உங்கள் வீட்டில் செல்வம் என்றும் நிலைத்திருக்க இதை செய்யுங்கள் போதும்

gomatha
- Advertisement -

மனிதனுக்கு அதிகாலத்திலிருந்தே மிகவும் உதவிகரமாக இருக்கக்கூடிய ஒரு விலங்கு பசு மற்றும் காளை மாடு ஆகும். இதில் காளை மாடு விவசாயத்திற்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது. பசு மாடு ஒரு தெய்வீக விலங்காகவே நமது கலாச்சாரம் பாவித்தது. பல தெய்வங்கள் வாசம் செய்யும் உடலை கொண்ட பசுவை பூஜிக்கும் முறை தான் கோபூஜை பல்வேறு பலன்களை அள்ளித் தருகிற, அற்புத சக்தி வாய்ந்த கோமாதா பூஜை செய்யும் முறையையும் அதனால் ஏற்படும் பலன்களையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

gomadha 2

வீட்டில் பசு இருப்பவர்கள்தான் இந்த பூஜையைச் செய்ய வேண்டும் என்பதில்லை. பசு இல்லாதவர்களும் பசு வைத்திருப்பவர்களிடம் கொஞ்ச நேரத்துக்கு பசுமாட்டை கேட்டு உங்கள் வீட்டிற்கு அழைத்து இந்த பூஜையை செய்து விட்டு பசுவைத் திருப்பித் தரலாம். இந்த கோபூஜைக்காக பசுவைத் பிறருக்கு தந்து உதவுபவர்கள் பசுவையே தானம் செய்த புண்ணியத்தைப் பெறுகிறார்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது. முதலில் பசு மாடு விரும்பி சாப்பிடக்கூடிய அருகம்புல், அரிசி, வெல்லக் கலவை, வாழைப்பழம், பால் சாதம் போன்றவற்றையும், பூஜைக்கான தேங்காய், தாம்பூலம், பூமாலை மற்றும் பூஜைக்குரிய பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கன்றிட்ட பசுமாட்டை அதன் கன்றுடன் அழைத்து வந்து, குளிக்க வைத்து, கொம்புகளில் மஞ்சள் பூசி மாலை அணிவிக்கவும். அருகம்புல்லை கொடுத்து வீட்டுக்கு அழைப்பது போல

ஸ்வாகதம்,ஸ்வாகதம், கோமாதா ஸ்வாகதம்,
ஸ்வாகதம், மகாலஷ்சுமி ஸ்வாகதம்,
ஸ்வாகதம், அஷ்டலஷ்சுமி

- Advertisement -

என்று 3 முறை கூற வேண்டும்.

Gomatha pooja in tamil

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, “சுமுகஸ் சைக தந்தஸ்ச ஹேரம்ப ஸ்கந்த பூர்வஜ” என்று துதித்து அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு16 மலர்கள் வைக்கவும். அல்லது `பாலும் தெளிதேனும்’-என்று தொடங்கும் பாடலைப் பாடி, மலர் தூவி பழம், கல்கண்டு படைத்தும் ஆரத்தி காட்டி வழிபடலாம்.

- Advertisement -

பசுவின் முன் ஒரு பலகை வைத்து, அதன் மேல் காமாட்சி தீபம் (அ) கமல தீபம் என்கிற ஐஸ்வர்ய தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். எட்டு விதமான வாசனை மலர்களை எடுத்துக் கொண்டு, முதலில்

காமதேநேர: ஸமுத் பூதே ஸர்வதாம
பலப்ரதே த்யாயாமி ஸெளரபேயி
த்வாம் வ்ருஷபத்னி நமோஸ்துதே

என்று 3 முறை மந்திரம் துதிக்க வேண்டும். இந்த கோபூஜையின் முக்கிய அம்சமான பசுவின் உடலை வழிபடும் அங்க பூஜை. கீழே தந்துள்ள மந்திரங்களை உச்சரித்தபடியே பசுவின் உடற்பாகங்களில் குங்குமத்தை இட்டு பூஜிக்க வேண்டும்.

gomatha-poojai

பின்பு பசுவின் இரண்டு கொம்புகளின் நடுவே ஓம் சிவரூபாய நம: வலக்கொம்பில்-பிரம்மனே நம, இடப்புறக் கொம்பில்-விஷ்ணுவே நம, வலக்காது நுனியில்-தீர்த்தேப்யோ நம, இடக்காது நுனியில் – ஸ்தாவர ஐங்கமேப்யோ நம, மூக்கு நுனியில் – ஜ்யேஷ்டாய நம, வலது கண்ணில் – சூர்யாய நம, இடக் கண்ணில் – சந்த்ராய நம, பற்களில் – மாருதாய நம, தாடையில் – வருணாய நம, மேலுதடு – யட்சேப்யோ நம

கீழுதடு- யமயே நம, கழுத்தில் – இந்த்ராய நம, குளம்பு நுனி – நாகேப்யோ நம, குளம்பு நடுவே-கந்தவர்வேப்யோ நம, குளம்பு மேற்பாகம்-அப்சரேப்யோ நம, கால்களில் – கணேப்யோ நம, நாடிகளில் – நேத்ரேப்யோ நம, மடியில் – ப்ருகுப்யோ நம, மடி நுனியில் – சாத்தேப்யோ நம, இதயத்தில் -உமாதேவ்யாய நம, வயிற்றில் – பூமிதேவ்யாய நம, யோனியில் – மகாலஷ்மியே நம, தோள்களில் – தேவேப்யோ நம:

Pasu

பிறகு பிடித்து வைத்த கோமயத்தில்-பிரும்மனே நம, கோ ஜலத்தில் – விஷ்ணுவே நம, நெய்யில்- ருத்ராய நம,
தயிரில் -ஈஸ்வராய நம, பாலில் – சதாசிவாய நம என்று சொல்லியபடி அர்ச்சனை செய்யவும்.

பிறகு கற்பூர ஆரத்தி காட்டி,

ஓம் சுரப்யை ச வித்மஹே காமதாத்ரேய தீமஹி தன்னோ தேனு ப்ரசோதயாத்: என்று சொல்லவும்.

அடுத்து குங்குமம், மலர்களால்..

ஓம் காமதேனவே நம:
ஓம் பயஸ்வின்யை நம:
ஓம் ஹவ்யகவ்ய பலப்ரதாயை நம:
ஓம் வ்ருஷபத்ன்யை நம:

ஓம் சௌரபேயை நம:
ஓம் மகாலக்ஷ்மியை நம:
ஓம் ரோகிண்யை நம:
ஓம் ஸ்ருங்கிண்யை நம:

ஓம் க்ஷíரதாரிண்யை நம:
ஓம் காம்போஜ ஜனகாயை நம:
ஓம் பப்ல ஜனகாயை நம:
ஓம் யவன ஜனகாயை நம:

ஓம் மாஹேயை நம:
ஓம் நைசிக்யை நம:
ஓம் சபலாயை நம:
ஓம் ஸ்ரீம் காமதேனவே நம:

என்று சொல்லி அர்ச்சிக்கவும்.

பிறகு தூப, தீபம் காட்டி, பொங்கல், அரிசி, வெல்லக் கலவையை நிவேதனம் செய்து, தேங்காய், பழம் படைத்து அதற்கு ஆரத்தி செய்து, பிறகு அவற்றை பசுவுக்கு உண்ணக் கொடுக்கவும். பசுவை மூன்று முறை வலம் வந்த பிறகு “கோமாதாவே எங்கள் குலம் தழைத்திடவும் ஏற்றம் பெற்று வாழ்ந்திடவும் என்றும் பக்கத்துணையிருக்க திருமகள் அருளைக் கூட்டி நீடியே எட்டாத செல்வமும் எட்ட வைப்பாய் பசியும், பிணியும் போக்கி விடும் பாலைத் தந்திடும் மாதாஜி செல்வத்திருவே போற்றியம்மா”! என்று கூறி கோமாதாவை சுற்றி வந்து விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வணங்கி அதன் பின்பகுதியை தொட்டு வழிபட வேண்டும். கோமாதாவின் வாழ்த்தினால் வளங்கள் பெருக வாழ்த்துகிறோம்.

mahalakshmi

மிகுந்த ஆற்றல் வாய்ந்த இந்த கோபூஜையையை செய்வதால் உங்களுக்கு பதினாறு வகையான பேறுகளும் செல்வத்தின் அதிபதியான திருமகள் பார்வையும், அணைத்து தெய்வங்களின் கடாட்சங்களும் கிடைக்கிறது. கோமாதா பூஜையை வெள்ளிக்கிழமையில் செய்து வந்தால் துர்சக்திகள் நமது வீட்டை நெருங்காது. செவ்வாய் கிழமை அன்று செய்தால் வீட்டில் மங்களங்கள் பொங்கும். பவுர்ணமி தினத்தன்று செய்தால் மகாலட்சுமி நம் வீட்டில் நித்தியவாசம் புரிவாள் என்று புராணங்கள் கூறுகின்றன.மகாலட்சுமிக்குரிய பூர நட்சத்திர நாளில் கோபூஜை செய்வதால் கணவன்-மனைவிக்கு இடையே அன்னியோன்யம் பெருகும். இல்லறம் என்றும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
இல்லற வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் தீர இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Gomatha pooja in Tamil. It is also called as Go pooja in Tamil or Gomatha valipadu in Tamil or Selvam peruga poojai in Tamil or Go poojai nanmaigal in Tamil or Go poojai palangal in Tamil.

- Advertisement -