சீயக்காய் போட்டு தலைக்கு குளிப்பீங்களா? இந்த 4 பொருளையும் சேர்த்து அலசி பாருங்க ஒரு முடி கூட இனி உங்க தலையில் இருந்து உதிராது!

hair-seeyakkai-podi
- Advertisement -

எல்லோருமே தலைமுடிக்கு சீயக்காய் தான் பயன்படுத்துகிறார்கள் என்று கூறி விட முடியாது. ஆனால் சீயக்காய் பயன்படுத்துவது மட்டுமே நம்முடைய தலைமுடிக்கு ரொம்பவும் ஆரோக்கியம் மிக்கது ஆகும். இப்போதெல்லாம் 30 வயதில் இருந்து 40 வயதிற்குள் பாதி அளவிற்கு முடி கொட்டி தீர்ந்து விடுகிறது. இதற்கு காரணம் செயற்கையாக நாம் பயன்படுத்தும் ஷாம்பூக்கள் தான். இதற்கு பதிலாக சீயக்காய் உடன் இந்த நாலு பொருளை சேர்த்து இனி தலைக்கு குளிச்சு பாருங்க, ஒரு முடி கூட கொட்டவே செய்யாது. மீண்டும் நீங்கள் இழந்த முடியை ஆறு மாதத்திற்கு உள்ளேயே மீட்டு விடலாம். தலை முடிக்கு சத்து மிகுந்த சீயக்காய் பேக் என்ன? என்பதை இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

சீயக்காய் தேய்த்து குளித்தால் தலை முடி சுத்தமாவதுடன் அதில் இருக்கும் மூலிகை பொருட்கள் நம்முடைய ஸ்கால்ப் பகுதியில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கி, வறண்ட தன்மையையும் போக்கி ஈர பதத்துடன் வைத்துக் கொள்ளும். இதனால் உங்களுடைய தலை முடி மற்றும் தலை சருமம் எத்தகையதாயினும் சீயக்காய் உங்களுக்கு பொருந்தி விடுகிறது.

- Advertisement -

ஆனால் நீங்கள் ரசாயன கலவை உள்ள ஷாம்புக்கள் வாங்கினால் உங்களுடைய தலைமுடியின் சருமம் எப்படிப்பட்டது? என்பதை அறிந்து அதை பயன்படுத்த வேண்டும். ஆனால் அப்படி யாரும் பயன்படுத்துவது கிடையாது. மேலும் அதை டைரக்டாக தலையில் அப்ளை செய்து உபயோகிக்க கூடாது. தண்ணீர் கலந்து உபயோகிப்பது தான் நல்லது. முதலில் ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சீயக்காய் பவுடரை போட்டுக் கொள்ளுங்கள். வீட்டில் அரைத்து வைத்திருந்தாலும் சரி, கடையில் வாங்கினாலும் சரி பரவாயில்லை. பின்னர் இதனுடன் ரெண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு மருதாணி பவுடரை சேர்க்க வேண்டும். ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெந்தய பவுடரை சேர்க்க வேண்டும்.

இதை நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு நாள் இரவு முழுவதும் ஊற விட்டு விட வேண்டும். மறுநாள் காலையில் ஒரு டேபிள் ஸ்பூன் கெட்டியான தயிருடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றுங்கள். பின்னர் இதை ஒரு பேஸ்ட் போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய தலை முழுவதும் எவ்வளவு பிடிக்குமோ, அந்த அளவிற்கு அடர்த்தியாக அப்ளை செய்து கொள்ளுங்கள். பின்னர் ஏதாவது ஒரு பாலிதீன் கவரைக் கொண்டு தலை முடியை மூடி விடுங்கள்.

- Advertisement -

முக்கால் மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை இதை அப்படியே விட வேண்டும். அதன் பிறகு நீங்கள் மசாஜ் செய்து தலை முடியை மிருதுவாக அலசிக் கொள்ளுங்கள். இந்த பேக் போடும் பொழுது சுடு தண்ணீரை பயன்படுத்தக் கூடாது, அப்புறம் முட்டை தலையிலேயே வெந்துவிடும். மருதாணியில் விட்டமின் சி, விட்டமின் டி, நிக்கோடினிக் அமிலம் போன்ற ஏராளமான புரோட்டீன்களும் நிறைந்துள்ளது. இது நம்முடைய ஸ்கேல்ப் பகுதியை ஈரப்பதத்துடன் எண்ணெய் பிசுக்கு இல்லாமல் வைத்துக் கொள்ளும். இதனால் முடி திக்காகவும், ஸ்ட்ராங்காகவும் மாறும்.

இதையும் படிக்கலாமே:
கடலை மாவுடன் இந்த 1 பொருளை சேர்த்து வாரம் ஒரு முறை மசாஜ் செய்தால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா? இது தெரிஞ்சா இனி பார்லருக்கே போக மாட்டீங்களே!

முடி வலிமை இழப்பதால் தான் வேகமாக கொட்டுகிறது. அதை சரி செய்ய இதை விட சிறந்த பேக் இருக்க முடியாது. முட்டை ரிச் புரோட்டின் நிறைந்தது, இது கண்டிஷனிங் செய்து தலை முடியை டேமேஜிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் தலைமுடியை நன்கு வேகமாக வளர செய்கிறது. தயிர் பளபளப்பாக வைத்துக் கொள்ளவும், சிகைக்காய் பொடுகு தொல்லையிலிருந்து மீட்டு வேர்க்கால்களை வலுவாக்குகிறது. வெந்தயம் பவுடர் தலைமுடியை உதிர்வதில் இருந்து காக்கிறது. இந்த அத்தனை பொருட்களும் ஒன்றாக சேர்ந்து நம்முடைய தலை முடிக்கு சிறந்த ஒரு ஊட்டச்சத்தை கொடுத்து, அபரிமிதமான ஒரு வளர்ச்சியை மீண்டும் மீட்டுக் கொடுக்கிறது.

- Advertisement -