- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஉதிர்ந்த முடி வேகமாக வளர

உதிர்ந்த முடி வேகமாக வளர

- Advertisement -

தலைமுடி உதிர்தல் என்பது பலருக்கும் பொதுவான ஒரு பிரச்சினையாகவே திகழ்கிறது. அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பல வழிமுறைகளை நாம் பின்பற்றியும் எந்தவித பலனும் இல்லை என்பவர்களும் அதே சமயம் முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக முடி வளரவில்லை முடியின் அடர்த்தி குறைந்து கொண்டே போகிறது என்பவர்களும் இந்த முறையில் தலைக்கு குளித்தால் அவர்களுடைய முடி உதிர்தல் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். அதைப்பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

முடி வேகமாக வளர

ஒருவருக்கு முடி உதிர்தல் ஏற்படுகிறது என்றால் அதற்கு பலவிதமான காரணங்கள் இருக்கிறது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், வேலை தொடர்பாகவும் பலவிதமான பிரச்சனைகளுக்கு ஆளாக கூடியவர்கள் அனைவருக்குமே முடி உதிர்தல் பிரச்சினை என்பது சர்வ சாதாரணமாகவே இருக்கும். இது மிகப்பெரிய பிரச்சினையாக மாறுவது எப்பொழுது என்றால் உதிர்ந்த இடத்தில் புதிய முடிகள் வளராமல் இருந்தால் தான். அப்படி வளராமல் இருக்கும் பட்சத்தில் வழுக்கை விழுவதற்கு கூட வாய்ப்புகள் உண்டாகும். இதை தவிர்ப்பதற்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிமுறையை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

எந்தளவிற்கு தலைமுடிக்கு கெமிக்கல் சேர்க்காத இயற்கையான பொருட்களை நாம் பயன்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு முடியின் ஆரோக்கியம் என்பது மேம்படும். ஆனால் இன்றைய காலத்தில் பலரும் விரைவில் அனைத்தையும் செய்து விட வேண்டும் என்பதற்காக எளிதில் கிடைக்கக்கூடிய கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அது எண்ணெயாக இருந்தாலும் சரி, ஷாம்புவாக இருந்தாலும் சரி, ஹேர் டையாக இருந்தாலும் சரி. இதனால் கூட முடி உதிர்தல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சரி முடி உதிர்தலை நிறுத்தி உதிர்ந்த இடத்தில் அதிக அளவில் முடி வளர்வதற்கு என்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம்.

நமக்கு எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது இதை நாம் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். மூன்று மாதம் வரை இதை நாம் உபயோகப்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு இரண்டு ஸ்பூன் அளவிற்கு அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தையும் சேர்த்து இரண்டு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். இதில் ஆறு பூந்தி கொட்டையை மட்டும் இடிக்கல்லால் இடித்து அதற்குள் இருக்கக்கூடிய விதையை நீக்கிவிட்டு அதன் தோலை மட்டும் அரிசி வெந்தயத்துடன் சேர்த்து போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது இதை அடுப்பில் வைத்து விடுங்கள். தண்ணீர் நன்றாக கொதிக்க வேண்டும். அவ்வாறு நன்றாக கொதித்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி ஒரு தட்டை வைத்து மூடி வைத்து விடுங்கள். குறைந்த பட்சம் எட்டு மணி நேரத்தில் இருந்து அதிகபட்சம் 12 மணி நேரம் வரை இது அப்படியே இருக்கட்டும். பிறகு இதை ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் மாற்றி அரைக்க வேண்டும். ஊற வைத்த தண்ணீருடன் அப்படியே மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு வடிகட்டியை பயன்படுத்தி தண்ணீரை மட்டும் தனியாக எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து வைத்து திரும்பவும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மறுபடியும் அரைக்க வேண்டும்.

இப்படி மூன்று முறை அரைத்து அதன் தண்ணீரை மட்டும் வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது சற்று கெட்டியாக இருக்கும் என்பதால் அகலமான ஜல்லடை ஓட்டை இருக்கக்கூடிய வடிகட்டியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய ஷாம்பூ. இதில் அரிசி வெந்தயம் இரண்டும் இருக்கிறது என்பதால் இது நம்முடைய தலைமுடி உதிர்வை நிறுத்தி முடியை ஆரோக்கியமாக வளரச் செய்யும். மேலும் பூந்திக்கொட்டை இருப்பதால் அது நமக்கு ஷாம்பு போல நல்ல நுரையுடன் வருவதற்கு உதவி செய்வதோடு நம்முடைய பொடுகு பிரச்சினையும் நீக்குவதற்கு இது உதவி செய்யும்.

- Advertisement -

இந்த ஷாம்பு குறைந்தபட்சம் மூன்று மாதம் வரை கெடாமல் இருக்கும். இதை ஃப்ரிட்ஜில் வைத்தும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். கெமிக்கல் நிறைந்த ஷாம்புவை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் தயார் செய்யக்கூடிய இந்த ஷாம்புவை பயன்படுத்தி பாருங்கள். ஹேர் பேக் போட நேரமில்லை என்பவர்கள் கூட இதை தலையில் தடவி பத்து நிமிடம் வைத்துவிட்டு குளிக்கலாம்.

இதையும் படிக்கலாமே: முடி நீண்டு வளர சீரம்

இந்த முறையில் ஷாம்பு தயார் செய்து பயன்படுத்துவதன் மூலம் தலைமுடி உதிர்தல் குறைய ஆரம்பிக்கும். முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடிகள் வளரவும் ஆரம்பிக்கும் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்