வாழ்க்கையில் ஒரு முறையாவது, இந்தப் பொருளை வாங்கி தானம் கொடுங்கள். வாழ்நாள் முழுவதும் நோய் நொடி இல்லாத வாழ்க்கையை சந்தோஷமாக வாழலாம்.

dhanam
- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நம்முடைய முன்னோர்களின் கூற்று. இந்த பழமொழிக்கான உள் அர்த்தத்தை இத்தனை நாட்கள் நாம் உணர்ந்தோமோ இல்லையோ, கடந்த சில மாதங்களாக நமக்கு நோய் பற்றிய அச்சத்தை காட்டிவிட்டது இந்த கொரோனா. எந்த பயமும் இல்லாமல், நோய்நொடி இல்லாமல் இரண்டு வருடத்திற்கு முன்னால் இருந்த, இயல்பு நிலை திரும்பாதா என்று ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டு தான் இருக்கின்றோம். என்று தான் இந்த நிலைமை மாறும்? என்ற இந்த கேள்விக்கு உண்டான பதிலை அந்த ஆண்டவன் ஒருவனால் மட்டும் தான் சொல்ல முடியும்.

சரி, சீக்கிரமே இந்த கொடிய நோயில் இருந்து விடுபட வேண்டும் என்ற வேண்டுதலை அந்த ஆண்டவனிடம் வைத்து இந்த பதிவினை தொடரலாம். பொதுவாகவே தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று சொல்லுவார்கள். அன்னத்திலேயே சில வகையான குறிப்பிட்ட பொருட்களை நாம் வாங்கி கொடுக்கும் போது, சில குறிப்பிட்ட நல்ல பலன்களை நம்மால், உடனடியாக பெற முடியும். அதாவது சில பரிகாரங்களை செய்தால் கைமேல் பலன் உண்டு சொல்லுவார்கள் அல்லவா. அந்த வரிசையில் நோய்நொடி நம்மை அண்டாமல் இருக்க, நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க நம் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெற எந்த பொருளை எப்படி தானம் செய்ய வேண்டும்.

- Advertisement -

கோதுமை! கோதுமையை நீங்கள் வாங்கி அப்படியே தானியமாக யாருக்காவது தானம் கொடுத்தாலும் சரி, அப்படி இல்லை என்றால் கோதுமை மாவை அரைத்து அந்த மாவை தானமாகவும் கொடுத்தாலும் சரிதான். கோதுமையை மனிதர்களுக்கும் தானம் கொடுக்கலாம். வாயில்லா ஜீவன்களுக்கு சாப்பிடுவதற்கு தானமாக கொடுக்கலாம். வாயில்லா ஜீவன்களுக்கு என்றால் புறா, குருவி பறவைகளுக்கு முழு கோதுமையை வாங்கி வைத்து தினம்தோறும் மொட்டை மாடியில் இறையாக போடலாம். அப்படி இல்லை என்றால் பசு மாடு வைத்திருப்பவர்களுக்கு கோதுமையை தானம் கொடுக்கலாம்.

Ration gothumai

குறிப்பாக கோதுமையால் செய்யப்பட்ட சப்பாத்தி அல்லது கோதுமையால் செய்யப்பட்ட பிரட் இவைகளை ஏழை எளிய மக்களுக்கு உங்களால் முடிந்தவரை தானம் கொடுக்க வேண்டும். இந்த தானத்தினை தொடர்ந்து மாதம் ஒரு முறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ முடிந்தால் வாரம் ஒரு முறை கூட தானம் செய்யும் பட்சத்தில், நிச்சயமாக உங்களை எந்த ஒரு நோய் நொடியும் அண்டாமல் இருக்கும்.

- Advertisement -

ஒருவேளை நீங்கள் உடல்நிலை சரியில்லாதவர்கள் ஆக இருந்தால் இந்த கோதுமை தானத்தை வாரந்தோறும் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயலாதவர்களுக்கு தானம் கொடுத்து வாருங்கள். கோதுமையால் செய்யப்பட்ட பிரட்டை வாங்கி உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் உங்களுடைய உடம்பில் இருக்கும் நோய் நொடிகள் படிப்படியாக குறையும். நிச்சயம் சில வாரங்களிலேயே உங்களால் நல்ல மாற்றத்தை உணர முடியும்.

Sai baba answers

ஒருமுறை கொடிய நோய் வந்தபோது சாய்பாபா அந்த நோயை விரட்டுவதற்கு கோதுமை மாவை தூங்கிவிட்டதாக கூட ஒரு கதை உள்ளது. இதனடிப்படையில் முடிந்தால் உங்கள் வீட்டின் அருகில் சாய்பாபாவின் கோவில் இருந்தால் அந்த கோவில் உள்ள சாய் பாபாவுக்கு நிவேதனமாக கோதுமை மாவை வாங்கிக் கொடுக்கவேண்டும். சாய்பாபாவுக்கு நிவேதனமாக வைத்த அந்த கோதுமை மாவை எடுத்து ஏழைகளுக்கு தானம் கொடுத்தாலும் நல்ல பலனைப் பெற முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது. மேல் சொன்ன விஷயங்களில் உங்களுக்கு எது சுலபமாக இருக்கிறதோ அதை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -