24 மணி நேரமும் உங்களுடைய முடியை வளர்த்து விடுவதற்கான வேலையை இந்த ஒரு டோனர் செய்யும். இனி தலையிலிருந்து முடி கொட்டுமோ என்ற பயமே இருக்காது.

hair16
- Advertisement -

பெரிய அளவில் கஷ்டப்பட்டு ஹேர்பேக் போட முடியாது. ஹேர் பேக் போட்ட பிறகு தலையை கசக்கி அலசவும் நேரம் கிடையாது.  ரொம்ப ரொம்ப சுலபமாக, அதாவது இந்த டோனரை யூஸ் செய்த பிறகு தலைக்கு கூட குளிக்க வேண்டிய அவசியம் இருக்க கூடாது. அப்படி ஏதாவது சோம்பேறித்தனமான அழகு குறிப்பை சொல்ல முடியுமா என்று கேட்பவர்களுக்காக இந்த குறிப்பு. நீங்க ரொம்ப பிசியான வேலையில் இருக்கிறீங்க. வீட்டு வேலையையும் வெளிவேளையும் கவனித்துக் கொள்ளும் அளவிற்கு உங்களுக்கு நேரமில்லை என்பவர்கள் கூட ஐந்து நிமிடம் நேரம் கிடைத்தாலும் இந்த டோனரை தலையில் ஸ்பிரே செய்து தலைமுடியை வளர்க்கத் தொடங்கி விடலாம். 24 மணி நேரமும் இந்த டோனர் உங்களுடைய வேர்க்கால்களில் தங்கி வேலை செய்யும். வாங்க அந்த சுலபமான டோனரை எப்படி தயார் செய்வது, எப்படி அப்ளை செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.

முடிக்கு ஊட்டச்சத்து தரும் ஹேர் டோனர் செய்முறை:
ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் வெந்தயம் 1/4 ஸ்பூன், கருஞ்சீரகம் 1/4 ஸ்பூன், கருவேப்பிலை 2 கொத்து போடவும். கருவேப்பிலையை சின்ன சின்ன துண்டுகளாக கையாலேயே கிழித்துப் போட்டுக் கொள்ளுங்கள். இப்போது 1 பெரிய டம்ளர் அளவு தண்ணீரை இதில் ஊற்றவும்.

- Advertisement -

இதோடு இறுதியாக நாம் சூப்பரான ஒரு பொருள் சேர்க்கப் போகின்றோம். ஃபிளாக் சீட்ஸ் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் கொதிக்க வேண்டும். ஆனால் இந்தத் தண்ணீர் ரொம்பவும் திக்காக கொழ கொழப்பாக வரக்கூடாது. அந்த அளவுக்கு கொஞ்சம் கூடுதலாக தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள்.

ஏனென்றால், இதை நாம் டோனராக பயன்படுத்த போகின்றோம். நிறைய ஃபிளாக் சீட் போட்டு தண்ணீரை கொஞ்சமாக ஊற்றினால் தண்ணீர் கொழகொழப்பாக மாறிவிடும். பிறகு அது டோனராக இருக்காது. ஹேர்பேக்காக இருக்கும். ஆகவே தண்ணீர் கொழகொழப்பு தன்மை வராத அளவுக்கு பிளாக் சீட்  சேர்த்து இந்த தண்ணீரை கொதிக்க விட்டு சூடாக இருக்கும் போதே வடிகட்டி விடுங்கள். பிறகு இந்த தண்ணீரை ஆற வைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். இதை அப்படியே பிரிட்ஜிலும் ஸ்டோர் செய்யலாம். ஏழு நாட்கள் வரை பயன்படுத்தலாம். தினமும் இந்த டோழரை தலைக்கு ஸ்பிரே செய்யலாம்.

- Advertisement -

ஆனால் பிரிட்ஜில் இருந்து எடுத்து வெளியே கொஞ்ச நேரம் வைத்து விட வேண்டும். டோனர், ரூம் டெம்பரேச்சர்க்கு வந்த பிறகுதான் தலையில் ஸ்பிரே செய்ய வேண்டும். எண்ணெய் இருக்கும் முடி, எண்ணெய் இல்லாத முடி எப்படியாக இருக்கட்டும் இந்த டோனரை உங்களுடைய தலையில் ஸ்பிரே செய்யுங்கள். முடியை பாகம் பாகங்களாக பிரித்து வேர்க்கால்களில் படும்படி இந்த டோனரை ஸ்பிரே செய்து ஐந்து நிமிடம் மசாஜ் செய்யுங்கள். பிறகு நுனி முடி வரை கூட இந்த டோனரை ஸ்பிரே செய்யலாம். உங்களுடைய முடிவில் இருக்கும் வறட்ச்சி தன்மையை நீக்கும். வெடிப்பை நீக்கி முடியை சீராக வளர செய்யும்‌.

இதையும் படிக்கலாமே: ஒரே மாதத்தில் மண்டை தெரியாமல் நெருக்க நெருக்கமாக முடி அடர்த்தியாக வளர, இந்த ஒரே ஒரு ஹர்பேக் போதும்.

இந்த டோனரை அப்ளை செய்துவிட்டு 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். 20 நிமிடம் கழித்தும் உங்களுடைய தலையில் கொஞ்சம் ஈரம் இருக்கும் அல்லவா. அப்போது ஃபேன் காற்றில் தலையை நன்றாக காய வைத்துக்கொண்டு, தலையை சீவி எப்போதும் போல பின்னிக் கொள்ளலாம். இந்த டோனரி அப்ளை செய்த பிறகு தலைக்குத்தான் குளிக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள், மூன்று மாதம் இந்த டோனரை தலைமுடியில் அப்ளை செய்து விர உங்களுடைய முடி 24 மணி நேரமும் வளர்ந்து கொண்டே இருக்கும். அழகு குறிப்பு பிடித்தவர்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

- Advertisement -