கோடி நன்மைகள் தரும் கோமாதா பூஜை.

gomatha
- Advertisement -

நமக்கும் நம் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் எந்தவித கஷ்டங்களும் வரக்கூடாது. அதே சமயம் அனைத்து செல்வங்களும் கிடைத்து நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என்று விரும்புவோம். அப்படிப்பட்ட வேண்டுதலை நிறைவேற்றக்கூடிய தெய்வமாக கோமாதா விளங்குகிறாள். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் கோமாதா பூஜை செய்யும் முறையை பற்றி பார்ப்போம்.

திருப்பாற்கடலை கடையும் பொழுது அந்த கடலில் இருந்து முதலில் தோன்றியவள் தான் கோமாதா. அப்படி தோன்றிய கோமாதாவில் முப்பத்து முக்கோடி தெய்வங்களும் வந்து ஐக்கியமானார்கள். அதனால் தான் கோமாதாவை வழிபடும் பொழுது அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்குரிய பலன் கிடைக்கும். அதே போல் கோமாதா பூஜை செய்யும் பொழுது அனைத்து தெய்வங்களையும் பூஜிப்பதற்கான பலன் கிடைக்கும். அதனால் தான் இன்றளவும் கோமாதா பூஜை செய்யும் பழக்கத்தை கோவில்களில் பார்க்கிறோம்.

- Advertisement -

கோசாலையில் செய்யக்கூடிய கோமாதா பூஜைக்கு செலவுகள் அதிகமாகும். இயன்றவர்கள் அந்த பூஜையை செய்யலாம். இயலாதவர்கள் வீட்டிலேயே கோமாதா சிலையை வாங்கி வைத்து நம் கைகளில் அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபடும் பொழுதும் நமக்கு நல்ல பலன் கிடைக்கும். இதற்கு கண்டிப்பான முறையில் கோமாதா சிலை தேவைப்படும். இந்த பூஜையை புதன், வியாழன், வெள்ளி போன்ற மூன்று கிழமைகளில் ஏதாவது ஒரு கிழமை செய்யலாம். வாரத்தில் ஒரு நாள் செய்வதாக இருந்தால் தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும். அல்லது 48 நாட்கள் தொடர்ந்து செய்யலாம்.

சூரிய உதயம் ஆகுவதற்கு முன்பாகவே இந்த பூஜையை செய்து முடித்து விட வேண்டும். அப்படி செய்தால் தான் கூறுதல் பலன் கிடைக்கும். சரி இப்போது பூஜைக்கு வந்து விடுவோம். கோமாதா சிலைக்கு அபிஷேகம் செய்வதற்கு நமக்கு சுத்தமான பசும்பால் தேவைப்படும். சங்கு வைத்திருப்பவர்கள் பசும்பாலை சங்கில் ஊற்றி கோமாதா அபிஷேகம் செய்யலாம். அடுத்ததாக சுத்தமான தண்ணீரில் கோ மூத்திரம் என்று நாட்டு மருந்து கடைகளில் விற்கக்கூடிய தீர்த்தத்தை மூன்று சொட்டு விட்டு அதை அபிஷேகம் செய்யலாம். அப்படி கிடைக்காதவர்கள் சுத்தமான தண்ணீரை வைத்து அபிஷேகம் செய்யலாம்.

- Advertisement -

அபிஷேகம் செய்து முடித்த பிறகு 5, 7, 9 என்ற எண்ணிக்கையில் கோமாதாவிற்கு சிறிது மஞ்சள், சிறிது சந்தனம், சிறிது ஜவ்வாது சேர்த்து பன்னீர் ஊற்றி குழைத்து பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து உதிரிப்பூக்களால் கோமாதாவிற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். கோமாதா 108 போற்றிகள் இருக்கிறது அதை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு நெய்வேத்தியமாக அகத்திக்கீரை, அருகம்புல் வைக்க வேண்டும். நெய்வேத்தியம் செய்த இந்த அகத்திக்கீரை, அருகம்புல்லை அருகில் இருக்கும் பசு மாட்டிற்கு தானமாக வழங்கி விடலாம்.

பசுமாடு அருகில் இல்லாதவர்கள் அகத்திக்கீரை, அருகம்புல் வாங்கும் பணத்தை உண்டியலில் சேர்த்து வைத்து பூஜை முடிந்த பிறகு அந்த பணத்தை எடுத்து ஏதாவது ஒரு மாட்டிற்கு பராமரிப்பு செலவிற்காக கொடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர அரச மர வழிபாடு

இப்படி வீட்டிலேயே நாம் எளிய முறையில் பூஜை செய்யும் பொழுது அனைத்து விதமான கஷ்டங்களும், பாவங்களும், தோஷங்களும் நீங்கி செல்வங்கள் அனைத்தும் நிறைந்திருக்கும்.

- Advertisement -