கோபி 65 செய்வது எப்படி என்று பார்ப்போம்

gopi-65 fry
- Advertisement -

கோபி 65 என்பது காளி பிளவர் கொண்டு செய்யப்படும் ஒரு ஸ்னாக் வகையாகும். எவ்வளவு செய்தாலும் அது பத்தாது என்ற அளவிற்கு அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு ஸ்னாக் வகை இந்த கோபி 65. இதனை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம் வாருங்கள் .

gopi 65 1

கோபி 65 செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

காளி பிளவர் – 1
கார்ன் மாவு – 1/2 கப்
மைதாமாவு – 1/2 கப்
அரிசி மாவு – 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – சிறிதளவு

கோபி 65 செய்முறை:

முதலில் ஒரு பெரிய காளி பிளவர் எடுத்து அதனை நன்றாக சுட்ட தண்ணீரில் போட்டு கழுவி எடுத்து அதனை சின்ன சின்னதாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். பிறகு கோபி 65 செய்ய தேவையான மாவினை தயார் செய்யவும்.

- Advertisement -

gopi 65 2

மாவினை தயார் செய்ய ஒரு பவுலில் கார்ன் மாவு, மைதா மாவு, அரிசி மாவு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு அதனுடன் அனைத்து மசாலாதூள்களும் சேர்த்து அதனுடன் உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு அதனுடன் காளி பிளவர் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் காலிபிளவர் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான கோபி 65 தயார்.

- Advertisement -

gopi 65 3

சமைக்க ஆகும் நேரம் – 10 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 3

English overview:
Here we have Gopi 65 recipe in Tamil. It is also called Gopi 65 ingredients in Tamil or Gopi 65 preparation in Tamil or Gopi 65 seimurai in Tamil or Gopi 65 seivadhu eppadi in Tamil.

- Advertisement -