திருமணம் தடை நீங்க, உயர் பதவி அடைய உதவும் குரு பகவான் விரதம்.

guru

இரவில் வானில் பார்க்கும் போது பொன்னிற ஒளியில் மின்னிக்கொண்டிருப்பது வியாழன் கிரகம் ஆகும். இந்த வியாழ கிரகம் தான் நம் இந்து மத புராணங்களிலும், இந்திய ஜோதிடக்கலையிலும் குரு பகவான் என அழைக்கப்படுகிறார். நவகிரகங்களில் முடிந்த அளவு நன்மையான பலன்களை அதிகம் வழங்க கூடிய ஒரே கிரகம் வியாழன் அல்லது குரு பகவான் ஆவார். இந்த குரு பகவானின் மேலும் பல சிறப்புகளையும், குரு பகவானின் முழுமையான அருளை பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி இங்கு காண்போம்.

guru

புராணங்களின் படி குரு பகவான் பிரம்ம தேவரின் மானஸ புத்திரரான ஆங்கிரஸ முனிவருக்கும், சுவேதா தேவிக்கும் பிறந்த புத்திரர்களில் ஒன்றாவார். நுண்ணறிவு, சிறந்த ஞானம், நற்குணங்கள் ஆகியற்றிற்கு அதிபதியாக குரு பகவான் இருப்பதால் இவருக்கு “ஞான தலைவன்” என பொருள் படும் “பிரகஸ்பதி” என்ற பெயர் ஏற்பட்டது. வியாழன், குரு, மந்திரி, அமைச்சர், ஆசான் போன்ற பல்வேறு பெயர்களிலும் இவர் அழைக்கப்படுகிறார்.

குரு பகவான் காசி நகரில் சிவபெருமானை குறித்து நீண்ட காலம் தவமிருந்து, சிவனின் காட்சி கிடைக்கப்பெற்று தேவர்களுக்கு குருவாக இருக்கும் தேவகுரு பதவியையும், நவ கிரகங்களில் சுப கிரகமாக இருக்கும் வரத்தையும் பெற்றார். குரு பகவானுக்கு எம கண்டன், கசன் என்கிற இரு புதல்வர்கள் இருக்கின்றனர். ஒன்பது கிரகங்களில் சாத்வீக குணத்தையும், சுப கிரகமாகவும் இருப்பதாலும் இவருக்கு “வியாழன், பொன்னன்” என்கிற பெயர்களும் உண்டு.

guru bagavan

ஜாதக கட்டடத்தில் குரு பகவானின் 5 , 7 ஆம் இட பார்வை சகல சௌபாக்கியத்தையும் ஏற்படுத்தும். ஒரு ஆண் அல்லது பெண் ஜாதகத்தில் வியாழ நோக்கம் எனப்படும் குரு பகவானின் சுப பார்வை பெற்ற காலத்தில் செய்யப்படும் திருமணம் சகல நன்மைகளையும் தம்பதியரின் வாழ்வில் ஏற்படுத்தும். குரு பகவானின் சுப பார்வை தன் ஒருவற்கு குழந்தை பெரு கிடைக்கவும் பிரதான காரணமாக இருக்கிறது. ஜாதகத்தில் பிற கிரகங்கள் எப்படிப்பட்ட பாதகமான அமைப்பில் இருந்தாலும், அக்கிரகங்கள் மீது குரு பகவானின் சுப பார்வை ஏற்படும் பட்சத்தில் பிற கிரகங்களால் பாதகமான பலன்கள் ஏற்படாமல் தடுக்கப்படும்.

- Advertisement -

நீதி சாஸ்திரங்கள் பலவற்றை கற்றறிந்த குரு பகவான் ஒரு ஜாதகருக்கு எந்த அளவிற்கு நற்பலன்களை அளிக்க வேண்டும் என தீர்மானம் செய்கிறார். மிக உயர்ந்த, அதிகாரம் மிக்க பதவிகள், அமைப்புகள் பெரும் நிறுவனங்களை தலைமையேற்று வழிநடத்திச்செல்லும் யோகம், பெரும்பான்மையான மக்களுக்கு ஆன்மீக வழிகாட்டும் ஆன்மீக தலைவர், பீடாதிபதி, துறவி போன்ற அனைத்திற்கும் காரகனாக குரு பகவான் இருக்கிறார்.

குரு விரதம் இருப்பது எப்படி ?

ஆங்கில மாதத்தில் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், புனர்பூசம். பூரட்டாதி, விசாகம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், தனுசு, மீன ராசிகளில் பிறந்தவர்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிறந்தவார்கள் குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆகிறார்கள். இவர்கள் வியாழக்கிழமைகளில் குரு பகவான் விரதம் இருப்பது நல்லது.

dhatchinamoorthi

ஒரு வளர்பிறை வியாழக்கிழமையில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொண்டு, நெற்றியில் சந்தனைத்தை பூசிக்கொள்ள வேண்டும். பின்பு உங்கள் பூஜையறையில் தட்சிணாமூர்த்தியின் படத்தை மஞ்சள் நிற விரிப்பில் கிழக்கு திசையை பார்த்தவாறு வைத்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, ஆறு அகல் விளக்கு தீபங்கள் ஏற்றி, இனிப்புகள், கொண்டைக்கடலைகள், சர்க்கரை பொங்கல், கற்கண்டுகள் ஆகியவற்றை நைவேத்தியமாக வைத்து, தூபங்கள் கொளுத்தி, தட்சிணாமூர்த்திக்கு தீபாராதனை காட்டி, குரு பகவானுக்குரிய மந்திரங்களை துதித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

Guru Dhatchinamurthy

இவ்வியாழக்கிழமை விரத காலத்தில் ஒரு வேளை மட்டும் உணவு உண்பது சிறந்தது. வியாழக்கிழமைகளில் இந்த “குரு பகவான் விரதம்” இருப்பதன் மூலம் தங்களின் வாழ்வில் குரு பகவானின் அருளால் அனைத்து நன்மைகளும் நிச்சயம் பெற முடியும். குரு பகவான் விரதத்தை மற்ற ஆங்கில தேதி, நட்சத்திரம், கிழமை, ராசி போன்றவற்றில் பிறந்தவர்களும் மேற்கொள்ளலாம்.

guru bagwan

ஜாதகத்தில் குரு பகவானின் நிலை சரியில்லாமல் இருப்பவர்கள், குரு பகவான் அருளால் சிறந்த பலன்களை பெறுவதற்கு திருவாரூர் மாவட்டத்தில் குரு பகவானின் தலமான ஆலங்குடி குரு பகவான் கோவிலுக்கு குரு பெயர்ச்சி தினத்தில் குரு பகவானுக்கு செய்யப்படும் பூஜைகள், யாகங்களில் கலந்து கொண்டு குரு பகவானை வழிபடுவது நல்லது. குரு பகவானின் அம்சம் கொண்ட திருச்செந்தூர் முருகப்பெருமானையும் வழிபடுவது வியாழ பகவானின் அருளை பெற்று தரும். குரு பகவானின் வாகனம் யானை ஆகும். உங்கள் அருகாமையிலுள்ள கோவிலில் யானைகள் இருக்கும் பட்சத்தில், வியாழக்கிழமைகள் தோறும் யானைகளுக்கு பழங்களை உணவாக கொடுப்பது குரு பகவானின் தோஷத்தை போக்கி, குரு பகவான் பாதகமான ராசிகளில் பெயர்ச்சியாகியிருப்பதால் கெடுதலான பழங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.