முடி கொட்டும் பிரச்சனை விரைவாக சரியாக நம் பாட்டி சொன்ன வைத்தியத்தை பின்பற்றி பாருங்கள்

hair
- Advertisement -

இப்போது இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவரும் சந்தித்து வரும் ஒரே விதமான பிரச்சனை முடி கொட்டும் பிரச்சனை தான். இவர்கள் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்காக பல நூறு ஆயிரங்களை செலவு செய்வதும் எந்தவித பலனும் கிடைக்காமல் போய்விடுகிறது. அது மட்டுமல்லாமல் நவீன மருத்துவத்தில் நிறைய வேதியல் பொருட்கள் பயன்படுத்தி பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு, விற்கப்படுகின்றன. இவற்றை வாங்கி தடவுவதன் மூலம் இருக்கின்ற முடியையும் இழந்து விடுகின்றனர். அதிகமாக கொட்டும் முடி பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த பல வழிகள் இருக்கின்றன. அப்படி பாட்டி சொன்ன வைத்தியத்தில் ஒரு சிலவற்றை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

டிப்ஸ் – 1
முதலில் அரை மூடி தேங்காயை எடுத்து அதனை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து, ஒரு கப் தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்ந்து நன்றாக கலந்துவிட வேண்டும். இந்த கலவையை தலைமுடியின் வேர்க்கால்கள் படுமாறு தடவி விட வேண்டும்.

- Advertisement -

பின்னர் 20 நிமிடத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். பிறகு தலை முடியை கொண்டை போட்டு கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விட்டு மைல்டான ஷாம்பு தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து செய்துவர முடி கொட்டும் பிரச்சனை தீர்ந்து விடும்.

டிப்ஸ் – 2
முதல் நாள் இரவு ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு மறுநாள் வெந்தயத்தை மிக்ஸியில் சேர்த்து அதனுடன், பிரஷ்ஷான ஐந்து செம்பருத்திப் பூ அல்லது இரண்டு ஸ்பூன் செம்பருத்தி பொடி சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு இந்த பேஸ்ட்டை தலையில் தடவி, இரண்டு மணி நேரத்திற்கு ஊறவைத்து, அதன் பின்னர் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முடி கருகருவென அடர்த்தியாக வளரும்.

- Advertisement -

டிப்ஸ் – 3
முதலில் ஒரு கைப்பிடி மருதாணி இலையை எடுத்து கொள்ளவேண்டும். இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் காய்ச்சிய பசும்பால் அரை கப் சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் ஒரு கைப்பிடி கரிசலாங்கண்ணி இலையையும் சேர்த்து, அனைத்தையும் பேஸ்ட் போன்று அரைத்து, தலையில் தடவி ஒரு மணி நேரத்திற்கு ஊறவைத்து தலைக்கு குளிக்க வேண்டும்.

டிப்ஸ்– 4
பெரிய நெல்லிக்காய் நான்கைகொட்டை இல்லாமல் பொடியாக நறுக்கி மிக்சி ஜாரில் சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு கைப்பிடி மருதாணி இலை மற்றும் ஒரு கைப்பிடி செம்பருத்தி இலை சேர்த்து, பேஸ்ட்டாக அரைத்து தலையில் தடவி, நன்றாக மசாஜ் செய்து, ஒரு மணி நேரத்திற்கு ஊறவைத்து, பின்னர் தலைக்கு குளிக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒரு முறையை வாரத்திற்கு இரண்டு அல்லது ஒரு முறை பயன்படுத்தி வர உங்கள் முடி கொட்டும் பிரச்சனை விரைவாக குறைந்து முடி அடர்த்தியாக வளரும்.

- Advertisement -