உங்கள் இல்லற வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்க இதை செய்யுங்கள்

sivan

மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே ரத்த வழியில் பிறருடன் எதோ ஒரு உறவு இருக்கிறது. இந்த உறவுகளில் பலரும் நம்முடன் அணைத்து நேரங்களிலும் இருக்க முடியாது. ஆனால் நமது இறுதி நொடி வரை நமக்காக வாழும் ஒரு உறவு என்றால் அது வாழ்க்கை துணையான கணவன் அல்லது மனைவி உறவு தான். இத்தகைய அற்புதமான உறவு சிறக்க செய்யப்படும் கௌரி சங்கர் ஹோமம் மற்றும் பூஜை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

siva-parvathi

தனது உடலில் சரிபாதியை கௌரியாகிய சக்தி தேவிக்கு தந்த சங்கரனாகிய சிவன் ஆகிய இருவரையும் ஆராதித்து செய்யப்படும் பூஜை மற்றும் ஹோமம் கௌரி சங்கர் பூஜை, ஹோமம். இந்த கௌரி சங்கர் பூஜை மற்றும் ஹோமம் செய்வதற்கு ஹோமங்களை செய்வதில் அனுபவம் வாய்ந்த வேதியர்களிடம் நல்ல நாள், நேரம் ஆகியவற்றை குறித்து கொள்ள வேண்டும். இந்த ஹோமம் மற்றும் பூஜையை உங்கள் இல்லத்திலும் செய்யலாம் அல்லது கோயில்களிலும் செய்து கொள்ளலாம்.

கௌரி சங்கர் ஹோம பூஜையில் சிவன் பார்வதி தேவிக்குரிய மிக சக்தி வாய்ந்த மந்திரங்கள் உச்சாடனம் செய்து ஹோமம் செய்யப்படுவதால், இந்த பூஜையை செய்து கொள்பவர்களிடமிருந்து எதிர்மறையான அதிர்வுகள் சக்திகள் நீங்க பெற்று, இறைவனின் ஆற்றல் அவர்களுக்குள் நிரம்புகின்றன. ஸ்ரீராமசந்திர மூர்த்தியை சீதா தேவி மணக்கும் முன்பு இந்த கௌரி சங்கர் ஹோம பூஜையை சீதா தேவி செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.

சக்தி வாய்ந்த இந்த ஹோம பூஜையின் பயனாக மிக நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு கூடிய விரைவில் அவர்களின் மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமைய பெறுவார்கள். ஜாதகத்தில் தோஷங்கள் இருந்து திருமணம் தாமதாமானவர்களுக்கு அந்த தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். விரும்பியவரை திருமணம் செய்து கொள்ளும் அமைப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே திருமணமான தம்பதிகள் பிரிந்து வாழ்தல், கணவன் மனைவி இடையே மனஸ்தாபம் போன்ற பிரச்சனைகளை நீக்கி தம்பதிகள் இருவரும் பல காலம் இணைபிரியாமல் வாழும் பாக்கியம் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
ராகு – கேது தோஷங்கள் தீர பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Gauri shankar homam in Tamil. It is also called as Homam pooja benefits in Tamil or Shiva homam in Tamil or Thirumanam nadakka in Tamil or Homa poojai in Tamil.