எதிலும் உங்களுக்கு பொறுமையே கிடையாதா? இது உங்களுக்கான பதிவு. 1 நிமிடம் நிதானமாக இதையாவது படிங்களேன்.

gurukulam
- Advertisement -

நம்மில் சில பேருக்கு இந்த பழக்கம் இருக்கும். நேரமில்லை என்ற ஒரு காரணத்தைக் காட்டி, அவசர அவசரமாக எல்லா வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்து, கடைசியில் ஒரு வேலையை கூட உருப்படியாக செய்திருக்க மாட்டோம். கடைசியில் செய்யும் வேலையில் முன்னேற்றம் இருக்காது. வாழ்க்கையிலும் முன்னேற்றம் இருக்காது. இப்படி வாழ்க்கையில் எல்லா விஷயத்திற்கும் அவசர படுபவர்களுக்கு எந்த ஒரு நல்லதும் முழுமையாக கிடைக்காது. நீங்கள் இந்த வரிசையில் இருந்தால் இந்த பதிவையாவது ஒரு நிமிடம் நிதானத்தோடு முழுமையாக படியுங்கள். உங்களுக்கான தெளிவு பிறக்கும்.

ஒரு குருகுலம் இருந்தது. அந்த குருகுலத்தில் குரு, மாணவர்களுக்கு தினமும் பாடத்தை சொல்லிக் கொடுப்பது வழக்கம். ஆனால் அந்த குரு, மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு, ஒரு விஷயத்தை மட்டும் தான் சொல்லிக் கொடுக்கும் வழக்கத்தை வைத்திருந்தார். இது அங்குள்ள ஒரு மாணவனுக்கு கோபத்தை எழுப்பியது. ஒரு நாளைக்கு வெறும் ஒரு விஷயத்தை மட்டும் கற்றுக் கொண்டால் எப்படி சீக்கிரமாக எல்லாப் பாடங்களையும் படித்து முடிப்பது. என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது. தன்னுடைய நேரம் எல்லாம் வீணாகிப் போகிறது என்ற எண்ணம் அவனுக்குள் எழுந்தது. இதை அவன் தன்னுடைய குருவிடமும் போய் சொன்னான்.

- Advertisement -

குரு கோவப்படவில்லை. அவனை திட்டவில்லை. அவனுடைய தவறை அவனுக்கு உணர்த்த வேண்டும் என்றுதான் நினைத்தார். அவர்களுடைய ஆசிரமத்தில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு இருந்த 10 கோழிக் குஞ்சுகளை கூண்டிலிருந்து வெளியே திறந்து விட்டார். அந்த மாணவனை, சென்று இந்த 10 கோழிகளையும் ஒருசேர பிடித்து வரும்படி சொன்னார்.

ஆனால் 10 கோழிகளும், வேறு வேறு திசைக்கு ஓடிவிட்டது. அதனால் ஒரு கோழியை கூட பிடிக்க முடியவில்லை. அவன் சோர்ந்து போனது மட்டும் தான் மிச்சம். குருவிடம் வந்தான். இப்போது குரு ‘அந்த பச்சை நிற கோழியை மட்டும் பிடித்து வா’ என்று சொன்னார். அவன் உடனடியாக சென்று அந்த பச்சை வண்ண கோழியை மட்டும் பிடித்து வந்து விட்டான்.

- Advertisement -

ஒரு நேரத்தில், ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தி அதைப் பின்பற்றினால் அதில் நமக்கு நிச்சயம் சீக்கிரமே வெற்றி கிடைக்கும். ஒரே நேரத்தில் பல முயற்சிகளை எடுத்து பல வேலைகளை செய்தால் நிச்சயமாக இதிலும் நம்மால் கவனம் செலுத்த முடியாது. ஒரு நேரத்தில் ஒரு வேலையை செய்வது தான் சிறப்பு. எதிலும் அவசரப்படாதீங்க. நல்ல விஷயம் நடப்பதற்கு சிறிது காலம் எடுக்கத்தான் செய்யும்.

முதலில் உங்களுக்கு இருக்கக் கூடிய வேலைகளை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். அதில் எந்த வேலையை முதலில் செய்ய வேண்டும். எந்த வேலையை பிறகு செய்ய வேண்டும் என்பதையும் தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் ஒவ்வொரு வேலையாக செய்யத் தொடங்கினால், உங்களுடைய வேலைகளை நீங்கள் நினைத்ததை விட சீக்கிரமாகவே செய்து முடிக்க முடியும். உங்களுக்கு இந்த கதைருனுடைய அர்த்தம் புரிந்திருந்தால், இன்றிலிருந்து இந்த நிமிடத்திலிருந்து அவசரப்படாதீங்க.

- Advertisement -