தலை முடியை அடர்த்தியாக வளரச் செய்ய உதவும் எண்ணெய்

homemade hair oil
- Advertisement -

தலைமுடி உதிர்தல் என்பது அனைத்து தரப்பு மக்களாலும் எந்தவித பாகுபாடும் இன்றி சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக திகழ்கிறது. தலைமுடி உதிர்தல் என்பது ஏற்பட ஆரம்பித்ததும் அதற்குரிய காரணங்களை கண்டறிந்து சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் வழுக்கை விடுவதற்கு கூட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் நீங்குவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான எண்ணையைப் பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

தலைக்கு தேய்க்க கூடிய எண்ணெயை நாம் பல வகைகளில் தயார் செய்து கொள்ளலாம். இந்த தேங்காய் எண்ணெயில் சேர்க்கக்கூடிய ஒவ்வொரு வகையான பொருளுக்கும் ஒவ்வொரு விதமான மருத்துவ குணம் இருக்கிறது என்பதால் பலரும் பல பொருட்களை சேர்த்து தேங்காய் எண்ணெயை தயார் செய்து தலைக்கு தேய்க்கும் பழக்கம் இருக்கும். அப்படி தயார் செய்து தேய்த்த பிறகும் தலைமுடி பிரச்சனைகள் தீரவில்லை முடி உதிர்தல் நிற்கவில்லை முடி ஆரோக்கியமாக வளரவில்லை என்று கவலைப்படுபவர்கள் இந்த ஒரு தேங்காய் எண்ணெயை உபயோகப்படுத்தி பார்க்கலாம்.

- Advertisement -

இந்த தேங்காய் எண்ணெயை தயார் செய்வதற்கு நமக்கு அரை லிட்டர் செக்கிலாட்டிய நல்லெண்ணெய் தேவைப்படும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து இந்த நல்லெண்ணையை ஊற்றி நல்லெண்ணெய் சூடானதும் அதில் தேங்காய் நார் ஒரு கைப்பிடி அளவு போட வேண்டும். தேங்காய் நார் நன்றாக பொரிந்த பிறகு அதில் ஒரு சின்ன வெங்காயத்தை நறுக்கி போட வேண்டும்.

சின்ன வெங்காயமும் நன்றாக பொரிந்த பிறகு ஒரு கைப்பிடி அளவு வெட்டிவேரை சேர்க்க வேண்டும். வெட்டிவேரும் நன்றாக சிவந்த பிறகு ஒரு கைப்பிடி அளவிற்கு ஆவாரம் பூவை சேர்க்க வேண்டும். ஆவாரம் பூ சிவந்த பிறகு கார்போக அரிசி 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து அதையும் நன்றாக சிவக்க விட வேண்டும். இப்படி அனைத்து பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு சிவந்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும்.

- Advertisement -

இந்த எண்ணெய் சூடு முற்றிலும் ஆரியபிறகு இதனுடன் அரை லிட்டர் செக்கிலாட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெயை சேர்க்க வேண்டும். பிறகு இந்த எண்ணையை மூன்று நாட்கள் வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். மூன்று நாட்கள் கழித்து தான் இந்த எண்ணையை தலையில் தேய்க்க வேண்டும். இதில் நாம் சேர்க்கக்கூடிய தேங்காய் நாரும் வெட்டிவேரும் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு அளவு என்பது கிடையாது.

இந்த தேங்காய் எண்ணெயை நாம் தினமும் நம்முடைய தலையில் தேய்த்துவர வலுவிழந்த முடிகள் அனைத்தும் உதிர்ந்து உறுதியான புது முடிகள் வளர ஆரம்பிக்கும். இந்த எண்ணெயை தேய்த்தவுடன் அதிக அளவு முடி உதிர்கிறது என்று நினைக்காமல் வலுவிழந்த முடிகள் அனைத்தும் வந்துவிட்டது. என்று நினைக்க வேண்டும். தொடர்ச்சியாக 30 நாட்கள் இந்த எண்ணையை உபயோகப்படுத்துவதன் மூலம் வலுவிழந்த முடிகள் அனைத்தும் நம்மிடமிருந்து விலகிவிடும். அதே சமயம் புதிய முடிகளும் வளர ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: பத்து நிமிடத்தில் முகம் ஜொலிக்க

மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை மட்டுமே வைத்து இந்த தேங்காய் எண்ணெயை தயார் செய்து தொடர்ச்சியாக நம் தலைக்கு தேய்த்து நம் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொள்வோம்.

- Advertisement -