இந்த சந்திர கிரகணம் முடிந்ததும் வீட்டில் இருக்கும் பெண்கள் தவறாமல் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்து விடுங்கள். குடும்பத்திற்கு வரக்கூடிய தோஷம் முற்றிலும் விலகி விடும்.

chandra-grahanam1
- Advertisement -

இன்னும் ஒரு சில மணி நேரங்களில் சந்திர கிரகணம் தொடங்க இருக்கின்றது. இந்த சந்திர கிரகணம் செவ்வாய்க்கிழமை அன்று வந்திருப்பதால் உலகில் சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக, ஜோதிடர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் நம்மில் பல பேர் மனதில் ஒரு குழப்பம் இருக்கிறது. சந்திர கிரக தோஷத்தின் காரணமாக நம்முடைய வீட்டிற்கும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்று. பயம் தேவை கிடையாது. இறைவனின் மேல் நம்பிக்கையை வைத்து கிரகண நேரத்தில் முறையான இறை வழிபாடு செய்தாலே வரக்கூடிய பிரச்சனையிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். (சந்திர கிரகணம் நேரம் மாலை 5:32 மணி முதல் 6:18 மணி வரை.)

கிரகணம் நடந்து முடிந்த பிறகு இந்த கிரகணக்கதிர்வீச்சின் தாக்கம் கட்டாயமாக பூமியில் இருக்கும். ஆகவே கிரகணம் முடிந்த பின்பு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் தலைக்கு குளித்து விட வேண்டும். நீங்கள் கழட்டிப் போட்ட அழுக்குத் துணியை உடனடியாக தண்ணீரில் நனைத்து விடுங்கள். மறுநாள் வரை துவைக்காமல் எடுத்து வைக்க வேண்டாம். அதன் பின்பு உங்களுடைய வீட்டையும் முழுமையாக துடைத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

கிரகண நேரம் முடிந்த பின்பு வீட்டில் இருக்கும் பெண்கள் அவரவருடைய நிலை வாசலை கூட்டி மஞ்சள் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக்கொள்ள வேண்டும். அதன் பின்பு நிலை வாசல் படியில் இரண்டு மண் அகல் விளக்கில் நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பூஜை அறைக்கு வந்து பூஜை பாத்திரங்களை எல்லாம் சுத்தம் செய்துவிட்டு பூஜையறையில் சுவாமி படங்களுக்கு புதியதாக பூ வைத்து சுவாமிக்கு புதியதாக பஞ்ச பாத்திரத்தில் தீர்த்தம் வைத்து, விளக்கு ஏற்றி குலதெய்வத்தை மனதார நினைத்து குடும்பத்துடன் வழிபாடு செய்து கொள்ளுங்கள்.

அதன் பின்பு உங்களுடைய வீட்டின் அருகில் விநாயகர் கோவில் இருந்தால் அந்த விநாயகர் கோவிலுக்கு சென்று உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுடைய அனைவரின் பெயரையும் சொல்லி அர்ச்சனை செய்து கொண்டால் போதும். நீங்கள் எந்த ராசியாக இருந்தாலும் எந்த நட்சத்திரமாக இருந்தாலும் சரி, உங்களுக்கு கண்ணுக்குத் தெரியாத ஏதாவது ஒரு தோஷம் தாக்கி இருந்தாலும் அந்த தோஷம் நிவர்த்தி ஆகிவிடும். பெரியதாக எந்த பிரச்சனையும் வராது.

- Advertisement -

கோவிலுக்கும் செல்ல முடியாத சூழ்நிலையில் நீங்கள் வீட்டில் இருந்தால் வீட்டில் மஞ்சள் பிள்ளையாரை வெற்றிலையின் மேல் பிடித்து வைத்து, உங்கள் குடும்பத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது என்று குடும்பத்தோடு பிரார்த்தனை செய்து வேண்டிக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: இன்று சந்திர கிரகணம். கிரகண நேரத்தின் போது இந்த ராசிக்காரர்கள் மட்டும் வெளியே வராதீங்க. கிரகணம் முடிந்த பின்பு பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய நட்சத்திரங்கள் என்னென்ன?

ராசி நட்சத்திரம் தெரிந்தவர்கள், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எந்தெந்த நட்சத்திரக்காரர்களுக்கு சந்திர ப்ரீத்தி செய்ய வேண்டுமோ அதை முறைப்படி செய்து கொள்ளலாம். எங்களுக்கு எதுவுமே தெரியாது என்பவர்கள் மேல் சொன்னபடி பிள்ளையாரை போய் வழிபாடு செய்யுங்கள். நிச்சயமாக உங்களுக்கும் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து வருவோம்.

- Advertisement -