மேக்கப் போட்டால் தான் ஹீரோயின் கூட அழகு. மேக்கப் போடாமலேயே நீங்கள் ரியல் ஹீரோயினாக மாற 1 ஸ்பூன் கிரீன் டீ தூள் போதுங்க. 3 நாட்களில் ரிசல்ட் கண்ணாடி முன்பு தெரியும்.

face5
- Advertisement -

நிறைய பேருக்கு தங்களுடைய முகம் சினிமா நடிகைகளின் முகம் போல பொலிவாக அழகாக எந்த மங்கு மாசும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு மேக்கப் போட்டு நம்முடைய முகத்தை அழகு செய்யக்கூடாது. மேக்கப் போடாமலேயே நம்முடைய முகத்தை அழகாக மாற்ற வேண்டும். அதற்கு இயற்கையான ஒரு சீரம் சுலபமான முறையில் நம் வீட்டிலேயே, குறைந்த செலவில் தயாரிப்பது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்

உங்களுக்கு உங்கள் அழகின் மீது அதிக ஆர்வம் இருந்தால், இந்த டிப்ஸ் உங்களுக்காக மட்டும். ஒரு சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து விடுங்கள். 1 சிறிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் கிரீன் டீ தூள் – 1 ஒரு ஸ்பூன், அதிமதுரப் பொடி – 1 ஸ்பூன், சேர்த்து இந்த தண்ணீரை மிதமான தீயில் நன்றாகக் கொதிக்க வையுங்கள். 1 டம்ளர் தண்ணீர், 1/2 டம்ளர் தண்ணீர் அளவு சுண்டி வரட்டும்.

- Advertisement -

அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த தண்ணீர் நன்றாக ஆறிய பின்பு ஒரு வடிகட்டி மூலம் வடிகட்டிக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரோடு 1 ஸ்பூன் – அலோ வேரா ஜெல் சேர்த்து நன்றாக கலந்து விட்டால் லேசாக திக்காக நமக்கு ஒரு சீரம் கிடைத்திருக்கும். இதை ஒரு காய்ந்த பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து பிரிட்ஜில் வைத்துக் கொண்டால் 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு இந்த சீரமை விரல்களால் தொட்டு உங்களுடைய முகத்தில் அங்கங்கே புள்ளிகளாக வைத்து லேசாக அப்படியே தடவி விட்டு விடுங்கள். இந்த ஜெல்லை உங்களுடைய முகம் அப்படியே உறிஞ்சிக் கொள்ளும். கண்ணை சுற்றி கருவளையம் இருந்தால், அந்த இடத்தில் கொஞ்சம் அதிகமாக வைத்துக் கொள்ளலாம். வாயை சுற்றி கருவளையம், நெற்றியில் அதிக கருப்பு இருந்தால், அந்த இடத்தில் கொஞ்சம் கூடுதலாக போட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். இரவு நீங்க தூங்கச் செல்லலாம். மறுநாள் காலை குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடுங்கள்.

- Advertisement -

தினமும் இதை இரவு நேரத்தில் நீங்கள் உங்களுடைய முகத்தில் போட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் பகலில் வீட்டிலேயே இருப்பவர்களாக இருந்தால், பகலிலும் இந்த ஜெல்லை பயன்படுத்திக் கொள்ளலாம் தவறு கிடையாது. தினம்தோறும் இந்த ஜெல்லை முகத்தில் போட்டு வர முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், பருக்கள், தழும்புகள், படிப்படியாக குறையத் தொடங்கி விடும்.

சருமத்தின் நிறம் அதிகரிக்கும். பிறகு உங்கள் முகத்தில் இருக்கும் பிரச்சனைகளை மேக்கப் போட்டு மறைத்து நீங்கள் ஹீரோயின் போல மாற வேண்டாம். ரியல் ஆகவே நீங்கதான் ஹீரோயின். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -