வலுவில்லாமல் வேரோடு கொட்டும் முடிக்கு வலு சேர்த்து அடர்த்தியாக்க, தேங்காய் எண்ணெயில் இந்த 3 பொருட்களை போட்டு காய்ச்சினாலே போதுமே! எதையும் தேடாதீங்க இதை மட்டும் பண்ணுங்க.

hair-fall-venthaya-hibiscus
- Advertisement -

எல்லோருடைய கூந்தலும் செழிப்பாக இருந்து விடுவது இல்லை. உண்ணும் உணவு, சுற்றுச்சூழல், மனநலம் மற்றும் நோய் இவை சார்ந்து நம்முடைய தலைமுடியின் ஆரோக்கியமும் இருந்து வருகிறது. இவற்றில் ஒன்றில் பிரச்சனை என்றாலும், நம்முடைய தலைமுடிக்கும் அது பிரச்சனையாக வந்து விடுகிறது. இந்த வகையில் எந்த ரீதியில் உங்களுடைய தலைமுடி பாதிக்கப்பட்டு வலுவில்லாமல் வேரோடு கொட்டிக் கொண்டிருந்தாலும், அதை உடனடியாக தடுத்து நிறுத்தி பன்மடங்கு அடர்த்தியாக்கி நல்ல ஒரு கேச வளர்ச்சியை கொடுக்கக்கூடிய எண்ணெயை எப்படி சுலபமாக தயாரிக்கப் போகிறோம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தலைமுடி வலுவில்லாமல் போவதற்கு முதலில் தலைமுடிக்கு தேவையான போஷாக்கு நம் உடலில் இருப்பதில்லை! ஏதோ ஒரு விட்டமின் குறைபாடு இருந்தாலும், நம் உடம்பில் சில பாதிப்புகள் ஏற்படும். அது போல தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் இல்லை என்றால், ஒவ்வொரு முடியாக வேரோடு பிடுங்கிக் கொண்டு வந்து விடும். நீங்கள் தலை முடியை வாரினாலே கொத்து கொத்தாக வேரோடு முடி உதிர்வதை காண முடியும்.

- Advertisement -

சாப்பிடும் சாப்பாட்டில் முதலில் சத்துக்கள் அதிகரிக்க வேண்டும். நல்ல ஊட்டசத்துள்ள உணவை சாப்பிட்டு வந்தாலே தலை முடி சீராக வளரும். அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் நம்முடைய தலைமுடிக்கு நல்ல ஒரு வளர்ச்சியை தூண்டி விடக்கூடிய எண்ணெயையும் தடவி வர வேண்டும். பொதுவாக நீங்கள் சாதாரண தேங்காய் எண்ணெயை தடவியினாலே நல்ல ஒரு மாய்ஸ்ரைசர் கிடைக்கும். செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் நம் வீட்டில் இருக்கக்கூடிய இந்த மூன்று பொருட்களை சேர்த்து காய்ச்சி கொள்ள வேண்டும்.

இதற்காக நிறைய பொருட்களை நாம் தேட வேண்டிய அவசியம் இல்லை. சிலர் எண்ணெய் தயாரிக்கிறேன் என்று நிறைய பொருட்களை சேர்ப்பது உண்டு. அவ்வளவு பொருட்களை சேர்த்தாலும், சில சமயங்களில் ஆபத்து விளைவிக்கும் எனவே நம்முடைய கேச வளர்ச்சிக்கு முதலில் எது தேவையோ? அதைக் கொடுத்தால் போதும். 10 செம்பருத்தி இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு கைப்பிடி அளவிற்கு கறிவேப்பிலை இலைகளை உருவி கழுவி சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்துக் கொண்டால் போதும், சிலருக்கு வெந்தயம் குளிர்ச்சி அதிகம் என்பதால் சளி பிடிக்கும் என்று பயப்படுவார்கள் ஆனால் இந்த வகையில் நீங்கள் வெந்தயம் சேர்க்கும் பொழுது உங்களுக்கு அது போன்ற தொந்தரவுகளும் ஏற்படாது.

- Advertisement -

ஒரு ஸ்பூன் வெந்தயம், 10 செம்பருத்தி இலைகள், ஒரு கைப்பிடி அளவிற்கு கறிவேப்பிலை இவை எல்லாவற்றையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் நைசாக அரைத்து விட வேண்டாம். இத்துடன் 300ml அளவிற்கு செக்கிலாட்டிய தேங்காய் எண்ணெயை அடுப்பில் ஒரு அடிகனமான வாணலியில் ஊற்றிக் கொள்ளுங்கள். அடுப்பை முழுவதுமாக சிம்மில் வைத்துக் கொண்டு லேசாக சூடு வர காத்திருங்கள். எண்ணெய் சூடானதும் நீங்கள் அரைத்து வைத்த பொருட்களை அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடுங்கள்., ரொம்பவும் கொதித்தால் நீங்கள் போட்ட பொருட்கள் கருகிவிடும் அபாயம் உண்டு.

இதையும் படிக்கலாமே:
கருகருன்னு கத்தை கத்தையாக முடி வளர கரிசலாங்கண்ணி ஹேர் பேக்கை இப்படி போடுங்க. ரொம்ப நாளைக்கு உங்க முடி அடர் கருப்பு நிறத்திலேயே இருக்கும்.

பொருட்களின் சாறு எண்ணெயில் நன்கு இறங்கும். ஒரு ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் அடுப்பை பற்ற வையுங்கள். இரண்டு நிமிடம் மட்டும் எண்ணெயை சூடாக்குங்கள் போதும். இது எண்ணெயை அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் வைத்துக் கொள்ள செய்யப்படுகிறது. அவ்வளவு தான் அடுப்பை அணைத்து நன்கு கொஞ்சம் கூட சூடு இல்லாமல் குளிர்ச்சியாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு சுத்தமான ஈரப்பதம் இல்லாமல் காய வைத்து எடுத்த ஒரு பாட்டிலில் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான், இந்த எண்ணெயை தினமும் நீங்கள் தலைமுடிக்கு தடவி வந்தாலே போதும், தலைமுடியின் வேர்கால்கள் நன்கு தூண்டப்பட்டு புதிய முடிகள் முளைக்க துவங்கும். மேலும் இருக்கும் முடியையும் வலுவாக்கி அடர்த்தியான கேசத்தை ஒரே மாதத்தில் உங்களுக்கு கொடுக்கும்.

- Advertisement -