ஒரே மாதத்தில் மண்டை தெரியாமல் நெருக்க நெருக்கமாக முடி அடர்த்தியாக வளர, இந்த ஒரே ஒரு ஹர்பேக் போதும்.

egg-hair-pack-tamil
- Advertisement -

மண்டையில் முடி நெருக்க நெருக்கமாக வளரவில்லை. நிறைய இடத்தில் முடி உதிர்ந்ததால், சொட்டை சொட்டையாக ஆங்காங்கே தெரிகிறது என்பவர்கள் கொஞ்சம் சிரமப்படாமல் பின் சொல்லக்கூடிய இந்த ஹேர் பேக்கை முயற்சி செய்து பார்க்கவும். இந்த ஹேர் பேக்கை போட தொடங்கிய ஒரு மாதத்தில் உங்களுடைய முடி உதிர்வு பிரச்சனை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். பிறகு மூன்றே மாதத்தில் மண்டை தெரியாத அளவிற்கு அடர்த்தியாக முடி வளர தொடங்கிவிடும். வாங்க எளிமையான முடி வளர்ச்சி தரும் ஹேர் பேக்கை எப்படி தயார் செய்வது என்று பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

ஊட்டச்சத்தோடு முடியை வளர்க்க ஹேர் பேக்:
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முட்டையின் வெள்ளை கரு சேர்க்கவும். ஒரு முட்டையோ இரண்டு முட்டையோ உங்கள் முடியின் அளவுக்கு ஏற்ப வெள்ளை கருவை ஊற்றிக் கொள்ளுங்கள். பவுலில் ஒரு முட்டையின் வெள்ளை கருவை சேர்த்தால், 1 Evion விட்டமின் E கேப்ஸ்யூல் உள்ளே இருக்கும் லிக்விட் சேர்க்கவும். தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன், ஆலிவ் ஆயில் 1 ஸ்பூன், சேர்த்து இந்த 3 பொருட்களையும் நன்றாக அடித்து முதலில் கலக்கி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது இதில் நாம் ஒரு சத்தான சாறு சேர்க்க போகின்றோம். வல்லாரை கீரை சாறு. கீரை கடைக்காரரிடம் சொன்னாலே இந்த கீரை சுலபமாக கிடைத்துவிடும். வாங்கிய கீரையை சுத்தமாக முதலில் கழுவி விடுங்கள். தண்ணீரை வடிகட்டி விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டினால் பச்சை நிறத்தில் ஒரு சாறு கிடைக்கும். அதை எடுத்து ஏற்கனவே நாம் முட்டையில் ஹேர் பேக் தயார் செய்து வைத்திருக்கிறோம் அல்லவா, அதில் ஊற்றி கலக்கவும்.

இந்த ஹேர் பேக்கை தான் தலையில் அப்ளை செய்ய வேண்டும். தலையில் முதலில் நன்றாக தேங்காய் எண்ணெய் வைத்துவிட்டு சிக்கு எடுத்து விடுங்கள். பிறகு இந்த ஹேர் பேக்கை ஸ்கேல்பில் படும்படி நன்றாக தடவ வேண்டும். கொஞ்சம் கவனம் எடுத்து வேர்க்கால்களில் படும்படி இந்த பேக்கை தடவி, மீதம் இருக்கும் ஹேர் பேக்கை முடியின் நுனி வரை தடவி, 1 மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும்.

- Advertisement -

வாரம் ஒரு முறை இந்த ஹேர் பேக்கை போட்டு வந்தால் உங்களுடைய முடி போஷாக்காக வளரத் தொடங்கும். முடி உதிர்ந்த இடத்தில், மீண்டும் முடி வளராமல், தாமதமானால் அந்த இடத்தில் முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய வேலையை இந்த ஹேர் பேக் நிச்சயம் செய்யும்.

இதையும் படிக்கலாமே: தலைமுடிக்கு வெந்தயம் சேர்த்தால் சளி பிடிக்கிறதா? அப்படின்னா வெந்தய கீரையை இப்படி சேர்த்து பாருங்கள் காடு மாறி உங்க முடி கருகருன்னு அடர்த்தியாக வளருமே!

வழக்கம்போல சொல்லுவது தான். எப்போதும் ஹேர் பேக் போடுவதோடு நிறுத்தி விடாதீர்கள். உங்களுடைய உடம்புக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய பொருட்களை தினமும் சாப்பிட்டு வர வேண்டும். காய்கறிகள், கீரை வகைகள், பழ வகைகள், நட்ஸ் வகைகள் என்று ஊட்டச்சத்து கிடைக்கக்கூடிய பொருட்களை எல்லாம் தொடர்ந்து சாப்பிட்டு வர நிச்சயம் முடி அடர்த்தியாக வளரும்.

- Advertisement -