குரு பெயர்ச்சி பலன்கள் 2018 ரிஷபம்

Guru peyarchi rishabam

ரிஷபம்:

Rishabam Rasi

தன்னை எப்போதும் அழகாக காட்டிக்கொள்வதில் அக்கறை கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு 04-10-2018 அன்று ரிஷப ராசிக்கு 7 ஆம் இடத்தில் குரு பகவான் பெயர்ச்சியாக இருப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்டு கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். புத்திர பேறில்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வீடு, வீட்டு மனை மற்றும் அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். உடல் நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மறையும். முன்கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும். 13-2-2019 அன்று ஏற்பட இருக்கும் ராகு-கேது பெயர்ச்சிகளுக்கு பின்பு எல்லா வகையிலும் நன்மையான பலன்களை அதிகம் பெற முடியும். உறவினர்களிடையே சிறு கருத்து வேறுபாடுகளும் ஒற்றுமை குறைவுகளும் ஏற்படலாம். தொழில், வியாபாரங்களில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும்.

பெரும்பாலான காலம் உடல் நலம் நன்றாக இருக்கும் என்றாலும் அவ்வப்போது சிறிது நோய்வாய்ப்பட்டு மீண்டும் குணமாகும் நிலையிருக்கும். சொந்தக்காரர்கள் எவருக்கேனும் மருத்துவ உதவிகளை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். உணவு விடயங்களில் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். குடும்பத்தின் பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும். பொன், பொருள், ஆபரண சேர்க்கை உண்டாகும். புதிய வீடு மற்றும் புதிய வாகனங்களை வாங்கும் யோகம் நிறைவேறும். கடந்தகாலங்களில் வாங்கிய கடன்களை அடைத்துவிடுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்கள் கொடுத்த தொகையை வட்டியுடன் திரும்ப பெறுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் தாமதங்கள் ஏற்பட்டாலும் வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும்.

தொழில், வியாபாரங்களில் போட்டிகள் இருந்தாலும் உங்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றியை பெறுவீர்கள். உங்கள் தொழில், வியாபாரங்களை விரிவு படுத்தும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலங்கள் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டு வியாபாரங்களில் மிகுந்த லாபம் ஏற்படும். பணிபுரிபவர்கள் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். ஒரு சிலருக்கு புதிய இடங்களுக்கு இடமாறுதல்கள் ஏற்படும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எதிலும் ஏற்ற, இறக்கமான பலன்களே ஏற்படும். பொது மக்களின் ஆதரவை அவ்வளவு சுலபத்தில் பெற முடியாது. கட்சியில் உடன் இருப்பவர்களின் சதிகளுக்கு ஆளாக கூடும். விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு அமோக விளைச்சல் உண்டாகும். புதிய பூமிகளை வாங்கி, புதிய பயிர்களை நட்டு வளர்த்து அதன் மூலமும் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.

கலைத்தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர், வெளிநாடு கலை பயணங்கள் செல்லும் சூழல் உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு உடல் நலம் நன்றாக இருந்தாலும் ஆரோக்கியத்தில் தொடர்ந்து அக்கறை செலுத்த வேண்டும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் குடும்ப விவகாரங்கள் குறித்து பிறருடன் பேசுவதை தவிர்க்க வேண்டும். கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். விரும்பிய மேற்படிப்புகளை படிக்க கூடிய வாய்ப்புகள் அமையும்.

- Advertisement -
Guru peyarchi palangal Rishabam
Guru peyarchi palangal Rishabam

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்

முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளையும் லாபங்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய பொருளாதார பலம் இருக்கும். புதிய சொத்துக்களை வாங்கும் போது பலமுறை சிந்தித்து, தகுந்த ஆவணங்களை சரிபார்த்து வாங்குவது நல்லது. எதிலும் சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-12-2018 வரை இருக்கும் கால பலன்கள்

திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் தாராளமாக நடைபெறும். புதிய வாய்ப்புகள் மூலம் நற்பலன்களையும் லாபங்களையும் பெற முடியும். வேலை தேடி அலைபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு அமையும். குடும்பத்திற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம்.

ஆண் குழந்தை பெயர்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21-12-2018 முதல் 12-3-2019 வரை இருக்கும் கால பலன்கள்

உற்றார் உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு கூடும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் அடைத்து விடும் யோகம் ஏற்படும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். உடலில் கை, கால்களில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். பண விவகாரங்களில் முன்னெச்சரிக்கை அவசியம்.

Guru peyarchi palangal Rishabam
Guru peyarchi palangal Rishabam

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 13-3-2019 முதல் 9-4-2019 வரை இருக்கும் கால பலன்கள்

உடல் உஷ்ணம் சம்பந்தமான நோய்களால் அவதியுறுவீர்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது. உங்களுடன் பணிபுரிபவர்கள், தொழில் – வியாபாரகூட்டாளிகளின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு கிடைக்கும். பிறருக்கு கடன் தருவதை தவிர்க்க வேண்டும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் ஏற்படும்.

குரு பகவான் வக்ர கதியில் 10-4-2019 முதல் 6-8-2019 வரை

தேவையற்ற பயணங்களால் உடல் மற்றும் மனம் களைப்படையும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் எழும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களிடம் சற்று அனுசரித்து செல்ல வேண்டும். தொழில் வியாபாரங்களில் சராசரியான லாபமே ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் சற்று தாமதத்திற்கு பின்பே கிடைக்கும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 7-08-2019 முதல் 28-10-2019 வரை இருக்கும் காலம்

எதிர்பாராத தன வரவுகள் இருக்கும். புத்திரர்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியும். உடல் ஆரோக்கியம் அவ்வப்போது பாதிப்படையும். எல்லாவற்றிலும் சுறுசுறுப்பாக செயலாற்ற முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வெளிநாடுகளுக்கு பணி புரிய செல்ல விரும்புபவர்களின் எண்ணம் நிறைவேறும்.

பரிகாரம்

உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. சனிக்கிழமை அன்று திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடுவது சனி பகவானின் கெடு பலன்களை குறைக்கும். ராகு காலங்களில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பலம் தீபம் ஏற்றுவது சிறந்த பரிகாரமாகும்.