முடி கொட்டுவதை நிறுத்த இவ்வளவு ஈசி ஐடியா இருப்பது உங்களுக்கு தெரியுமா? செலவு இல்லாத இந்த ஐடியா முடி உதிர்வை, ரெட் சிக்னல் போட்டது போல உடனே நிறுத்தி விடும்.

hair
- Advertisement -

அதிகமான முடி உதிர்வு பிரச்சனையையும், பொடுகு தொல்லையையும், உடனடியாக சரி செய்ய, ஒரு சூப்பர் ஹேர் பேக்கை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த பொடுகை துரத்தி அடிக்க எவ்வளவோ ஷாம்பு, எவ்வளவோ கெமிக்கல் கலந்த பொருட்களை போட்டிருப்பீர்கள். ஆனாலும் அதை நம்மால், நம் தலையில் இருந்து விரட்டி அடிக்கவே முடியாது. திரும்பத் திரும்ப வந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும். அதற்கு ஒரு வழிகெட்ட இதோ ஒரு எளிமையான அழகு குறிப்பு உங்களுக்காக.

முடி உதிர்வை நிறுத்த
ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக்கோங்க. அதில் லேசாக புளித்த தயிர் 2 ஸ்பூன், ஒரு முட்டையின் வெள்ளை கரு, இந்த இரண்டு பொருட்களையும் போட்டு உங்கள் கையை கொண்டு கலக்க வேண்டும். ஸ்பூன் வைத்து கலக்காதீங்க. இந்த இரண்டு பொருட்களும் ஒன்றாக கலந்த பின்பு இதை தலையில் அப்ளை செய்ய வேண்டும். ஹேர் பேக் போடுவதற்கு 2 மணி நேரம் முன்பு உங்களுடைய தலையில் தேங்காய் எண்ணெய் வைத்து நன்றாக மசாஜ் செய்து விடுங்கள். நன்றாக சிக்கு எடுத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு இந்த பேக்கை உங்களுடைய தலைமுடியில் போட வேண்டும். தலை முடியை ஒவ்வொரு பகுதியாக பிரித்து, மயிர் கால்களில் படும்படி இந்த பேக்கை போடுங்கள். காரணம் உங்களுடைய ஸ்கேல்பில் தான் அதிகப்படியான பொடுகு ஒட்டி இருக்கும். இந்த பேக் லிக்விட் பதத்தில் இருப்பதால் எடுத்து தலையில் போடுவதில் சிரமம் இருக்காது. தலை முழுவதும் நன்றாக கான்சென்ட்ரேஷன் செய்து மயிர் கால்களில் இந்த பேக்கை போட்டுவிட்டு அப்படியே இரண்டு நிமிடம் மசாஜ் செய்து கொண்டை கட்டிக் கொள்ளுங்கள். 20 லிருந்து 25 நிமிடங்கள் கழித்து ஜென்டில் ஆன ஷாம்பு போட்டு அல்லது சீயக்காய் போட்டு தலையை சுத்தமாக வாஷ் செய்து விடுங்கள்.

இப்படி ஒரு முறை இந்த பேக்கை போடும்போதே உங்களுடைய தலைமுடி உதிர்வதில் நல்ல வித்தியாசம் தெரியும். தலையில் இருக்கும் பொடுகும் நீங்கி இருக்கும். ஆனால் இதை அப்படியே விட்டுறாதீங்க. வாரத்தில் இரண்டு நாள் தொடர்ந்து இந்த பேக்கை போட்டு வரும்போது உங்களுடைய முடி உதிர்வு குறைந்து பொடுகு தொல்லை குறைந்து முடி வளர்வதை காண முடியும். இந்த பேக் ரெமிடியை டாக்டர் ஷர்மிகா அவர்கள் சமீப காலத்தில் ஒரு இன்டர்வியூவில் பகிர்ந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

எப்போதுமே சொல்வதுதான். பேக் போடுவது ஒரு பக்கம் இருந்தாலும், உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய விஷயங்களை நாம் தொடர்ந்து எடுத்துக் கொண்டே வரவேண்டும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைவாக இருக்கும் போது தான், அதிலிருந்து தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்து நமக்கு கிடைக்கும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து இங்கு குறைபாடாக உள்ளது. பிறகு எங்கு தலைமுடியை வளர்ப்பது.

இதையும் படிக்கலாமே: இந்த 2 பருப்பு உங்கள் வீட்டில் இருந்தால் இனி தலைமுடி உதிர்கிறதே என்கிற கவலையே நீங்கள் பட வேண்டாம்! ஒரே மாதத்தில் தலை முடியை நன்கு அடர்த்தியாக நீளமாக வளர வைப்பது எப்படி?

இன்று முக்கால்வாசி பேருக்கு இந்த தலை முடி உதிர்வு பிரச்சினை இருக்கிறது. சிறுவயதிலேயே வழுக்கை விழுந்து விடுகிறது. இதற்கு காரணம் கெமிக்கல் கலந்த பொருட்களும் ஆரோக்கியம் அற்ற உணவு முறைகளும் தான். கூடுமானவரை ஆரோக்கியம் நிறைந்த இயற்கையான பொருட்களை சாப்பிடுங்கள். இயற்கையான பொருட்களை உடம்புக்கு போட்டு தேய்த்து குளிங்க. இயற்கையான பொருட்களை தலைக்கும் போடுங்கள். அப்போது உங்களுடைய ஆரோக்கியம் அவ்வளவு எளிதில் கெட்டுப் போகாது.

- Advertisement -