14/9/2021 கும்பத்தில் இருந்து மகரத்திற்கு பெயர்ச்சியாக போகும் குரு பகவான்! அதிர்ஷ்டம் பெறப்போகும் 6 ராசிகள் யாரெல்லாம்? நீங்களும் தெரிஞ்சிக்கணுமா?

guru-astro-wheel
- Advertisement -

கிரக பெயர்ச்சிகளில் மிக முக்கியமாக கருதப்படுவது குரு பெயர்ச்சியாகும். சுப பலன்களை கொடுக்கும் குரு பெயர்ச்சி தற்போது கும்ப ராசியில் வக்ரத்தில் இருந்து கொண்டிருக்கிறார். வக்ர நிவர்த்தி பெற மகரத்திற்கு இடம் பெயரும் இந்த குரு பெயர்ச்சி சுமார் இரண்டு மாத காலத்திற்கு நற்பலன்களை அள்ளிக் கொடுக்க இருக்கிறார். மீண்டும் இந்த ராசிக்கு வர 12 ஆண்டுகள் ஆகும். செப்டம்பர் 14 2021, காலை 11:43 மணி அளவில் கும்பத்தில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகி வக்கிர நிவர்த்தி அடைகிறார். அவ்வகையில் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகிறார்? என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குருபெயர்ச்சி சிறப்பான பலன்களை கொடுக்க இருக்கிறது. இதுவரை உங்களுக்கு இருந்து வந்த தடை, தாமதங்கள் அனைத்தும் விலகி பல நன்மைகளை குரு பகவான் கொடுக்கப் போகிறார். குறிப்பாக கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் தீரும். எலியும் பூனையுமாக இருந்தவர்கள் கூட ஒற்றுமையாக இருப்பதை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட தான் போகிறார்கள். பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் உங்களை நாடிவரும் யோகம் உண்டு. இல்லத்தில் புதிய வரவு ஒன்று தேடிவரும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு நற்செய்திகள் கிடைக்கும். கல்வி தடைகள் அனைத்தும் விலகி அடுத்து என்ன செய்யலாம்? என்கிற முடிவினை கொடுக்கும். வெளிநாடு செல்லக்கூடிய யோகம் ஒரு சிலருக்கு அமையும். பல்வேறு தடைகளை கொண்டிருந்த வீடு கட்டும் பணிகள் மீண்டும் துவங்கும் பாக்கியம் உண்டாகும். சுப காரியத்திற்கு சில கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் நீங்கள் கூடுதல் உழைப்பைக் கொடுக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றை சாதகப் பலன்கள் உண்டாகும். சுபகாரியத் தடைகள் விலகி நினைத்தது கைகூடும். சொத்து ரீதியான பிரச்சனைகள் தோன்றி மறையும். வியாழன் கிழமையில் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்க இருக்கிறது. இதுவரை உங்களுக்கு இருந்து வந்த பண தடைகள் விலகி பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் ரீதியான இடமாற்றம் குறித்த விஷயங்களில் சாதகப் பலன்கள் உண்டாகும். திருமண தடைகள் விலகி சுபகாரியங்கள் கைகூடி வரும். குழந்தை பிறப்பதில் இருக்கும் தடைகள் விலகி புத்திர பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் உங்களுக்கு இருந்த பொறுப்புகள் குறையும் வாய்ப்புகள் அமையும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை சிறப்பாக அமையும். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் பாக்கியம் உண்டாகும். கோபத்தால் சில விஷயங்களை இழக்க நேரலாம் எனவே உங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது பல பிரச்சினைகளை தீர்க்க வழி வகுக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிகம் லாபம் பெருகும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் அவசரம் தேவையில்லை. எந்த ஒரு முடிவையும் நிதானத்துடன் எடுப்பது மிகுந்த நன்மைகளை கொடுக்கும். ஜென்மத்தில் ராகு இருப்பதால் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படாமலிருக்க விட்டுக்கொடுத்தல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் பலம் பெற உணவு ரீதியான விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள். துர்க்கை, காளி போன்ற உக்கிர தெய்வம் வழிபாடு மேற்கொள்வது.

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நன்மைகளை அள்ளிக் கொடுக்க முடிகிறது. வெளிநாடு வேலைவாய்ப்பு எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். இடமாற்றம் குறித்த விஷயங்களில் அனுகூல பலன் பெற போகிறீர்கள். பெண்களுக்கு மனதிற்கு பிடித்த வரன் அமையும் யோகம் உண்டு. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். இதுவரை நிலவி வந்த சண்டை சச்சரவுகள், குடும்ப பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும். பணவரவு கிடைப்பதில் இருந்து வந்த தடைகள் விலகி, பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருந்த குழப்பங்கள் இறந்த ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நடந்து கொள்வீர்கள். பெற்றோருடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். அவர்களுடைய ஆசிர்வாதம் கிடைக்கும். உங்களுக்குக் கிடைக்கக் கூடிய நன்மைகள் சில போராட்டங்களுக்கு பிறகு கிடைக்கும். ஒரு சிலருக்கு சொத்து தகராறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உடல் ரீதியான ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும் ஆனால் மன ரீதியான பாதிப்புகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. புதிய தொழில் துவங்குவதில் எச்சரிக்கை தேவை. குரு வழிபாடு செய்ய நன்மைகள் இருக்கும்.

- Advertisement -

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி விசேஷமான பலன்களை கொடுக்கப் போகிறது. ஆரோக்கியா ரீதியான பாதிப்புகள் மறைந்து படிப்படியான முன்னேற்றம் பெறும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து நிம்மதி பிறக்கும். தந்தையுடன் ஏற்பட்ட மனக் கசப்புகள் தீர்ந்து புரிதல் உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு சிறப்பாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதகப்பலன் உண்டாகும். லாபஸ்தானத்தில் குரு பார்வை இருப்பதால் தொழில் மற்றும் வியாபார ரீதியான பிரச்சனைகள் மறைந்து எதிர்பார்க்கும் வருமானம் பெருகும். கிடைக்கவேண்டிய பணம் கிடைக்க வேண்டிய நேரத்தில் கைக்கு வந்து சேரும். அரசு வழி காரியங்கள் அனுகூல பலன்களை கொடுக்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே பிரிவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தேடிவரும் வம்பு வழக்குகளில் இருந்து சற்று விலகி இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும் யோகமுண்டு. உங்களை பார்த்து கேலி செய்தவர்கள் முன் சிறப்பாக முன்னேறி வெற்றி அடைவீர்கள். அறிவு ரீதியான தொழிலில் இருப்பவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. விநாயகர் வழிபாடு செய்துவர நன்மைகள் நடக்கும்.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பல்வேறு கேள்விகளுக்கான விடையைக் கொடுக்க இருக்கிறது. குழந்தைகள் மீதான எதிர்பார்ப்புகள் பூர்த்தியடையும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் குறையும். எடுத்த முடிவுகளால் ஏற்பட்ட விளைவுகளை சரி செய்ய முயற்சி செய்வீர்கள். இழந்த பொருட்களை மீட்டு எடுப்பீர்கள். சொத்து ரீதியான விஷயங்களில் அனுகூல பலன் பெற போகிறீர்கள். விட்டு சென்ற உறவுகள் மீண்டும் வந்தடையும் வாய்ப்புகள் அமையும். தடைப்பட்ட கட்டுமான பணிகளை மீண்டும் எடுத்து வெற்றியாக கட்டி முடிப்பீர்கள். பழைய வீடுகளை செப்பனிடும் பணியில் வெற்றி பெறுவீர்கள். புதிய தொழில்நுட்ப பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ராகு பலம் பெற இருப்பதால் தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் கைகூடிவரும். வம்பு வழக்குகளில் சாதுர்யமாக செயல்படுவதன் மூலம் வெற்றி காணலாம். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். அரசு வழி வேலைவாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். துர்க்கை வழிபாடு செய்வது நல்லது.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நல்ல பலன்களை கொடுக்க இருக்கிறது. குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைய இருப்பதால் உங்கள் உடல் ரீதியான பிரச்சனைகள் தீரும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். கோபம் குறைந்து சாந்த மாவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் கூட மீட்டெடுக்கும் வாய்ப்புகள் அமையும். தொழில் சூடுபிடிக்கும் துவங்க இருப்பதால் உங்கள் உழைப்பை இரட்டிப்பாக கொடுப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். புதிய தொழில் சாதகப் பலன் கொடுக்கும். வீடு மாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றம் போன்ற விஷயங்களில் விஷயங்களில் அனுகூலமான பலன் பெற போகிறீர்கள். சமூகத்துடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பில் புகழ் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்துவந்த ஊடல்கள் நீங்கி ஒற்றுமை பலப்படும். மனதிற்கு பிடித்தவர்கள் உடனான சண்டை சச்சரவுகள் தீரும். வீண் பழிகள் மறைந்து உங்கள் திறமைகள் வெளி உலகிற்கு தெரியவரும். புத்திர பாக்கியத்தில் இருந்துவந்த தடைகள் நீங்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்கள், பண ரீதியான விஷயங்களில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். திங்கட் கிழமையில் சிவ வழிபாடு செய்வது நல்லது.

- Advertisement -