முக அழகை அதிகரிக்கும் திராட்சை

grapes beauty
- Advertisement -

இயற்கையிலேயே கிடைக்கக் கூடிய அதி அற்புதமான சத்துக்கள் நிறைந்தவை தான் காய்கறிகளும், பழங்களும். அதிலும் குறிப்பாக தினமும் ஒருவகை பழத்தை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியமாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் நம்முடைய அழகையும் நம்மால் பராமரித்துக் கொள்ள முடியும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. பழம் எந்த அளவுக்கு நம் உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறதோ அதே அளவிற்கு நம்முடைய முகத்தின் அழகையும் அதிகரிக்கும் ஆற்றல் கொண்டதாகவே திகழ்கிறது. அந்த வகையில் இன்றைய அழகு குறிப்பு குறித்த பகுதியில் திராட்சை பழத்தை வைத்து நம் முக அழகை எப்படி அதிகரித்துக் கொள்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

பழங்களில் உயிர்சத்துக்கான விட்டமின் சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. சமைத்து உண்ணும் உணவை விட இப்படி பழங்களாக நாம் உணவை எடுத்துக் கொள்ளும் பொழுது நம் உடலில் பல அற்புதமான நல்ல மாற்றங்கள் ஏற்படும். அதோடு மட்டுமல்லாமல் நம்முடைய சருமத்திற்கும் இது மிகவும் சிறந்ததாக திகழ்கிறது.

- Advertisement -

ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் அளவாவது தண்ணீர் குடித்தால் நம்முடைய சருமம் நன்றாக இருக்கும் என்று கூறுவது போல தினமும் ஏதாவது ஒரு பழச்சாறு சாப்பிடுவதன் மூலமும் நம்முடைய அழகை நம்மால் பராமரித்துக் கொள்ள முடியும். இப்படி நாம் பழச்சாறு செய்யும் பொழுது அதிலிருந்து சிறிதளவு மட்டும் எடுத்து நம் முகத்தில் தடவுவதன் மூலம் முகத்தை மேலும் அழகாக முடியும்.

திராட்சை பழத்தை நாம் முகத்தில் தடவுவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் குறைய ஆரம்பிக்கும். தழும்புகள் மறைய ஆரம்பிக்கும். முகத்தசைகள் இறுகி, இளமையான தோற்றத்தை தரவும் திராட்சை உதவுகிறது. அது மட்டுமல்லாமல் திராட்சையை வாரத்திற்கு மூன்று முறையாவது நம் முகத்தில் தடவுவதன் மூலம் நம்முடைய சரும நிறத்தை நம்மால் அதிகரித்துக் கொள்ள முடியும். திராட்சை வைத்து எளிமையாக செய்யக்கூடிய இரண்டு பேஸ் பேக்கை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

ஒரு தக்காளி பழம் ஐந்து திராட்சைப் பழம் இரண்டையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் அரை ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை பழச்சாறு, ஒரு ஸ்பூன் அளவிற்கு தேன் சேர்த்து நன்றாக கலந்து முகத்திலும், கழுத்திலும் தடவ வேண்டும். இதை 15 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும். இது நன்றாக உலர்ந்த பிறகு குளிந்த நீரினால் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் நீங்குவதோடு முகத்தின் நிறத்தையும் இது அதிகரிக்கும்.

ஒரு பவுலில் முல்தானி மெட்டி ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் ஐந்து திராட்சையை அரைத்து விழுதாக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் பன்னீரை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். இருபது நிமிடம் அப்படியே விட்டுவிட்டு இந்த ஃபேஸ் பேக் காய ஆரம்பித்ததும் இதில் சிறிது தண்ணீரை தெளித்து நன்றாக மசாஜ் செய்து கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் அனைத்தும் நீங்கி இளமையான தோற்றத்தை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: பளிச்சிடும் முகத்திற்கு புளி

திராட்சை பழத்தை நாம் உண்ணும்பொழுது பல அற்புதமான சத்துக்கள் நம் உடம்பிற்கு கிடைக்கிறது என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு நம் முகத்தில் தடவுவதன் மூலம் முகச் சருமமும் சிறப்பாக இருக்கும் என்பதும் உண்மையே.

- Advertisement -