முடி வளர வெற்றிலை ஹேர் மாஸ்க்

lady betel leaf
- Advertisement -

இன்றைய தலைமுறையினர் தலைமுடி சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகளை பெருமளவு எதிர்கொள்கிறார்கள். இதற்கு காரணம் மோசமான சூழ்நிலைகளும், ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களும் தான். மேலும் சரியான பராமரிப்பு இன்மையாலும் முடி உதிர்வு நரைமுடி போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

இதற்கு இது மட்டுமல்லாது போதிய ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்வது, மன அழுத்தம், ஹார்மோன்களின் சமநிலை இன்மை போன்ற பல்வேறு காரணங்களும் இந்த முடி தொடர்பான பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது. இந்தப் பிரச்சினைகளை சரி செய்ய நாம் கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் கலந்த பல்வேறு ஷாம்புகளை பயன்படுத்துகிறோம்.

- Advertisement -

இதனால் முடி பலப்படுவதற்கு பதிலாக சேதம் அடைகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதை தவிர்க்க வேண்டும் எனில் இயற்கையான முறையில் முடி வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும். அதே சமயம் அது ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். அப்படி ஒரு ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு தேவையான ஒரு ஹேர் மாஸ்க் பற்றி தான் அழகு குறிப்பு குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

முடி வளர்ச்சிக்கு வெற்றிலை

வெற்றிலைக்கு இயற்கையாகவே குளிர்ச்சியான தன்மை உண்டு. இதில் நிறைந்துள்ள பாலில்ஃபினால் என்ற சத்து பூஞ்சை எதிர்ப்பும் கிருமி நாசினிகள் போன்றவற்றை தடுக்கவும் பயன்படுகிறது அது மட்டுமின்றி தலைகளில் ஏற்படும் அரிப்பு, தொற்று கிருமிகள் போன்றவற்றிலிருந்தும் காக்கிறது. குறிப்பாக சாவிக்கோல் என்ற கரிம சேர்மம் கிருமியிலிருந்து தலை முடியை பாதுகாக்கும்.

- Advertisement -

இந்த வெற்றிலையில் அலர்ஜி எதிர்ப்பு தன்மை நிறைந்துள்ளது. இதனால் இது முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை இயற்கையான முறையில் மேம்படுத்துகிறது. இதில் நிறைந்துள்ள பாக்டீரியாக்கள் எதிர்ப்பு தன்மை நோய் தொற்று போன்றவற்றை தடுப்பதால், இது ஒரு இயற்கையான ஹேர் மாஸ்காக பயன்படுத்துவதில் சிறந்த பலனை பெற முடியும்

முடி வளர வெற்றிலை ஹேர் மார்க்ஸ் தயாரிப்பது எப்படி?

இந்த மாஸ் தயாரிக்க நமக்கு 10 முதல் 20 வெற்றிலைகள் தேவைப்படும். அது உங்கள் முடியும் அளவிற்கு ஏற்றார் போல் எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் சேர்க்க மூன்று டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் ஒரு டீஸ்பூன் தேனையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது வெற்றிலையை நன்றாக சுத்தம் செய்து அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பேஸ்ட்டான பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றுங்கள். இந்த தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது அரைத்து வைத்த வெற்றிலை விழுதை அதில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடுங்கள்.

அதன் பிறகு தேன் மற்றும் நெய் சேர்த்து நல்ல ஒரு கெட்டியான பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை கிண்டி அதன் பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். இது சிறிது நேரம் அப்படியே சூடு ஆறட்டும். இந்த பேஸ்ட் நன்றாக ஆறிய பிறகு உங்கள் உச்சந்தலையில் இருந்து அடி முடி வரை நன்றாக தடவி கொள்ளுங்கள். அதன் பிறகு ஐந்து நிமிடம் வரை நன்றாக மசாஜ் செய்து கொடுக்க வேண்டும்.

இவையெல்லாம் செய்த பிறகு அரை மணி நேரம் வரை இந்த மாஸ்க் உங்கள் தலையில் அப்படியே இருக்கட்டும். அதன் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் மயில்டான ஷாம்பு அல்லது சீயக்காய் சேர்த்து தலை முடியை அலசி விடுங்கள். இந்த பேக்கை வாரம் ஒரு முறை பயன்படுத்தினால் கூட போதும் ஆரோக்கியமான முடி வளர்ச்சி பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: இரவு நேர சரும பராமரிப்பு

அதுமட்டுமின்றி இது முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்லதொரு தீர்வாக இருக்கும். அதுவும் எந்த விதமான கெமிக்கல் கேடுகள் இல்லாமல் கிடைக்கும் என்பது தான் இதில் முக்கியமானது. இந்த வெற்றிலை மாஸ்க் முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இதை பயன்படுத்தி நல்ல பலன் பெறலாம்.

- Advertisement -