உங்க வீட்டு பூஜை அறையில் அன்னபூரணியை இதன் மேல் அமர வையுங்கள். பல தலைமுறைக்கு பஞ்சம் என்ற வார்த்தையே குடும்பத்தில் இருக்காது.

annapurna
- Advertisement -

நமக்கும் சரி, நமக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கும் சரி, பணம் காசுக்கு முன்பின் கஷ்டம் வந்தாலும், ஒருபோதும் வீட்டில் தானியத்திற்கு பஞ்சம் என்பது வரவே கூடாது. அதாவது பண கஷ்டம் வந்து போகலாம். ஆனால் தானியம் வாங்குவதற்கு வழியில்லை என்ற நிலைமை மட்டும் ஒருபோதும் வரக்கூடாது. இந்த மாதம் முழுவதும் வீட்டில் இருப்பவர்கள் வயிறு நிரம்ப சாப்பிட தேவையான அத்தனை பொருட்களும் நிறைவாக இருக்கிறது என்ற நிலைமை ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும். அடுத்த வேலைக்கு அரிசி இல்லையே அடுத்த வேலைக்கு பருப்பு இல்லையே சமைப்பதற்கு, என்ற யோசனை வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வரவே கூடாது. இன்று உலகம் போகின்ற போக்கை பார்த்தால் கையில் காசு பணம் நிறைய இருக்கும் போல. ஆனால் சமைத்து சாப்பிட அரிசி பருப்பு தானியம் இருக்குமா என்பது தான் சந்தேகம்.

வீட்டில் இருப்பவர்கள் பசி பட்டினி பஞ்சம் என்ற வார்த்தையை கேட்கக் கூடாது என்றால் முதலில் விவசாயத்தை நாம் பாதுகாக்க வேண்டும். அடுத்தபடியாக ஒவ்வொரு வீட்டிலும் அன்னபூரணியை வழிபாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக அன்னபூரணியின் சிலை இருக்க வேண்டும். இந்த அன்னபூரணி சிலை வழிபாட்டில் ஒரு பிரத்தியேகமான வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் அரிசியை அளப்பதற்கு ஆழாக்கு, படி, அரைப்படி இருக்கிறது அல்லவா. அதேபோலத்தான் ஒவ்வொரு வீட்டு பூஜை அறையிலும் லக்ஷ்மி குபேர குஞ்சம் இருக்க வேண்டும். இதில் சங்கு சக்கரம் நாமம் பதிக்கப்பட்டு இருக்கும். பார்ப்பதற்கு இதுவும் படி போல தான் இருக்கும். எல்லா உலோகத்திலும் இது நமக்கு கிடைக்கிறது. செம்பு, பித்தளை, வெள்ளி, இப்படி உங்களுடைய தகுதிக்கு உங்களால் எதை வாங்க முடியுமோ அதை வாங்கிக் கொள்ளலாம். குறிப்பாக வெள்ளியில் இந்த குபேர குஞ்சம் வாங்குவது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை நிறைவாக கொடுக்கும்.

வாங்கிய இந்த குபேர குஞ்சத்தை தண்ணீரில் சுத்தமாக கழுவி விட்டு, மஞ்சள் குங்குமம் போட்டு வைத்து அதற்கு உள்ளே பச்சரிசியால் முழுவதும் நிரப்பி விட வேண்டும். நிரப்பிய பச்சரிசியின் மேல் அன்னபூரணியை அமர வைப்பது நம்முடைய குடும்பத்திற்கு அத்தனை நல்லது. எந்த வீட்டில் அன்னபூரணி தாய் இந்த குபேர குஞ்சத்தின் மேல் சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொண்டிருக்கிறாளோ அந்த வீட்டில் நிச்சயமாக வறுமை எட்டி பார்க்காது.

- Advertisement -

தினமும் காலையில் எழுந்து வீட்டில் இருக்கும் பெண்கள் சமைப்பதற்கு முன், இந்த அன்னபூரணி தாயை ஒரு முறை வணங்கிவிட்டு, தீபம் ஏற்றி வைத்துவிட்டு பின்பு சமைக்க செல்ல வேண்டும். நீங்கள் சமைக்கக்கூடிய உணவும் ருசிக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும். சில பேர் வீட்டில் சாப்பாட்டில் தோஷம் இருக்கும்.

சமைக்கும் சாப்பாடு ருசியாகத்தான் இருக்கும். ஆனால் வீட்டில் இருப்பவர்கள் அந்த சாப்பாட்டை விரும்பி சாப்பிடவே மாட்டார்கள். சமைத்த சாப்பாடு அத்தனையும் நிறைய வீணாகும். இப்படிப்பட்ட தோஷம் இருந்தால் கூட அது சரியாக வேண்டும் என்று இந்த அன்னபூரணி தாயை மனதார வேண்டிக் கொண்டு தினமும் சமைத்தால் நீங்கள் சமைத்த சாப்பாட்டை வீணாகாமல், வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பசித்து சாப்பிடுவார்கள்.

சில பேர் வீட்டில் அன்னபூரணியின் திருவுருவப்படம் இருக்கும். அப்படி இருந்தால் அதற்கு முன்பாக ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சரிசியை நிரப்பி வைக்கலாம். நிறைய பேர் அன்னபூரணி சிலையை ஒரு கிண்ணத்தில் பச்சரிசி போட்டு அதன் மேலே வைத்திருப்பார்கள். அதுவும் தவறு கிடையாது. இருப்பினும் இந்த குபேர குஞ்சத்தில் வைக்கும் போது உங்களுக்கு பலன் இரட்டிப்பாக கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது அவ்வளவு தான்.

மேலே சொன்ன குறிப்புகளை பின்பற்றி பாருங்கள். உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டத்திற்கு நிச்சயமாக நல்லதொரு மாற்றம் தெரியும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -