இந்தப் பொருளை வைத்தும் சுவையாக சமைக்க முடியுமா? என்று பலரும் ஆச்சரியப்படும் ஒரு இனிப்பு ரெசிபி!

alva
- Advertisement -

மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள வாழைமரத்தின் பாகங்கள் அனைத்துமே உண்ண கூடியதாகவே இருக்கும். வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைப்பழம் இவை அனைத்தையும் வைத்தது நாம் சமைத்திருப்போம். ஆனால் வாழை மரத்தில் இருக்கும் இலையை சாப்பாடு பரிமாறி சாப்பிடுவதற்காக மட்டுமே பயன்படுத்தி இருப்போம். இந்த வாழை இலையை பயன்படுத்தி எவ்வாறு சுவையான அல்வா செய்வது என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

valai-maram

தேவையான பொருட்கள்:
வாழை இலை – ஒன்று, சோள மாவு – கால் கப், சர்க்கரை – முக்கால் கப், நெய் – 50 கிராம், முந்திரி – 20.

- Advertisement -

செய்முறை:
ஒரு பெரிய வாழை இலையை நன்றாக கழுவி கொண்டு அதனை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வாழை இலை சாறை வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

valai

பின்னர் ஒரு கிண்ணத்தில், கால் கப் சோள மாவுடன் வடிகட்டி வைத்துள்ள வாழை இலை சாறையும் சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன்பின் அடுப்பை பற்ற வைத்து, அதன்மீது ஒரு கடாயை வைத்து, அதில் ஐந்து ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். நெய் நன்றாக உருகியதும் அதில் கரைத்து வைத்துள்ள சோள மாவினை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பின்னர் இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் சோள மாவு இறுகி கெட்டியாக தொடங்கும்.

alva-1

மாவு சற்று கெட்டியானவுடன் முக்கால் கப் சர்க்கரையை அதனுடன் சேர்த்து நன்றாக கலந்து கொண்டே வரவேண்டும். இடையிடையே நெய் சேர்த்து கை விடாமல் கலந்து விட வேண்டும். பத்து நிமிடங்கள் இவ்வாறு தொடர்ந்து கலந்து விட்ட பின்னர் அல்வா கடாயில் ஒட்டாமல் நன்றாக சுருண்டு வர ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் இறுதியாக ஒருமுறை சிறிதளவு நெய் சேர்த்து கிளறி விட்டு அல்வாவை இறக்கி வைக்க வேண்டும்.

பிறகு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து அதில் நெய் சேர்த்து அதனுடன் எடுத்து வைத்துள்ள முந்திரிகளையும் சேர்ந்து நன்றாக பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வறுத்த முந்திரிகளை அல்வாவுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் இதுவரை யாருமே செய்திராத பச்சை நிற சுவையான அல்வா தயார் ஆகிவிடும்.

alva-2

இதனை வீட்டில் உள்ளவர்களுக்கும், உங்கள் வீட்டிற்கு திடீரென வரும் விருந்தாளிகளுக்கும் இதனை செய்து கொடுத்தால் அனைவரும் உங்களை வியந்து கேட்பார்கள் எப்படி இந்த நிறத்தில் அல்வா செய்ய முடியும். இதில் என்ன சேர்த்துள்ளீர்கள்? இதன் சுவை அருமையாக உள்ளது. என்று பல கேள்விகள் உங்களை கேட்பார்கள். இதனை ஒருமுறை செய்து சுவைத்துப் பாருங்கள் நாவில் கரையும் இதன் சுவைக்கு நீங்களும் அடிமையாகி விடுவீர்கள்.

- Advertisement -