நல்ல பிள்ளை பெற்ற குணவதி அம்மன் கோவில் சிறப்பு

amman1
- Advertisement -

நீங்கள் கர்ப்பிணி பெண்களாக இருந்தால் உங்களுக்கு சுகப்பிரசவம் ஆக, இந்த அம்பாளை வழிபாடு செய்யலாம். அதேசமயம் உங்களுக்கு பிறக்கும் பிள்ளை நல்ல குணத்தோடு பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டும், இந்த அம்பாளை வழிபாடு செய்யுங்கள். நல்லபடியாக சுகப்பிரசவத்தில் அழகான குழந்தை பிறக்கும்.

குழந்தை பிறந்த பிறகு பெற்றவர்களுக்கு இருக்கும் பிரச்சனை பிள்ளைகள் சொல் பேச்சு கேட்பது கிடையாது. ஊதாரித்தனமாக இருக்கிறது. அம்மா அப்பாவை மதிப்பது இல்லை. வீட்டு கஷ்டத்தை புரிந்து கொண்டு நடப்பது கிடையாது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் வரும். இந்த பிரச்சனை ஒரு எல்லையை தாண்டும் போது குடும்பத்தில் பெரிய பிரளயமே உண்டாகும்.

- Advertisement -

இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் இந்த அம்பாளை வழிபாடு செய்யணும். அது எந்த அம்பாள், அந்த கோவிலில் எங்கு இருக்கிறது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நல்ல பிள்ளை பெற்ற குணவதி அம்மன் கோவில்

மதுரையில் வாழ்ந்த ஒரு வியாபாரியின் கதை இது. அந்த வியாபாரிக்கு திருமணம் நடந்து, அவன் மனைவி கர்ப்பவதியாக இருக்கின்றாள். நிறைமாதம், ஆனால் பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்கு செல்லவில்லை. அம்மா வீட்டில் பிரசவம் பார்க்க வசதி இல்லை. கணவர் வீட்டிலேயே தங்கி இருந்து பிரசவிக்க இருக்கிறாள்.

- Advertisement -

ஆனால் கணவர், இந்த மனைவியை எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கின்றான். பிரசவத்துக்கு இங்கேயே இருக்கிறாயே, அம்மா வீட்டுக்கு போகலையே என்று. மனம் வருந்திய இந்த நிறைமாத கர்ப்பிணி பெண் அப்படியே வீட்டை விட்டு வெளியே சென்று தாமிரபரணி ஆத்தங்கரையோரம் நடக்க தொடங்கினாள். இவளுக்கு பிரசவ வலியும் வந்தது. முத்தாலங்குறிச்சி என்னும் இடத்தில் மயங்கி விட்டாள்.

அம்மா தாயே என்று குரலை எழுப்பிய படி மயங்கிய இவளை காப்பாற்ற ஒரு வயதான மூதாட்டி அந்த பக்கம் வந்து, இவளை ஒரு குடிசைக்கு எடுத்துச் சென்று நல்லபடியாக பிரசவமும் பார்த்து விட்டார்கள். தன் மனைவியை தேடி வந்த வியாபாரிக்கு ஒரு பெண் வழி காட்டுகிறாள்.

- Advertisement -

இந்த வியாபாரி தன்னுடைய மனைவியிடம் சென்று மனம் வருந்தி மன்னிப்பும் கேட்டு விட்டான். கணவனும் மனைவியும் பெற்றெடுத்த பிள்ளையோடு, தனக்காக உதவி செய்த பிரசவம் பார்த்த அந்த வயதான மூதாட்டியை பார்த்து நன்றி சொல்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரவு நேரமும் வந்துவிட்டது. இருவரும் கண் அசந்த சமயத்தில் ஒரு அசிரிதி குரல் கேட்டது. உன் மனைவியை காப்பாற்றிய பிரசவம் பார்த்த நான் ‘குணவதி அம்மன்’ என்று கூறிவிட்டு, அந்த தோற்றம் மறைந்து விட்டது. அப்போதுதான் அவர்களுக்கு தெரிந்தது அம்பாள் தான் இந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து காப்பாற்றியது என்று.

அந்த பெண்ணுக்கு பிரசவம் நடந்த குடிலில், இந்த அம்பாளுக்காக, ஒரு கோவிலை கட்டி, அந்த இடத்தில் இந்த அம்மாளை பிரதிஷ்டை செய்து, வழிபட்டதாக வரலாறு கதை சொல்கிறது. அந்த நாளில் இருந்து இந்த அம்பாளை ‘நல்ல பிள்ளை பெற்ற குணவதி அம்மன்’ என்றே அழைக்கிறார்கள்.

அம்பாளே வந்து பிரசவம் பார்த்ததால் இந்த அம்பாளின் பெயரை தினமும் சொல்லி வழிபாடு செய்யும் பெண்களுக்கு சுகப்பிரசவம் நடக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. ‘நல்ல பிள்ளை பெற்ற குணவதி அம்மையே எனக்கும் சுகப்பிரசவம் வேண்டும்’ என்று தினமும் சொல்லி கர்ப்பிணி பெண்கள் வழிபடலாம். வீட்டில் இருந்தபடியே வழிபடலாம்.

அது மட்டும் இல்லாமல் உங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை நல்ல பிள்ளையாக நல்ல குணத்தோடு பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் பேச்சைக் கேட்காத பிள்ளையை ஒரு முறை இந்த கோவிலுக்கு அழைத்துச் சென்று வந்தால் அந்த பிள்ளைகள் நல்வழிப்படும் என்பதும் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமியின் அருள் கிடைக்க பரிகாரம்

சரி இந்த கோவில் எங்கே இருக்கிறது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் செய்துங்கநல்லூர் என்னும் ஊரிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் முத்தாலங்குறிச்சியில் இந்த கோவில் அமைந்துள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்று இந்த அம்பாளை வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

- Advertisement -