கொத்துக்கொத்தா வேரிலிருந்தே உதிரும் முடியை தடுத்து நிறுத்த எந்த எண்ணெயும் வேண்டாம் இந்த பொருட்களை மட்டும் சாப்பிடுங்கள் போதும்!

hair-fall-drinking-milk
- Advertisement -

கொத்து கொத்தாக முடி வேரிலிருந்து பிரிந்து தனித்தனியாக தலை முடியை வாரும் பொழுது சீப்பிலேயே வந்து விடுவதை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும். நாளடைவில் தலைமுடி அதிகமாக இழந்து அடர்த்தி குறைந்து விடுவதற்கு வாய்ப்பு உண்டு. இப்படி கொட்டும் முடியை தடுத்து நிறுத்த கண்ட கண்ட எண்ணெய்களை உபயோகிக்க வேண்டாம். ஆரோக்கியமான உணவு பொருட்களிலேயே இதை எளிதாக குணப்படுத்தி விடலாம். முடி வளர என்ன சாப்பிட வேண்டும்? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

நன்கு கருகருவென்று அடர்த்தியான கூந்தல் இருப்பவர்கள் தான் மிகவும் அழகாகவும் இருக்கிறார்கள். அடர்த்தி குறைந்தால் அழகும் மங்கி விடுகிறது, எனவே ஒவ்வொரு முடியை இழக்கும் பொழுதும் நீங்கள் அதற்கான கவனிப்பை கொடுத்தாக வேண்டும். சரியான ஊட்டச்சத்து இல்லாததால் தான் பெரும்பாலானோருக்கு முடி எளிமையாக உதிர்ந்து மற்றும் உடைந்து போகிறது.

- Advertisement -

நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளுக்கும், ஒவ்வொரு விதமான சத்துக்கள் தேவை. இந்த சத்துக்களில் சிலவை குறைந்தாலும் அந்த உறுப்புகள் சரியாக வேலை செய்வது கிடையாது. அதே போலத் தான் தலைமுடியும்! தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நம் அன்றாட உணவில் இல்லை எனில் கண்டிப்பாக முடி உதிர்தல் என்பது நிகழ்ந்தே ஆகும். இது நாளடைவில் நமது தோற்றத்தையே மாற்றிவிடும் அபாயம் உண்டு. எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அதிகம் முடி உதிரும் பிரச்சினை இருப்பவர்கள் கண்டிப்பாக 2 டம்ளர் பால் தினமும் குடிக்க வேண்டும். பாலில் முடி வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் பி2, சல்பர், ஜிங்க் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. எனவே தினமும் காலை, மாலை இருவேளையும் டீ, காபி போன்றவற்றை நிறுத்திவிட்டு மிதமான சூட்டில் இருக்கக்கூடிய பாலை பருகி பாருங்கள்.

- Advertisement -

தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட வேண்டும். ஒரு கப் தயிரில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. குறிப்பாக இதில் இருக்கும் லாக்டிக் அமிலம் வளர்ந்த முடியை மீண்டும் உதிராமல் தடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளது. எனவே முடி வளர்ந்த பின்பு அதை உதிரவிடாமல் தடுக்க தினமும் ஒரு கப் கெட்டி தயிரை சாப்பிடுவது நல்லது. தயிர் சாப்பிட பிடிக்காதவர்கள் அதில் லசி செய்து சாப்பிடலாம்.

வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்துள்ள முட்டையை தினமும் இரண்டாவது எடுத்துக் கொள்ள வேண்டும். முடி அதிகம் உதிர்பவர்கள் சிரமப்படாமல் இரண்டு முட்டையை பதமாக வேக வைத்து அப்படியே சாப்பிட்டு விடுங்கள். கண்டிப்பாக முடி வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். தினமும் உணவில் பீட்ரூட், கேரட், தக்காளி, முட்டைகோஸ் ஆகியவை இடம்பெற்று இருக்கிறதா? என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள். இவற்றில் முடி வளர்ச்சியை தூண்டி விடக் கூடிய ஆற்றல் இயல்பாகவே காணப்படுகிறது. எனவே இந்த காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலமும் முடி உதிர்கின்ற பிரச்சனை விரைவாக நிற்கும்.

இதையும் படிக்கலாமே:
சமையல் கட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நம்முடைய முகத்தில் முகப்பரு, கருவளையம், தழும்புகள் ஆகியவற்றை எப்படி ஒரே நாளில் ஓட ஓட விரட்டுவது?

மேலும் உணவில் அசைவத்தை சேர்த்துக் கொள்பவர்கள் வாரம் இரண்டு முறையாவது ஆட்டு ஈரலை சாப்பிட்டு வரலாம். குறிப்பாக மண்ணீரல் சாப்பிட்டால் ஏராளமான அயன் சத்து கிடைக்கும். இதனால் முடி உதிர்வது கட்டுப்படும். சைவ உணவு எடுத்துக் கொள்பவர்கள் பப்பாளி சாப்பிட்டு வரலாம். தினமும் ஒரு கப் பப்பாளியை சாலட் செய்து சாப்பிட்டு வந்தால் விரைவான முடி வளர்ச்சியை காண முடியும். இயற்கையாக இருக்கக்கூடிய இவ்வளவு வரப்பிரசாதங்களை விட்டுவிட்டு செயற்கை ஷாம்பூக்கள் மற்றும் கலப்பட எண்ணெய்களை பயன்படுத்துவதால் மேலும் முடி உதிருமே தவிர வளராது.

- Advertisement -