குரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – கும்பம்

guru-peyarchi-palan-kumbam
- Advertisement -

கும்பம் ராசி : (அவிட்டம் 3, 4ஆம் பாதம், சதயம் பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்)
சுப கிரகமாக விளங்கும் குரு பகவான் பெயர்ச்சியாகும் பொழுது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் நிச்சயம் தங்களுடைய ராசிக்கு அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற ஆர்வம் இருக்கும். அவ்வகையில் வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி கார்த்திகை மாதம் 5ஆம் நாள் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். அவரால் கிடைக்கப் போகும் சாதக, பாதகங்கள் கும்ப ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும்? என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

மகர ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் சனியின் ஆட்சி வீடான மகரத்தில் சேர்ந்து இருப்பதால் நீசம் அடைகிறார். கும்ப ராசிக்காரர்களுக்கு குருபகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் இடத்தில் இருந்து கொண்டு 4, 6, 8 ஆகிய இடங்களில் அவருடைய பார்வை விழுகிறது. ஆகவே கும்ப ராசியை பொறுத்தவரை இந்த குரு பெயர்ச்சியானது நல்லது கெட்டது என இரண்டும் கலந்த கலவையாக நடைபெற போகிறது. ஆடம்பர மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களில் மனம் அலை பாய்வதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய பேச்சு மற்றவர்களுக்கு புரியும் வண்ணம் இருக்க வேண்டும். தெளிவில்லாத பேச்சால் தேவையற்ற வம்பு வழக்குகளில் மாட்டி கொள்ள நேரலாம். பொருளாதாரத்தில் ஏற்றம் இருந்தாலும், வரவுக்கு ஏற்ற செலவுகள் கட்டுக்குள் கொண்டு வரும் திறமையை வளர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். வீண் விரயங்களை தவிர்த்து திட்டமிட்டு செயல்பட்டால் முன்னேற்றம் நிச்சயம்.

- Advertisement -

உத்தியோகம் மற்றும் தொழில்:
குரு பெயர்ச்சிக்கு பிறகு தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் சூடு பிடிக்கத் தொடங்கும். நீங்கள் எதிர்பாராத அளவிற்கு லாபமும் நிச்சயம் இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி அடுத்த படிக்கு செல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களின் திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடப்பதில் காலதாமதம் ஆனாலும் வெற்றி நிச்சயம் உங்கள் பக்கம் தான் இருக்கும். மேல் அதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். அனைவரும் பாராட்டும் வண்ணம் நடந்து கொள்வீர்கள்.

பொருளாதாரம்:
பொருளாதாரம் பொறுத்தவரை வருகின்ற குரு பெயர்ச்சிக்கு பிறகு சிறப்பாகவே அமைய இருக்கிறது. விரும்பியதை அடைய கடினமாக முயற்சிகள் மேற்கொள்வீர்கள். எதற்கு செலவு செய்தால் நல்லது? என்பதை திட்டமிட்டு செலவு செய்தால் பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். அத்தியாவசிய தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வமாக இருப்பீர்கள். வீண் விரயங்களை சுப விரயமாக மாற்றிக் கொண்டால் முன்னேற்றம் நிச்சயம்.

- Advertisement -

குடும்ப வாழ்க்கை:
குடும்ப உறவுகளைப் பொறுத்தவரை அடிக்கடி மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய கருத்தும் மற்றவர்களின் கருத்தும் பெரும்பாலும் ஒத்துப் போகாத காரணத்தினால் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். இதில் யாராவது ஒருவருக்கு புரிதல் இருந்தால் சுலபமாக சமாளித்து விடலாம். எந்த ஒரு விஷயத்தையும் சட்டென முடிவெடுக்காமல் ஆழமாக யோசித்து பின்னர் முடிவெடுப்பது நலம் தரும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் புரிதல் அதிகரித்துக் கொள்ள வாய்ப்புகள் உண்டாகும். அதனை சரியாக பயன்படுத்தினால் மன நிம்மதி கிடைக்கும்.

ஆரோக்கியம்:
சுவாசப் பிரச்சனை, அஜீரண கோளாறு, மன அழுத்தம் போன்றவை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உணவு கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியம் காட்டினால் பின்னர் நீங்கள் தான் அல்லல்பட நேரிடும் என்பதை உணர வேண்டும். தேவையான ஓய்வு அவ்வ போது எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

- Advertisement -

செய்ய வேண்டிய பரிகாரம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியில் குரு தட்சிணாமூர்த்தியை வழிபட நன்மைகள் நடைபெறும். ஆலயத்தில் மஞ்சள்நிற கொண்டைக்கடலை தானம் செய்து வர யோகம் பெறலாம். ஊனமுற்றவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய நல்லது நடக்கும்.

இதையும் படிக்கலாமே
குரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – மகரம்

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -