடுத்துக் கொண்டால், இனிப்பு கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த கோதுமை பிஸ்கடுக்கு இனிப்பு கொஞ்சம் குறைவாக இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 1/2 கப் அளவு சர்க்கரை போட்டு, அதிலிருந்து ஒரு கைப்பிடியை எடுத்து, சர்க்கரையின் அளவை விடுங்கள். சரியாக இருக்கும்.

sugar

step 2:
இந்த சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான பௌலில், கோதுமை மாவு போட்டு, அதோடு அரைத்த சர்க்கரையும் சேர்த்து, கைகளால் நன்றாக கலந்து விட்டு விடுங்கள். 2 டேபிள் ஸ்பூன் அளவு வெண்ணெய் ஊற்றி, நன்றாக பிசைந்து விட வேண்டும். தேவைப்பட்டால் ஏலக்காய்ப் பொடியும் சேர்த்து கொள்ளலாம்.

- Advertisement -

அதன் பின்பாக, ஒரு சிட்டிகை உப்பு போட்டு, தண்ணீர் தெளித்து விரல்களாலே சாஃப்டாக மாவை பிசைந்து கொடுக்க வேண்டும். இந்த மாவை பதினைந்தில் இருந்து இருபது நிமிடங்கள் வரை ஒரு மூடி போட்டு ஊறவைத்து விடுங்கள். அதன் பின்பு சிறு சிறு உருண்டைகளாக, சப்பாத்தி உருண்டைகள் போல், உருட்டி கொண்டு, சப்பாத்தி பலகையில் போட்டு, கொஞ்சம் தடிமனாக தேய்த்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

gothumai-biscut

step 3:
அதன்பின்பு, அகலமான கடாயை அடுப்பில் வைத்து, பிஸ்கட் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, நன்றாகக் காய வைத்து விட வேண்டும். அதன் பின்பு அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, தயாராக இருக்கும் பிஸ்கட் மாவுகளை எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்க வேண்டியதுதான்.

- Advertisement -

gothumai-biscut1

பிஸ்கட்டுகளை கொஞ்சம் தடிமனாக இருப்பதால், உள்ளே நன்றாக வெந்திருக்க வேண்டும். மேலே கருகாமலும் இருக்க வேண்டும். பக்குவமாக பொரித்து எடுக்க வேண்டியது நம் கையில்தான் உள்ளது. இந்த பிஸ்கட்டை நன்றாக ஆற வைத்து விட்டு, அதன் பின்பு சுவைத்துப் பாருங்கள்.

gothumai-biscut3

மொறுமொறுவென்று கடையில் கிடைக்கும் அதே கோதுமை பிஸ்கட்டின் சுவை, நம் வீட்டில் செய்த இந்த பிஸ்கட்டிலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில், ஆரிய பிஸ்கட்டுகளை சேகரித்து வைத்துக் கொண்டால், ஒரு வாரம் வரை கூட வைத்து சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே
இப்படி ஒரு சட்னியா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே! இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, எதற்கு வேண்டுமென்றாலும் சைட் டிஷ் ஆக வச்சுக்கலாம்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -