கொத்துக் கொத்தாக முடி கொட்டுவதை உடனடியாக நிறுத்தி, கொத்துக்கொத்தாக முடியை வளரச் செய்ய சூப்பரான உருளைக்கிழங்கு ஹேர் பேக்.

hair1
- Advertisement -

சாதாரணமாக தினம்தோறும் 25 லிருந்து 30 முடிகள் கொட்டுவது என்பது இயற்கையான ஒரு விஷயம்தான். இந்த முடி உதிர்வுக்காக நாம் கவலைப்படத் தேவை கிடையாது. ஆனால் சில பேருக்கு தலையில் கையை தொட்டாலே அப்படியே முடி கொத்துக் கொத்தாக உதிரும். இப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயமாக முடி வளர்ச்சியில் அக்கறை காட்ட வேண்டும். இல்லை என்றால் சீக்கிரத்தில் தலைமுடி உதிர்வு இன்னும் அதிகரித்து, வழுக்கை விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கும் கொத்துக் கொத்தாக முடி கொட்டக் கூடிய பிரச்சனை இருக்கிறதா. ஒரு முறை இந்த பேக்கை ட்ரை பண்ணி பாருங்க.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தோலுடன் உருளைக்கிழங்கு – 1 வெட்டி போட்டுக்கொள்ளுங்கள். தோலுரித்த பெரிய வெங்காயம் – 1 அதையும் ஓரளவுக்கு வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். இதில் அலோ வேரா ஜெல் – 2 ஸ்பூன் அளவு, விளக்கெண்ணெய் – 2 ஸ்பூன் ஊற்றி தண்ணீர் எதுவும் ஊற்றாமல் இதை விழுது போல அரைத்துக் கொள்ளுங்கள். (உருளைக்கிழங்கு, வெங்காயம், அலோ வேரா ஜெல், விளக்கெண்ணெய் நான்கே பொருட்கள்தான்.)

- Advertisement -

அரைத்த இந்த விழுதை வடிகட்டி எடுத்தால் நமக்கு சாறு மட்டும் கிடைக்கும். இந்த சாரை உங்களுடைய வேர்கால்களில் படும்படி நன்றாக தேய்த்து விட வேண்டும். உங்களுடைய கையாலேயே இந்த சாரை தொட்டு தலையில் தேய்த்துக் கொண்டாலும் சரி அல்லது ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து தலையில் இந்த ஸ்பிரேவை மயிர்கால்களில் படும்படி அடித்துக் கொண்டாலும் சரி, அப்படி இல்லை என்றால் ஒரு பஞ்சில் இந்த சாரை தொட்டு அப்படியே மயிர்கால்களில் படும்படி வைத்து விடுங்கள்.

அதன் பின்பு உங்களுடைய இரண்டு கை விரல்களை தலை முடிக்கு உள்ளே விட்டு விரல்களால் ஸ்கால்ப்பை 5 நிமிடங்கள் மசாஜ் செய்து கொடுங்கள். பிறகு 15 நிமிடம் அப்படியே முடியை கொண்டை கட்டி விட்டு விடுங்கள். அதன் பின்பு மைல்டான ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு உங்களுடைய தலையை அலசிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ரொம்பவும் முடி உதிர்வு உள்ளது என்றால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து 5 முறை இந்த பேக்கை போடும் போது உங்களுடைய முடி உதிர்வதில் வித்தியாசம் தெரியும். முடி வளர்ச்சி வேண்டும் எனக்கு ஓரளவுக்கு தான் முடி உதிர்வு இருக்கிறது என்றால் வாரத்தில் ஒரு நாள் இந்த பேக்கை பயன்படுத்தினால் கூட போதும். முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். முடி கொட்டாமல் அடர்த்தியாக வளரத் தொடங்கும். இதோடு மட்டுமல்லாமல் தலையில் பேன் பொடுகு தொல்லை கூட இருக்காது. உங்களுக்கு இந்த பேக் படிச்சிருந்தா ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

பின்குறிப்பு: இயற்கையான கற்றாழை கிடைத்தால் மிகவும் நல்லது. அதன் ஜெல்லை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி நீங்கள் இருக்கும் இடத்தில் இயற்கையாக  கற்றாழை கிடைக்கவில்லை என்றால் கடையில் வாங்கிய அலோ வேரா ஜெல்லைப் கலர் சேர்க்காமல் வாங்கி பேக் தயார் செய்ய பயன்படுத்திக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை தோலோடு பயன்படுத்தும் போது அதை மண்ணில்லாமல் கழுவி கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -