நவகிரகங்களின் பிடியில் இருந்து விடுபட வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய பரிகாரங்கள்

navagragam
- Advertisement -

இந்தப் பிரபஞ்சம் இயங்குவதே ஒன்பது கோள்களின் ஆளுமையால் தான். நமது முன்னோர்கள் நேரத்தை கணித்ததும், நாட் கிழமையைக் கணித்ததும் இந்த கோள்களை அடிப்படையாக வைத்து தான். அப்படி இந்த பிரபஞ்சம் முழுவதுமே இந்த கோள்களை மையமாக வைத்துதான் சுற்றிக்கொண்டிருக்கிறது. இப்படி இந்த உலகத்தையே ஆட்விக்கும் இந்த கோள்கள் மனிதனின் வாழ்க்கையிலும் பல வித மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. ஒருவரின் ஜாதகத்தில் இந்த நவக்கிரகங்களின் அமைப்பு சரியாக அமையவில்லை எனில் அவர்களின் வாழ்க்கை போராட்டமானதாகவே இருக்கிறது. இவ்வாறான நவகிரக தோஷத்தில் இருந்து விடுபட செய்ய வேண்டிய எளிய பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

navagraham

இன்றளவிலும் பல ஆராய்ச்சியாளர்களின் அறிவிற்கு எட்டாத ஒன்று நமது முன்னோர்களின் துல்லியமான கணிப்புகள் தான். இன்று வரையிலும் பலராலும் ஆச்சரியப்படவைக்கும் அளவிற்கு அவர்களது அறிவுத் திறன் இருந்துள்ளது. அப்படி இன்று நேரம் பார்க்க கடிகாரம், நாள் பார்க்க நாட்காட்டி இப்படி அனைத்துமே அவர்களின் குறிப்பில் இருந்து தோன்றியவைகள் தான்.

- Advertisement -

இன்றைய காலத்தில் புதிது புதிதாக பல ஆராய்ச்சிகளும், புதுமையான விஷயங்களும் கண்டுபிடிக்கப் பட்டாலும் அவை அனைத்துமே நமது முன்னோர்களால் முன்கூட்டியே அறியப்பட்டவையாகவே இருக்கின்றன. மேலும் மேலும் பலரும் வியப்பிக்கும் வகையிலேயே நமது முன்னோர்கள் வாழ்ந்துள்ளனர்.

surya-bhagavan

இப்படி அவர்களின் அனைத்து வித குறிப்புகளும் இந்த நவ கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. எனவே இவ்வளவு பலம் வாய்ந்த நவகிரகங்களின் ஆளுமை நமது கட்டத்தில் நன்மையாக இருந்தால் மட்டுமே நமது வாழ்க்கை இன்பமயமாக இருக்கும். ஆகவே நவகிரக தோஷத்திலிருந்து விடுபட சனிக்கிழமை தோறும் நவதானியங்களை பயன்படுத்தி சமைத்த உணவை உண்பதன் மூலம் நவகிரக தோஷத்தில் இருந்து விடுபட முடியும்.

- Advertisement -

இதில் சூரிய தோஷம் உள்ளவர்கள் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து, காயத்ரி மந்திரம் சொல்வதன் மூலமும், ஞாயிற்றுக்கிழமையில் கோதுமையினால் செய்த உணவினை தானமாக கொடுப்பதன் மூலமும் சூரிய தோஷத்தில் இருந்து விடுபட முடியும். அடுத்ததாக சந்திர தோஷம் உள்ளவர்கள் நெல் சம்பந்தமான உணவுகளை தானமாக கொடுக்கலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் துவரம் பருப்பினாளான உணவு வகைகளை தானமாக கொடுக்கலாம். புதன் தோஷம் உள்ளவர்கள் புதன்கிழமையில் பச்சை பயிறை தானமாக கொடுக்கலாம். குரு தோஷம் உள்ளவர்கள் வியாழக்கிழமை அன்று கொண்டைக்கடலையை தானம் செய்யலாம்.

ragukethu

ராகு தோஷம், நாகதோஷம் உள்ளவர்கள் கருப்பு உளுந்தை தானமாக கொடுப்பதன் மூலம் திருமண தோஷத்தில் இருந்து விடுபட முடியும். கேது தோஷம் உள்ளவர்கள் துறவிகள் மற்றும் மகான்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் சிறந்த பலனைப் பெறமுடியும். சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமை தோறும் கோவிலுக்கு சென்று எள் விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.

sani-bagavaanl

இவ்வாறு நவ கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் பிடித்த நிற வஸ்திரங்கள் மற்றும் உணவுப் பொருட்களை தானமாக கொடுப்பதன் மூலமும் நவதானிய பிரசாதத்தை நவகிரகங்களுக்கு படைத்து, விளக்கு ஏற்றி பூஜை செய்வதன் மூலமும் நவகிரக தோஷ பாதிப்பிலிருந்து விடுதலை பெறமுடியும். ஒருவரின் ஜாதகத்தில் இந்த கிரகங்களின் அமைப்பையும், தோஷத்தையும் சரி செய்தால் மட்டுமே அவர்களின் வாழ்க்கை பலவித ஏற்றங்களை பெற முடியும்.

- Advertisement -