நாம் தினம்தோறும் அணிந்திருக்கும், அழுக்குப் படிந்த, தங்க நகைகளை சுலபமாக எப்படி சுத்தம் செய்வது?

Nagai sutham seivadhu

எப்போதுமே நம்முடைய உடலில் அணிந்து கொண்டிருக்கும் கம்மல், செயின், வளையல், பிரேஸ்லெட் இவைகள் சீக்கிரமாகவே அழுக்குப் படிந்துவிடும். சூடு உடம்பாக இருந்தால், சீக்கிரம் கருப்பாக மாறிவிடும். இதுமட்டுமல்லாமல் கழுத்தில் போட்டிருக்கும் செயினில், மஞ்சள் கரை, பவுடர் திட்டு, அதிகமாக படிந்து, அதன் நிறம் மங்கி இருக்கும். இதை அப்படியே அணிந்து கொண்டிருந்தால், தங்க நகை எடுப்பாக இருக்காது. மங்கலாகக் காணப்படும். இந்த நகைகளை சுலபமான முறையில், தங்கம் தேயாமல் எப்படி சுத்தம் செய்வது என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

thangam

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். ஒரு ஸ்பூன் அளவு ஷாம்பு ஊற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த ஷாம்பு பயன்படுத்தினாலும், அதை சுடு தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு ஊற்றிக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் அளவு சோடா உப்பையும் போட்டுக் கொள்ளுங்கள்.

நன்றாக கொதிக்கின்ற தண்ணீரை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து விட்டு, நீங்கள் சுடு தண்ணீரில் சேர்த்திருக்கும் ஷாம்புவையும், சோடா உப்பையும்,  நன்றாக கரைத்து விட்டு, தங்க நகைகளை அதில் போட்டு 15 நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும். குறிப்பிட்டுச் சொல்லப் போனால் சுடுதண்ணீர் ஆறும் வரை, ஊற வைக்கலாம். தங்க நகைக்கு எந்த ஒரு சேதமும் ஏற்படாது. பிரஷை போட்டு வைக்காமலேயே உங்களது நகை பளப்பளப்பாக மாறிவிடும்.

Thangam

ஏனென்றால், சில மெல்லிய வேலைப்பாடுகள் கொண்ட நகைகளை, பிரஷ் வைத்து லேசாக தேய்தாலும், அது பழுது அடைவதற்கு வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக அழுக்குப் படிந்த தடிமனான நகையாக இருந்தால், பல் தேய்க்கும் பிரசில், கொஞ்சம் பேஸ்ட் வைத்து தேய்த்துப் பாருங்கள். நகை இன்னும் பள பளப்பாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே முறையை நீங்கள் பச்சைத் தண்ணீரில் முயற்சி செய்து பார்த்தீர்கள் என்றால், கட்டாயம் நகையில் இருக்கும் அழுக்கு போகாது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சுடுதண்ணீரில் நகையை சுத்தம் செய்யும் போது, உப்பு தண்ணீரை பயன்படுத்தாதீர்கள். நல்ல தண்ணீரை பயன்படுத்தி கொள்ளுங்கள். இறுதியாகவும் உங்களது நகையை நல்ல தண்ணீரில் கழுவி உடனேயே, காட்டன் துண்டை வைத்து நன்றாக துடைத்து எடுத்து விட்டால் நகை பலபலவென்று மாறிவிடும்.

Thangam

நாம் அணிந்திருக்கும் நகைகள், நம் வீட்டின் லட்சுமி கலாட்ச்சத்தை வெளிப்படுத்தும். அந்த நகைகளை அழுக்குப் படிந்த நகைகளாக, மங்கலான நிலையில் வைத்திருப்பது அவ்வளவு சரியல்ல. ஏனென்றால், மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய நகை எப்போதுமே பார்ப்பதற்கு பளிச்சென்று இருப்பதுதான் நம் வீட்டிற்கு நல்லது. அதிர்ஷ்டமும் கூட!