பளிச்சிடும் முகத்திற்கு புளி

puli beauty tips
- Advertisement -

நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் எப்படி நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறதோ அதே போல் அதே பொருட்களை நம்முடைய சருமத்திற்கு நாம் பயன்படுத்தும் பொழுது நம்முடைய சரும ஆரோக்கியத்தையும் அது பராமரிக்கிறது என்பதை உணர்ந்து செயலாற்றினால் கண்டிப்பான முறையில் எந்தவித செலவுகளும் இல்லாமல் எளிமையான முறையில் நம்முடைய அழகை நம்மால் தக்க வைத்துக்கொள்ள முடியும்.

எப்பேர்பட்ட அழகு சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அந்தப் பிரச்சினையை சரி செய்வதற்கு நம்முடைய சமையலறை ஒன்றே போதும். சமையலறையில் இல்லாத மருத்துவ குணமிக்க பொருட்கள் வேறு எங்குமே கிடையாது என்று தான் கூற வேண்டும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் புளியை வைத்து நம் முக அழகை எப்படி பராமரித்துக் கொள்ள முடியும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

பொதுவாக புளியை நாம் நம்முடைய சமையலில் குழம்பு வைப்பதற்காக அதிக அளவு பயன்படுத்துவோம். புளியில் பல விட்டமின்களும், ஆன்டி ஆக்சைடு, நார்ச்சத்து போன்றவை இருக்கின்றன. நம்முடைய முன்னோர்கள் இந்த புளியை பித்தளை பாத்திரங்கள் கழுவுவதற்கு உபயோகப்படுத்துவார்கள். அப்படி பித்தளை பாத்திரங்களை கழுவும் பொழுது புளியை வைத்து தேய்த்தால் பித்தளை பாத்திரத்தில் இருக்கக்கூடிய கருமை நீங்கி அந்த பாத்திரம் பளிச்சென்று புதிது போல இருக்கும். அதே போல் நம்முடைய முகத்தில் நாம் தடவும் பொழுதும் நம்முடைய முகமும் பிரகாசமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

முகம் பொலிவாக இருக்க
மூன்று ஸ்பூன் புளிக்கரைசலை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூளை கலந்து முகத்தில் நன்றாக தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ முகம் பொலிவாக இருக்கும்.

- Advertisement -

இறந்த செல்கள் நீங்க
இரண்டு ஸ்பூன் புளிக்கரைசலை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு கெட்டியான தயிரை ஊற்றி அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து கழுவ முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் அனைத்தும் நீங்கும்.

முகத்தின் நிறம் அதிகரிக்க
இரண்டு ஸ்பூன் புளிக்கரைசல் ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் இவை மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு முகத்தை கழுவ முகத்தின் நிறம் அதிகரிக்கும்.

- Advertisement -

கழுத்தை சுற்றி இருக்கும் கருமை நீங்க
புளிசாற்றுடன், தேன் மற்றும் பன்னீர் இவற்றை சேர்த்து நன்றாக கலந்து கருமை இருக்கும் இடங்களில் தேய்த்து மசாஜ் செய்து 15 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பிறகு கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு நான்கு முறை செய்வதன் மூலம் கழுத்தில் இருக்கக்கூடிய கருமை படிப்படியாக நீங்கும்.

இதையும் படிக்கலாமே: தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பச்சைப் பயறு

இதில் நாம் சேர்க்கக் கூடிய புளிக்கரைசல் ஆனது கெட்டியாக இருக்க வேண்டும். தண்ணியாக இருக்கக் கூடாது என்பது முக்கியமான குறிப்பு. இப்படி நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தக்கூடிய புளியை நம்முடைய முகத்தில் பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய முகம் என்றும் இளமையாகவும், அழகாகவும் திகழும்.

- Advertisement -