- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilவாரம் ஒரு முறை இந்த தண்ணீரில் தலைமுடியை அலசி வந்தால், முடி திக்காகவும், அடர்த்தியாகவும் வலிமையாகவும்...

வாரம் ஒரு முறை இந்த தண்ணீரில் தலைமுடியை அலசி வந்தால், முடி திக்காகவும், அடர்த்தியாகவும் வலிமையாகவும் ஷைனிங்காகவும் வளரும். உங்க முடி செம்ம அழகா மாற சூப்பர் ஐடியாங்க!

- Advertisement -

முடியை போஷாக்காக வளர்ப்பதற்கு ஒரு புது ஐடியாவை தான் இந்த அழகு குறிப்பில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ரொம்ப ரொம்ப சுலபமான முறையில் செலவு இல்லாத ஐடியா இது. இந்த குறிப்புக்கு நமக்கு செம்பருத்திப்பூ, செம்பருத்தி இலை, இந்த இரண்டு பொருட்கள் தேவை. உங்களுடைய முடியின் அளவுக்கு ஏற்ப இந்த இரண்டு பொருட்களை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்த மெத்தடை முயற்சி செய்து பாருங்கள். இந்த மெத்தடில் உங்களுடைய தலைமுடியை அலசி பாருங்கள். முடிக்கு நல்ல வலிமையும் உறுதியும் கிடைக்கும். முடி உதிர்வு நிற்கும். (ஒவ்வொரு முடியும் திக்காக மாறும். மொத்தமாக முடி சேரும் போது அப்போதுதான் அடர்த்தியாக தெரியும்.) டிரையாக இருக்கக்கூடிய உங்க கூந்தல் ஒரு சில நாட்களிலேயே சில்க்கியாக சைனிங்காக மாறிவிடும். வாங்க நேரத்தை கலக்காமல் அழகு குறிப்புக்கு செல்வோம்.

முடியை ஷைனிங்காக மாற்ற எளிமையான அழகு குறிப்பு:
15ல் இருந்து 20 செம்பருத்தி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். 7 லிருந்து 10 சிவப்பு நிற நாட்டு செம்பருத்தி பூ எடுத்துக் கொள்ளுங்கள். (ஒற்றை செம்பருத்தி பூ) பூ வில் இதழ்களை மட்டும் தனியாக பிரித்து விட வேண்டும். அந்த மகரந்தமும் காம்பும் நமக்கு தேவை கிடையாது.

- Advertisement -

இரண்டு லிட்டர் அளவு தண்ணீரில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் இந்த பூவையும் இலையையும் உங்கள் கையாலேயே கிழித்து போடலாம், அல்லது கசக்கி போடலாம். தண்ணீரில் இந்த இரண்டு பொருட்களையும் போட்டு உங்கள் கைகளை வைத்து நன்றாக கசக்கி நசுக்கி பிசைய வேண்டும். இந்த செம்பருத்தி பூ இலையிலும் பூவிலும் இருக்கக்கூடிய கொழ கொழப்பு தன்மை அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்க வேண்டும். உதாரணத்திற்கு குழம்புக்கு புளி கரைப்பது போல கரைக்க வேண்டும். இதற்கு ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் நிச்சயம் எடுக்கும்.

சில பேர் யோசிக்கலாம் இதற்கு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி இதை தண்ணீரில் கலக்கலாமே என்று. அப்படி செய்தால் அந்த இலையில் பூவில் இருக்கும் முழுமையான சத்து நமக்கு கிடைக்காமல் போய்விடும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் உங்கள் கையாலேயே அதை நன்றாக பிசைந்து கொடுங்கள். தண்ணீர் கொழ கொழப்பு தன்மை வந்து நிறம் மாறி வந்ததும் இதை ஒரு காட்டன் துணியில் ஊற்றி வடிகட்டி உங்கள் கையை கொண்டு பிழிந்து எடுத்தால் கொழ கொழப்பாக ஒரு தண்ணீர் கிடைத்திருக்கும் அல்லவா. இந்த தண்ணீரில் தான் தலையை அலச வேண்டும்.

- Advertisement -

தலையில் எண்ணெய் இருக்க வேண்டும் என்று அவசியம் கூட தேவை கிடையாது. சுத்தமாக தலைக்கு குளித்துவிட்டு அழுக்கு இல்லாத தலைமுடியில், இந்த தண்ணீரை இறுதியாக ஊற்றி நன்றாக எல்லா இடங்களிலும் படும்படி அலசிவிடுங்கள். ஒரு ஐந்து நிமிடம் இந்த தண்ணீர் உங்கள் தலையிலேயே இருக்கட்டும். பிறகு நல்ல தண்ணீரை ஊற்றி அலசி குளித்து விடுங்கள். அவ்வளவுதாங்க உங்களுடைய தலைமுடியை ஈரம் போக துடைத்து காயவைத்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: உங்க உடம்பு இப்படி இருந்தா கண்டிப்பா முடி உதிரும்! இப்படி உதிர்ந்த முடியை ஒரே மாதத்தில் மீண்டும் நன்கு வளர செய்ய இதை செய்தால் போதுமா?

ஒரு வாஷிலேயே தலைமுடி அவ்வளவு சில்க்கியாக மாறி இருக்கும். டிரையாக இருக்கும் உங்கள் முடி சைனிங்காக மாறி இருக்கும். அதே சமயம் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து, உங்கள் முடி திக்காக வளர தொடங்கும். வாரம் ஒரு முறை தொடர்ந்து இந்த தண்ணீரில் தலையை முடியை அலசி வந்தால் நம்ப முடியாத மாற்றத்தை தலைமுடியில் பார்க்கலாம். அழகு குறிப்பு பிடிச்சவங்க முயற்சி செய்து பார்க்கவும்.

சற்று முன்