குரு பகவானால் ராஜயோகம் பெறப்போகும் ராசிகள்

guru cash
- Advertisement -

குரு பார்க்கின் கோடி நன்மை உண்டு. இந்த வார்த்தையை கேள்விப்படாதவர் யாரும் இருக்க முடியாது. குரு பகவான் ஒருவருடைய ராசியில் உச்சம் பெற்று விட்டார் எனில் அந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி தான். ஆகையால் தான் இந்த வார்த்தை இன்றும் நம் வழக்கத்தில் உள்ளது.

நவகிரகங்களில் மங்கள கிரகம் என்று போற்றப்பட கூடியவர் இந்த குரு பகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெறும் நேரத்தில் அந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலையை மேம்படுத்தும். குழந்தை பாக்கியம், திருமண தடை, வேலைவாய்ப்பு என ஒரு மனிதன் செல்வ நிலையை அடைவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்கித் தருவார்.

- Advertisement -

அந்த குரு பகவான் தற்போது மேஷ ராசியில் இருக்கிறார். வரும் அக்டோபர் 28ஆம் தேதி அன்று சந்திர பகவானும் மேஷ ராசி சங்கமிக்க இருக்கிறார். இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றாக சேர்க்கின்ற காரணத்தினால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் பெருக உள்ளது. அதை பற்றிய தகவலை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

இந்த ராசிக்காரர்களுக்கு குருபகவானால் பல நற்பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு கிடைப்பதுடன் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். புதிய தொழில் தொடங்குபவர்கள் தொடங்கலாம், இதுவரை போட்ட முதலீடுகள் அதிக லாபத்தை பெற்று தரும். குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கிய சீர்கேடுகள் சரியாகி நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இல்லாமல் பணம் பல வழிகளில் வரும்.

- Advertisement -

மேஷ ராசி

இப்பொழுது நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியைத் தரும். கடின உழைப்பு நல்ல லாபத்தை பெற்று தரும். குழந்தைகளால் நல்ல செய்திகள் வருவதோடு, உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் கைகூடும். வீட்டிலும், உங்களை சுற்றியும் எப்பொழுதும் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடிய காலக்கட்டம் இது.

கடக ராசி

இவர்களுக்கு புதிய வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். இதனால் வருமானங்கள் பெருகுவதோடு மகிழ்ச்சியான சூழ்நிலை அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவு அதிர்ஷ்டம் எல்லாம் உங்களை தேடி வரக்கூடிய முக்கியமான காலக்கட்டம் இது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஆகையால் வேலைக்கான முயற்சியை உடனே எடுத்தால் பலன் உண்டு.

இதையும் படிக்கலாமே: உங்க ராசிப்படி நீங்க எந்த முருகர் கோவிலுக்கு போனா அதிர்ஷ்டம் அடிக்கும் தெரியுமா?

நவகிரகங்களின் ஒவ்வொரு மாற்றமும் ஒவ்வொரு ராசிகளுக்கு நற்பலனையும் கெடுப்பலனையும் கொடுக்கும். அந்த வகையில் குரு சந்திர சேர்க்கையால் நன்மை பெற போகும் சில ராசிகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இது ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான தகவலின்படி கணிக்கப்பட்டுள்ளது. அவரவரின் கிரக சூழ்நிலைக்கு ஏற்ப இதில் சற்று மாறுதலும் இருக்கும்.

- Advertisement -