குரு பெயர்ச்சி பலன்கள் 2018 மீனம்

guru-peyarchi

மீனம்:

meenam

எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து காட்டும் மீன ராசிக்காரர்களே, 04-10-2018 அன்று உங்கள் ராசிக்கு 9 ஆம் இடத்தில் குரு பெயர்ச்சியாகவிருப்பதால் கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரும். உங்களை விட்டு விலகி சென்றவர்களும் உங்களிடம் வலிய வந்து நட்பு பாராட்டும் நிலையை உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். குடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். 13-2-2019 அன்று ஏற்படும் ராகு – கேது பெயர்ச்சியால் சிலருக்கு அவ்வப்போது சிறு பிரச்சனைகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் உண்டானாலும் பெரிய அளவில் தீமையான பலன்கள் ஏதும் ஏற்படாது. உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது சிறந்தது. உத்தியோகிஸ்தர்களுக்கு விரும்பிய பணியிட மாறுதல்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வுகளும் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும். பிள்ளையில்லாதவர்களுக்கு பிள்ளைகள் பிறக்கும். நீங்கள் எதிர்பாரா உதவிகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும்.

நீண்ட நாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் நோய்கள் நீங்கும்.குழந்தைகள் வழியில் அவ்வப்போது மருத்துவ செலவுகள் ஏற்படும். அவ்வப்போது மனம் சற்று குழப்ப நிலையில் இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும். குடும்பத்தினர் விரும்பிய பொருட்கள் அனைத்தையும் வாங்கி தருவீர்கள். கான்ட்ராக்ட் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அரசாங்க டெண்டர், கான்ட்ராக்ட் போன்றவை கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் கடும் போட்டி நிலவினாலும் உங்களுக்குண்டான லாபத்தில் எந்த ஒரு பங்கமும் ஏற்படாது.

பணியிடங்களில் கெடுபிடியான உயரதிகாரிகள் வேறு இடங்களுக்கு மாற்றமாகி செல்லக்கூடும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பதவி உயர்வும் ஊதிய உயர்வுகளையும் பெறுவீர்கள். வேலை தேடி அலைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய பணியே கிடைக்கும் நிலை உண்டாகும்.பொது வாழ்வில் உள்ளார்கள் தங்களின் எதிர்கட்சிகளை தங்களின் திறமையான செயல்பாடுகளால் ஸ்தம்பிக்க செய்வார்கள்.கட்சிகளில் உயர்ந்த பதவிகள் சிலருக்கு கிடைக்கும். விவாசியிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். அரசு வழியில் கடன் உதவிகளும் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். மாணவ மாணவியர் கல்வியில் ஆர்வமுடன் படித்து சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள்.

Guru peyarchi palangal Meenam
Guru peyarchi palangal Meenam

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்

பொருளாதார நிலை மேன்மையடையும். உத்தியோகிஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் நன்மதிப்புகளையும் பெற்று பதவி உயர்வு, ஊதிய உயர்வுகளை பெறுவார்கள். தொழில் வியாபாரங்களில் சிறந்த லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும் வெளிநாட்டு பயணங்களால் நல்ல ஆதாயம் இருக்கும். நீண்ட நாட்களாக திருமணம் தாமதம் ஆனவர்களுக்கு திருமணம் நடக்கும். குடும்பத்தில் அனைத்து தேவைகளும் பூர்த்தியடையும்.

- Advertisement -

குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-12-2018 வரை இருக்கும் கால பலன்கள்

திருமண முயற்சிகள் வெற்றி பெற்று நல்ல முறையில் திருமணம் நடக்கும். தொழில் வியாபாரங்களில் சிறப்பான லாபங்களை பெறுவீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள். நண்பர்களால் பொருள்வரவு ஏற்படும். கொடுத்த கடன்களை சுமூகமாக வசூல் செய்ய முடியும். பணியாளர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு முழுவதுமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சங்களும் நிறைந்திருக்கும்.

தினம்தோறும் ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21-12-2018 முதல் 12-3-2019 வரை இருக்கும் கால பலன்கள்

குடும்பத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். எதிலும் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும் அவசரத்தன்மையை குறைத்துக்கொள்வது நல்லது. உறவினர்களோடு உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் தீரும் .உடல் ஆரோக்கியம் அவ்வப்போது பாதிப்படையும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் சிலருக்கு ஏற்படும். தொலைதூர பயணங்களை சிலர் மேற்கொள்வார்கள். மாணவர்கள் கல்வியில் சற்று மந்த நிலையை அடைவார்கள்.

Guru peyarchi palangal Meenam
Guru peyarchi palangal Meenam

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 13-3-2019 முதல் 9-4-2019 வரை இருக்கும் கால பலன்கள்

தொழில் வியாபாரங்களில் உங்களின் மறைமுக எதிரிகள் நீங்கி உங்களுக்கு நன்மைகளும் ஏற்படும். புதிய சொத்துகளை வாங்கும் போது பலமுறை யோசிப்பது நல்லது. ஆடம்பர செலவுகள் செய்வதை ததவிர்க்க வேண்டும். பிறருக்கு கடனாக கொடுத்த பணம் வட்டியுடன் உங்களுக்கு வந்து சேரும். எதிர்பாரா உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். சுப காரிய முயற்சிகளுக்கான பொருள் விரயம் சிலருக்கு ஏற்படும். குழந்தைகள் வழியில் சிலருக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

குரு பகவான் வக்ர கதியில் 10-4-2019 முதல் 6-8-2019 வரை

சராசரியான அளவில் தடையின்றி பொருள் வரவு இருக்கும். தொழில் வியாபார காரணங்களால் சிலருக்கு கடன் வாங்கக்கூடிய சூழல் உண்டாகும். குடும்பத்தின் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். சிலர் வெளிநாடுகளுக்கு பணிபுரிய செல்லும் யோகம் ஏற்படும். உடல் நலம் நன்றாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சாதனைகள் செய்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவார்கள். உடன் பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களோடு ஒற்றுமை நிலவும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 7-08-2019 முதல் 28-10-2019 வரை இருக்கும் காலம்

மாணவர்கள் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள். அடிக்கடி உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். பணியிடங்களில் தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரங்களில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் நல்ல லாபத்தை பெற முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் பூர்வீக சொத்துகளை அடைவதில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி அவை உங்களை வந்தடையும்.

பரிகாரம்

உங்கள் ராசிக்கு சனி பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வடைமாலை சாற்றி வழிபட்டு வருவது நல்லது. மேலும் சனிக்கிழமையில் திருப்பதி திருமலை வெங்கடாசலபதியை வழிபடுவதும் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். ஏழைகளுக்கும், துறவிகளுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானங்கள் செய்வது சிறந்த பரிகாரம் ஆகும். துர்க்கையையும் விநாயகரையும் வழிபட்டு வர நன்மைகள் நடக்கும்.