மொறு மொறு கோதுமை தோசையை எப்படி செய்வது? சின்ன சின்ன டிப்ஸ் உங்களுக்காக!

மாவு ஆட்டாமல், ஆரோக்கியமான தோசை செய்ய முடியும் என்றால், அதில் கோதுமை தோசையும் அடங்கும். குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த கோதுமை தோசையை அதிகமாக சாப்பிடலாம். உங்கள் வீட்டில் அடிக்கடி கோதுமையை வைத்து, தோசை செய்பவர்களாக இருந்தால், இந்த பதிவில் குறிப்பிடப்படும் குறிப்புகள் உங்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும். இந்த கோதுமை தோசையை, உங்கள் வீட்டு குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு   மொறு மொறு கோதுமை தோசை எப்படி செய்வது தெரிந்து கொள்ளலாமா?

gothumai-dosa

கோதுமை தோசை செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1 கப்
ரவை – 1 1/2 கப்
பச்சரிசி மாவு – 1/2 கப்
தேவையான அளவு உப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் தயிர்.

எந்த கப்பில் கோதுமை அளக்கிறீர்களோ, அதே கப்பில் மற்ற பொருட்களையும் அளந்து கொள்ள வேண்டியது அவசியம். முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு, அதில் 1 1/2 கப் ரவையை சேர்த்து, 2 ஓட்டு ஓட்டிக் கொள்ள வேண்டும். மிகவும் நைசாக அரைக்க வேண்டாம். அரைத்த இந்த ரவை மாவை, ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளுங்கள். அரைத்த ரவை யோடு, 1 கப் கோதுமை மாவு, 1/2 கப் பச்சரிசி மாவு, தேவையான அளவு உப்பு, புளித்த தயிர் ஒரு டேபிள்ஸ்பூன், ஊற்றி எல்லாவற்றையும் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

ravai

இந்த மாவை ஒரு 1/2 மணி நேரம் ஊறவைத்து விடுங்கள். அதன் பின்பு தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து விட்டு, தோசை ஊற்றி, மெல்லிசாக தேய்த்துவிட வேண்டும். இந்த தோசையை திருப்பிப் போட வேண்டாம். ஒரு மூடி போட்டு ஆப்பம் வேகவைப்பது போல், ஒரு பக்கம் சிவக்க வைத்தும் சாப்பிடலாம். உங்களுக்கு தேவைப்பட்டால் இரண்டு பக்கம் தோசையை சிவக்க வைத்தும் சாப்பிடலாம். உங்கள் வீட்டு கோதுமை தோசையை ஒருமுறை இப்படி சுட்டு பாருங்கள்!

- Advertisement -

எந்த தோசையாக இருந்தாலும், சிவக்கும் போது அடுப்பை வேகமாக வைத்துக்கொள்ளுங்கள். தோசை ஊற்றும் போது, அடுப்பை சிம்மில் வைத்து விட்டுத்தான் தோசை ஊற்ற வேண்டும். குறிப்பாக கோதுமை தோசையை அதிக சூடான கல்லில் ஊற்றி விட்டீர்கள் என்றால், நைசாக தேய்க்க வராது என்பது குறிப்பிடத்தக்கது.

crispy-dosa

இந்த கோதுமை தோசைக்கு, தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். அதே சமயம் 6 வர மிளகாய்களை மிக்ஸியில் போட்டு, 10 பல் பூண்டு போட்டு, சின்ன துண்டு புளி வைத்து, கல்லுப்பு போட்டு, ஒரு ஓட்டு ஓட்டி விட்டீர்கள் என்றால், மிளகாய் சட்னி கிடைக்கும். நறநற பதத்தில் அரைத்து எடுத்துக்கொண்டு, இந்த மிளகாய் சட்னியில், கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த கோதுமை தோசையை தொட்டு சாப்பிட்டால், மிக மிக சுவையாக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் ஒரு முறை, உங்கள் வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்! சுலபமான முறையில் சுவையாக சமைத்து சாப்பிட்டால் சந்தோஷம் தானே!

இதையும் படிக்கலாமே
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு செய்ய, ஒரு ரகசிய டிப்ஸ்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.