குரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – மீனம்

guru-peyarchi-palan-meenam

மீனம் : (பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
சுப கிரகமாக விளங்கும் குரு பகவான் பெயர்ச்சியாகும் பொழுது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் நிச்சயம் தங்களுடைய ராசிக்கு அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற ஆர்வம் இருக்கும். அவ்வகையில் வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி கார்த்திகை மாதம் 5ஆம் நாள் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். அவரால் கிடைக்கப் போகும் சாதக, பாதகங்கள் மீன ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும்? என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

Meenam Rasi

மகர ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் சனியின் ஆட்சி வீடான மகரத்தில் சேர்ந்து இருப்பதால் நீசம் அடைகிறார். மீன ராசிக்காரர்களுக்கு குருபகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் இடத்தில் இருந்து கொண்டு 3, 5, 7 ஆகிய இடங்களில் அவருடைய பார்வை விழுகிறது. ஆகவே மீன ராசியை பொறுத்தவரை இந்த குரு பெயர்ச்சியானது நல்ல யோகமான பலன்களை தர போகிறது. செல்வ வளம் மற்றும் ஆரோக்கியத்தில் குறைவில்லாமல் நிறைந்த முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத வகையில் உங்களுக்கு பணவரவு கிடைக்கக்கூடும். எடுத்த முயற்சிகளில் அமோக வெற்றி பெறுவீர்கள். தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான காலமாக இந்த குரு பெயர்ச்சியின் பொழுது நீங்கள் சிறப்பான பலன்களை காணப்போகிறீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களின் ஒத்துழைப்பு முழுமையாக உங்களுக்கு கிடைக்கும். ஒரு விஷயத்தில் ஈடுபட்டால் அதைப் பற்றிய முழுமையான தெளிவை உருவாக்கிக் கொள்ள நினைக்கும் மீன ராசிக்காரர்களுக்கு வருகின்ற இந்த குருபெயர்ச்சி ஆனது நிச்சயம் யோகம் தரும்.

உத்தியோகம் மற்றும் தொழில்:
தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நினைத்ததை விட சிறப்பான லாபம் கிடைக்கும். உங்களுடைய விடாமுயற்சிக்கு விஸ்வரூப வெற்றியாக இனி வரும் காலங்களில் பல நல்ல விஷயங்களை பெற போகிறீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் வருமானம் கணிசமாக உயரும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய பொறுப்புகள் கிடைத்து அதனை சிறப்பாக செய்து காட்டுவதன் மூலமாக உங்களுடைய அதிகாரம் உயரக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. பணியிடங்களிலும், குடும்பத்திலும் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும்.

Guru peyarchi palangal Meenam
Guru peyarchi palangal Meenam

பொருளாதாரம்:
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை மீன ராசிக்காரர்களுக்கு ஏற்றம் தரும் வகையில் அமைய இருக்கிறது. பணம் பல வழிகளில் வந்து பாக்கெட்டை நிரப்பும். பணப்பற்றாக்குறை ஏற்படும் பொழுது ஏதாவது ஒரு ரூபத்தில் உங்களுடைய கைக்கு வேண்டிய தொகை கிடைத்துவிடும். நிலுவையில் இருக்கும் பழைய பாக்கிகள் வசூலாகிவிடும். கடன் தொல்லையில் இருப்பவர்களுக்கும் அதிலிருந்து விடுபடும் சந்தர்ப்பங்கள் அமையும். புதிய பொருள் சேர்க்கை, வீடு-மனை போன்ற யோகம் ஒரு சிலருக்கு கிடைக்கப்பெறும்.

குடும்ப வாழ்க்கை:
குடும்ப உறவுகளைப் பொறுத்தவரை மீன ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான பல தருணங்கள் கிடைக்கப்பெறும். தடைப்பட்ட திருமணங்கள் மற்றும் சுபகாரியங்கள் கைகூடி வரும் யோகமுண்டு. வீட்டில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து பரஸ்பர ஒற்றுமை இருக்கும். புதிய நபர்களின் வருகையால் இல்லத்தில் குதூகலம் காணப்படும். பிள்ளை வரம் வேண்டுவோருக்கு நல்ல செய்தி கிடைக்கும். விரயங்கள் பல சுப விரயங்களாகவே உங்களுக்கு வந்து சேரும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் எட்டாக். கனியையும் சுலபமாக எட்டி விடுவீர்கள்.

- Advertisement -
Guru peyarchi palangal Meenam
Guru peyarchi palangal Meenam

ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தில் வருமுன் காப்பதே சிறந்தது. குரு பெயர்ச்சி, உங்களுக்கு சாதகமான காலகட்டம் என்பதால் சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்புகள் இல்லாமல் விரைவாகவே குணம் அடைந்து விடுவீர்கள். உணவு கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் போதும். நீண்ட நாள் உடல் உபாதைகள் கூட சரியான மருத்துவத்தை மேற்கொண்டால் இந்த காலகட்டத்தில் நிவர்த்தியாகிவிடும்.

guru

செய்ய வேண்டிய பரிகாரம்:
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை குருபகவான் யோகத்தை தருவதால் வியாழன் கிழமை அன்று குரு பகவானை வணங்கி, தட்சிணாமூர்த்திக்கு விளக்கு ஏற்றி வந்தால் நல்லது நடக்கும். வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுத்து வழி அனுப்புங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலும் முதியவர்களுக்கு ஒருவேளை சாப்பாடு வாங்கி கொடுங்கள் அதிர்ஷ்டங்கள் பெருகும்.

இதையும் படிக்கலாமே
குரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – கும்பம்

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.